ஐ.சி.சி பவுலிங் தரவரிசையில் உச்சம் தொட்ட முகமது சிராஜ். எல்லாரும் சொன்னது உண்மைதான் – விவரம் இதோ

Siraj
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் கடந்த சில ஆண்டுகளாகவே தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் நல்ல வளர்ச்சியை பெற்று வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமாகிய முகமது சிராஜ் அந்த தொடரில் தனது சிறப்பான செயல்பாடுகள் காரணமாக அந்த ஆண்டே இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆனால் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானாலும் ஒரு சில போட்டிகளுக்கு பின்னர் அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட சிராஜ் மீண்டும் இந்திய அணியில் இணையும் வாய்ப்பு கிடைக்காமலே இருந்தார்.

Siraj 2

- Advertisement -

அதன் பிறகு கடைசியாக 2020-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அறிமுகமான முகமது சிராஜ் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் இன்றி இளம் பவுலர்களை கொண்ட அந்த அணியை தலைமை தாங்கி மிகச் சிறப்பாக ஆஸ்திரேலியா ஆடுகளத்தில் சிறப்பாக பந்துவீசி தனது திறமையை நிரூபித்தார். அந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு பின்னர் தொடர்ச்சியாக தனது அற்புதமான பந்து வீச்சினால் அசர வைத்து வரும் முகமது சிராஜ் இன்று இந்திய அணியின் முன்னணி வீரராக வளர்ந்து நிற்கிறார்.

தற்போது அடுத்தடுத்து தொடர்ச்சியான போட்டிகளில் விளையாடி வரும் அவரது சிறப்பான செயல்பாடு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. அவர்கள் இருவருமே வெளிப்படையாக முகமது சிராஜ் தற்போது அருமையான பார்மில் இருப்பதாகவும் நிச்சயம் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் இந்திய அணியின் சிறப்பான பவுலராக தற்போது உருவெடுத்துள்ளார் என்று மனதார பாராட்டி இருந்தனர்.

Siraj 1

அதன்படி நடைபெற்று முடிந்த இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் 9 விக்கெட்டுகளை கைப்பற்றிய வேளையில் அவருக்கு தொடர் நாயகன் விருதினை வழங்கி இருக்க வேண்டும் என கம்பீரும் ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் அவர் முதலாவது ஒருநாள் போட்டியில் நான்கு விக்கெடுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார்.

- Advertisement -

இப்படி தொடர்ச்சியாக பந்துவீச்சில் பட்டையை கிளப்பி வரும் முகமது சிராஜ் தற்போது ஐசிசி வெளியிட்டுள்ள பவுலர்கள் தரவரிசை பட்டியலிலும் உச்சத்தை தொட்டுள்ளார். அதன்படி அவ்வப்போது நடைபெற்று முடியும் தொடர்களுக்கு மத்தியில் ஐசிசி எப்பொழுதுமே வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ஐசிசி தரவரிசை பட்டியலில் ஒருநாள் போட்டிகளுக்கான பவுலர்கள் தரவரிசை பட்டியலில் பந்துவீச்சாளர்களின் பிரிவில் நியூசிலாந்து வீரர் ட்ரென்ட் போல்ட் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா வீரர் ஹேசல்வுட் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றனர்.

இதையும் படிங்க : அதுல மட்டும் சூரியகுமார் என்னை ஏமாத்திகிட்டே இருக்காரு, அவரோட வீக்னெஸ் அது தான் – முகமது கைஃப் ஆதங்கம்

அவர்களை இருவரை தொடர்ந்து இந்திய வீரரான முகமது சிராஜ் தனது கரியரின் உச்சமான மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் முகமது சிராஜ் நிச்சயம் இடம் பிடிப்பார் என்று அனைவராலும் பேசப்பட்டு வரும் வேளையில் தற்போது தரவரிசை பட்டியலிலும் அவர் முன்னேற்றம் கண்டுள்ளதால் நிச்சயம் இது இந்திய அணிக்கு பெரிய பலமான விடயமாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement