இவர் தான் இந்தியாவின் எதிர்காலம், சுப்மன் கில் பற்றி 2 வருடத்துக்கு முன்பே கணித்த ரோஹித் சர்மா – வைரல் பதிவு

- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக ஹைதராபாத் நகரில் நடைபெற்ற இத்தொடரின் முதல் போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி, சூரியகுமார் யாதவ் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் நியூசிலாந்தின் தரமான பந்து வீச்சில் 40 ரன்கள் கூட தாண்டாத நிலையில் தொடக்க வீரராக களமிறங்கி கடைசி ஓவர் வரை நிலைத்து நின்று அதிரடியாக விளையாடிய சுப்மன் கில் 19 பவுண்டரி 9 சிக்ஸருடன் 208 (149) ரன்கள் விளாசி இந்தியா 350/8 ரன்கள் குவிக்க முக்கிய பங்காற்றினார்.

இறுதியில் மைக்கல் பிரேஸ்வெல் அதிரடி சதத்தால் வெற்றிக்கு போராடிய நியூசிலாந்து கடைசி ஓவரில் தோற்றது. அதனால் சந்தேகமின்றி அந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சுப்மன் கில் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அவர் இந்தியாவுக்காக விளையாடும் லட்சியத்துடன் பள்ளி பருவத்திலிருந்தே கிரிக்கெட்டில் விளையாட துவங்கி அசத்தலாக செயல்பட்டார். அதனால் 2018ஆம் ஆண்டு நியூசிலாந்து மண்ணில் நடைபெற்ற ஐசிசி அண்டர்-19 உலகக்கோப்பையில் தேர்வான அவர் 372 ரன்கள் விளாசி இந்தியா கோப்பை வெல்வதற்கு முக்கிய பங்காற்றி தொடர் நாயகன் விருது வென்று சாதனை படைத்தார்.

- Advertisement -

அன்றே கணித்த ரோஹித்:
அதனால் 2019 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக தேர்வான அவர் அங்கேயும் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி “சிறந்த வளரும் வீரர்” என்ற விருதை வாங்கி சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அறிமுகமானார். ஆரம்பத்தில் சுமாரான செயல்பாடுகள் மற்றும் காயம் காரணமாக வெளியேறிய அவர் 2021இல் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா பதிவு செய்த மறக்க முடியாத காபா வெற்றியில் 2வது இன்னிங்ஸ்சில் 91 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றினார். அதன் பின் சீனியர்களின் வருகையால் இடத்தை இழந்த அவர் 2022 ஐபிஎல் தொடரில் முதல் வருடத்திலேயே குஜராத் கோப்பை வெல்லும் அளவுக்கு அதிக ரன்கள் குவித்து அசத்தியதால் மீண்டும் இந்திய அணியில் கம்பேக் கொடுத்தார்.

அதில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற அடுத்தடுத்த ஒருநாள் தொடர்களில் தொடர் நாயகன் விருது வென்று இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றிய அவர் கடந்த டிசம்பரில் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் முதல் முறையாக சதமடித்து அசத்தினார். இருப்பினும் இரட்டை சதமடித்த இசான் கிசானுக்கு பதில் இலங்கைத் தொடரில் வாய்ப்பு பெற்ற அவர் விமர்சனங்களை சந்தித்தார். ஆனால் அந்தத் தொடரில் ரோஹித் சர்மாவுடன் இணைந்து அதிரடி தொடக்கத்தை கொடுத்து கடைசி போட்டியில் சதமடித்த அவர் தற்போது இரட்டை சதமும் அடித்து இஷான் கிஷானுக்கு எந்த வகையிலும் குறைந்தவன் அல்ல என்பதை நிரூபித்துள்ளார்.

- Advertisement -

அதை விட தொடர்ச்சியாக அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பெரிய ரன்களை குவிக்கும் அவர் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரது வரிசையில் இந்திய பேட்டிங் துறையின் வருங்கால சூப்பர் ஸ்டாராக அவதரித்துள்ளதாக இப்போதே நிறைய கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டுகிறார்கள். இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு “ஃபுல் ஷாட் அடிப்பதில் உங்களை விட சிறந்தவர் யாரும் இருக்க முடியாது ஹிட்மேன்” என்று ரோகித் சர்மாவை அவரது பிறந்தநாளில் சுப்மன் கில் பாராட்டி ட்வீட் போட்டிருந்தார்.

அதற்கு “நன்றி எதிர்காலமே” என்று பதிலளித்த ரோகித் சர்மாவின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் ரசிகர்கள் “அன்றே கணித்தார் ரோஹித் சர்மா” என்று இருவரையும் பாராட்டுகிறார்கள். முன்னதாக ஹைதராபாத் நகரில் நடைபெற்ற போட்டியில் 208 ரன்களை விளாசிய சுப்மன் கில்லுக்கு அடுத்த சிறந்த ஸ்கோராக கேப்டன் ரோகித் சர்மா வெறும் 34 ரன்கள் அடித்திருந்தார்.

இதையும் படிங்க: ஐ.சி.சி பவுலிங் தரவரிசையில் உச்சம் தொட்ட முகமது சிராஜ். எல்லாரும் சொன்னது உண்மைதான் – விவரம் இதோ

அது தான் அவருடைய பேட்டிங்கின் தரத்திற்கு சான்று என்று அப்போட்டியின் முடிவில் ரோகித் சர்மா பாராட்டியிருந்தார். முன்னதாக சூரியகுமார் யாதவும் வருங்காலத்தில் பெரிய அளவில் வருவார் என்று ஆரம்ப காலத்தில் ஐபிஎல் தொடரில் விளையாடும் போதே இதே போல் ரோஹித் சர்மா கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement