சூப்பர்மேன் கேட்ச், ஒரே ஓவரில் 32 ரன்கள் – தனி ஒருவனாக திண்டுக்கலை நொறுக்கிய நெல்லையின் ஈஸ்வரன்

TNPL Rithik Eswaran
- Advertisement -

தமிழகத்தில் நடைபெற்று வரும் டிஎன்பிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதில் 28 போட்டிகள் கொண்ட லீக் சுற்றின் முடிவில் நடப்பு சாம்பியன் கோவை, திண்டுக்கல், நெல்லை மற்றும் மதுரை ஆகிய அணிகள் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து. அதைத்தொடர்ந்து நடைபெற்ற பிளே ஆப் சுற்றில் குவாலிபயர் 1 போட்டியில் கோவையிடம் தோல்வியை சந்தித்த திண்டுக்கல் அணியை எலிமினேட்டரில் மதுரையை வீட்டுக்கு அனுப்பி வைத்த நெல்லை ஜூலை 10ஆம் தேதி நடைபெற்ற குவாலிபயர் 2 போட்டியில் எதிர்கொண்டது.

திருநெல்வேலியில் இருக்கும் இந்தியா சிமெண்ட் கம்பெனி மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற நெல்லை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய திண்டுக்கல் 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 185/5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் சிவம் சிங் 4 பவுண்டரி 6 சிக்ஸருடன் 76 (46) ரன்களும் பூபதி குமார் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 41 (18) ரன்களும் எடுக்க நெல்லை சார்பில் அதிகபட்சமாக சோனு யாதவ் 2 விக்கெட்டுகள் சாய்த்தார்.

- Advertisement -

வெற்றியை பறித்த ஈஸ்வரன்:
அதைத் தொடர்ந்து 186 ரன்களை துரத்திய நெல்லைக்கு கேப்டன் அருண் கார்த்திக் அதிரடியாக விளையாட முயற்சித்து 26 (15) ரன்களிலும் இம்பேக்ட் வீரராக விளையாடிய சுகேந்திரன் தடுமாறி 22 (24) ரன்களிலும் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். இருப்பினும் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அஜித்தேஷ் குருசாமி அதிரடியாக விளையாடிய நிலையில் எதிர்ப்புறம் 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போதிலும் தடுமாற்றமாக விளையாடிய நிதீஷ் ராஜகோபால் 26 (27) ரன்கள் எடுத்து அழுத்தத்தை கொடுத்தார். அதனால் அணியின் நலனுக்காக ரிட்டயர் அவுட்டாகி சென்ற அவருக்கு அடுத்தபடியாக வந்த ஈஸ்வரன் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெற்றிக்கு போராடினார்.

குறிப்பாக கிஷோர் வீசிய 19வது ஓவரில் வெற்றிக்கு 37 ரன்கள் தேவை என்ற அசாத்தியமற்ற சூழ்நிலையில் முதல் பந்தில் நேராக சிக்ஸரை பறக்க விட்ட அவர் 2வது பந்திலும் லாங் ஆன் திசையில் அட்டகாசமான சிக்ஸரை அடித்து 3வது பந்தில் கவர்ஸ் திசையில் மிரட்டலான சிக்சரை விளாசினார். அப்படி ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்த அவர் அடுத்த பந்தில் சிங்கிள் எடுத்த நிலையில் 5வது பந்தில் மறுபுறம் நின்ற குருசாமி தனது பங்கிற்கு சிக்சர் அடித்ததால் பதற்றமடைந்த கிஷோர் கடைசி பந்தில் நோபால் வீசினார்.

- Advertisement -

அதில் குருசாமி சிங்கிள் எடுக்க மீண்டும் கடைசி பந்தை எதிர்கொண்ட ஈஸ்வரன் யார்கர் வீசுவார் என்பதை முன்கூட்டியே கணித்து நன்றாக ஒதுங்கி வந்து அனைவரையும் வியக்க வைக்கும் ஸ்கூப் ஷாட் வாயிலாக 4வது சிக்சரை பறக்க விட்டு போட்டியை மொத்தமாக மாற்றினார். அதன் காரணமாக ஒரே ஓவரில் 33 ரன்கள் அடித்த நெல்லைக்கு கடைசி ஓவரில் சுபோத் பாத்தி 1, 1, 0, 0, 1 என முதல் 5 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து சவால் விடுத்தார். ஆனால் மீண்டும் கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்ட போது அட்டகாசமான சிக்சர் அடித்த ரித்திக் ஈஸ்வரன் 39* (11) ரன்கள் விளாசி 7 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லையை சொந்த மண்ணில் வெற்றி பெற வைத்து ஃபைனலுக்கு அழைத்துச் சென்றார்.

மறுபுறம் 5 பவுண்டரி 5 சிக்ஸருடன் 73* (44) ரன்கள் இந்த குவித்து முக்கிய பங்காற்றிய அஜிதேஷ் குருசாமி இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றினார். ஆனாலும் ஒரே ஓவரில் 4 சிக்ஸர்களை அடித்து திண்டுக்கல் வெற்றியை பறித்த ஈஸ்வரன் தான் ஆட்டநாயகன் விருதை பெற சரியானவர் என்று ரசிகர்கள் பாராட்டுகின்றனர். ஏனெனில் இது மட்டுமல்லாமல் ஃபீல்டிங் செய்யும் போது பொய்யாமொழி வீசிய 18வது ஓவரின் முதல் பந்தில் லெக் சைட் திசையில் அடிக்க முயற்சித்த ஆதித்யா கணேஷ் 13 (14) ரன்களில் கொடுத்த கேட்ச்சை விக்கெட் கீப்பராக நின்ற அவர் சூப்பர்மேனை போல் ஒற்றை கையில் தாவி பிடித்ததும் வெற்றிக்கு முக்கிய காரணமானது.

இதையும் படிங்க:IND vs WI : முதல் டெஸ்ட் நடைபெறும் டாமினிக்கா மைதானம் எப்படி – மழை வருமா? புள்ளிவிவரம், பிட்ச் – வெதர் ரிப்போர்ட் இதோ

அப்படி சாய் சுதர்சன், அஜிதேஷ் குருசாமி போன்ற தரமான இளம் தமிழக வீரர்கள் வரிசையில் ஈஸ்வரனும் இணைந்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இதை தொடர்ந்து ஜூலை 12ஆம் தேதி நடைபெறும் மாபெரும் ஃபைனலில் தன்னுடைய சொந்த மண்ணில் கோவையை கோப்பைக்காக நெல்லை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement