IND vs WI : முதல் டெஸ்ட் நடைபெறும் டாமினிக்கா மைதானம் எப்படி – மழை வருமா? புள்ளிவிவரம், பிட்ச் – வெதர் ரிப்போர்ட் இதோ

Dominica Cricket Ground Stadium
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு முதலாவதாக 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்குகிறது. அதில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தோல்வியை சந்தித்த இந்திய அணியில் புஜாரா, உமேஷ் யாதவ், ஷமி போன்ற சீனியர்கள் கழற்றி விடப்பட்டு ஜெய்ஸ்வால், ருதுராஜ், முகேஷ் குமார் போன்ற இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் சமீப காலங்களில் சுமாராக செயல்படும் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இத்தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளனர்.

அத்துடன் அஸ்வின், ஜடேஜா போன்ற தரமான வீரர்களுடன் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக திகழும் இந்தியா இத்தொடரில் பலவீனமான வெஸ்ட் இண்டீஸை தோற்கடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் சமீப காலங்களாகவே சுமாராக செயல்பட்டு வரும் வெஸ்ட் இண்டீஸ் 2023 உலக கோப்பைக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறியது. இருப்பினும் சொந்த மண்ணில் எலி கூட புலியாக செயல்படும் என்ற அடிப்படையில் கிரைக் ப்ரத்வெய்ட் தலைமையில் ஜேசன், ஹோல்டர் அல்சாரி ஜோசப் போன்ற தரமான வீரர்களை கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் சொந்த ரசிகர்கள் ஆதரவுடன் வலுவான இந்தியாவை வீழ்த்தி மறுமலர்ச்சி காண்பதற்காக போராட தயாராகியுள்ளது.

- Advertisement -

டாமினிக்கா மைதானம்:
அதனால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடரின் முதல் போட்டி ஜூலை 12ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு டாமினிக்கா மாகாணத்தில் உள்ள ரோசியூ நகரில் இருக்கும் விண்ட்சோர் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் துவங்க உள்ளது. டாமினிக்கா நகரின் கடற்கரை ஓரத்தில் 12,000 ரசிகர்கள் அமரும் வகையில் இயற்கையான சுழலில் 2007இல் கட்டமைக்கப்பட்ட இந்த மைதானத்தில் இதுவரை 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன.

1. அந்த 5 போட்டிகளிலும் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 2013இல் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மட்டும் வென்றது. எஞ்சிய 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்த நிலையில் 1 போட்டி டிராவில் முடிந்தது. மறுபுறம் இங்கு கடந்த 2011இல் நடைபெற்ற வரலாற்றின் முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டிரா செய்த இந்தியா 12 வருடங்கள் கழித்து இப்போது தான் விளையாட உள்ளது.

- Advertisement -

2. இந்த மைதானத்தில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரராக முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி (74) உள்ள நிலையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்களாக ஹர்பஜன் சிங் மற்றும் இசாந்த் சர்மா (தலா 6) உள்ளனர். இந்த மைதானத்தில் இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஸ்கோர் : 347, 2011.

வெதர் ரிப்போர்ட்:
பொதுவாகவே தீவுகளை கொண்ட நாடுகளான வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அடிக்கடி மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் நிலையில் இப்போட்டி துவங்கும் ஜூலை 12ஆம் தேதி டாமினிக்கா நகரில் 30% மழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது. இருப்பினும் அது லேசான தூறல் மழையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் போட்டியில் பெரிய தாக்கம் ஏற்படாது என்று நம்பலாம்.

- Advertisement -

மேலும் 2, 3, 4 ஆகிய நாட்களில் 20க்கும் குறைவான சதவீதத்தில் இருக்கும் மழையின் அளவு கடைசி நாளில் 40% வருவதற்கு வாய்ப்புள்ளது. அதனால் இந்த போட்டி அவ்வப்போது மழையின் குறிக்கிட்டை தாண்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

பிட்ச் ரிப்போர்ட்:
வரலாற்றில் இங்கு இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் டாமினிக்கா மைதான பிட்ச் வழக்கமான டெஸ்ட் போட்டிகளுக்கு உகந்ததாக இருந்து வருகிறது. அதாவது முதல் நாளில் மேகமூட்டத்துடன் கூடிய வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இங்குள்ள பிட்ச் புதிய பந்தை ஸ்விங் செய்யும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக சாதகமாக இருக்கும்.

இதையும் படிங்க:என்னோட வாழ்நாள்ல எப்போ அவரை மெச்சூரிட்டியா பாக்கபோறேனு தெரியல. சக வீரரை மேடையில் – கலாய்த்த தல தோனி

இருப்பினும் அதை சமாளித்து நிலைத்து நிற்கும் பேட்ஸ்மேன்களுக்கு 2, 3 நாட்களில் எளிதாக ரன்கள் குவிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படும் இங்குள்ள பிட்ச்சில் கடைசி 2 நாட்களில் வழக்கம் போல தரமான ஸ்பின்னர்கள் போட்டியின் வெற்றியை தீர்மானிக்கும் அளவுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். மேலும் இங்கு வரலாற்றில் நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் 2வதாக பேட்டிங் செய்த அணிகள் பெரிய ரன்களை எடுத்து கடைசி இன்னிங்ஸில் குறைந்த இலக்கை சேசிங் செய்து அதிகமாக வெற்றி கண்டுள்ளன. எனவே இந்த போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement