என்னோட வாழ்நாள்ல எப்போ அவரை மெச்சூரிட்டியா பாக்கபோறேனு தெரியல. சக வீரரை மேடையில் – கலாய்த்த தல தோனி

- Advertisement -

சென்னை அணியின் கேப்டன் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி ஆகியோர் நேற்று சென்னையில் நடைபெற்ற எல்.ஜி.எம் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர். இந்திய கிரிக்கெட் அணியின் மாபெரும் முன்னாள் கேப்டனான தோனி “தோனி என்டர்டைன்மென்ட்” என்கிற தயாரிப்பு நிறுவனத்தை அண்மையில் துவங்கினார். இந்த நிறுவனத்தின் மூலம் எடுக்கப்பட்ட முதல் படமாக தமிழ் படமான எல்.ஜி.எம் அமைந்துள்ளது.

LGM

- Advertisement -

தமிழ்மணி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவை ஏற்கனவே வெளியாகியிருந்த வேளையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து நேற்று சென்னையில் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஆகியவை நடைபெற்றது. இந்த விழாவில் தோனி அவரது மனைவியுடன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் போது மேடையில் தோனி பல்வேறு சுவாரஸ்யமான விடயங்களை பகிர்ந்து கொண்டது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்தது. அந்த வகையில் அவருக்கும் சென்னைக்கும் இடையேயான பிணைப்பு குறித்து பேசிய அவர் கூறுகையில் : சென்னை மண்ணில் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் அறிமுகமாகினேன். அதோடு சென்னையில் தான் நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் எனது அதிகபட்ச ரன்களை பதிவு செய்துள்ளேன். தற்போது தமிழில் தான் என்னுடைய நிறுவனத்தின் முதல் படத்தையும் தயாரித்திருக்கிறேன்.

deepak 1

இப்படி எனக்கும் சென்னைக்குமான உறவு என்பது எப்போதுமே ஸ்பெஷலான ஒன்று என்றும் நான் நீண்ட ஆண்டுகளுக்கு முன்பாகவே சென்னையால் தத்தெடுக்கப்பட்டு விட்டேன் என்றும் தோனி சுவாரசியமாக பேசியிருந்தார். அதோடு சென்னை அணியின் சகவீரர் தீபக் சாகர் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு தோனி அளித்த பதில் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தீபக் சாகர் குறித்து பேசிய தோனி கூறுகையில் : தீபக் சாகர் ஒரு போதை பொருள் போன்றவர்.

- Advertisement -

அவர் அருகில் இருந்தால் ஏன் இருக்கிறார்? என்று தோன்றும் ஒருவேளை அவர் அருகில் இல்லையென்றால் அவரை மனம் தேடும். அவரிடம் இருக்கும் ஒரு நல்ல விடயம் என்னவென்றால் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அவர் மெச்சூரிட்டியாகி வருகிறார். ஆனாலும் அவர் முழுமையாக மெச்சூரிட்டியாக நீண்ட காலம் எடுக்கும்.

இதையும் படிங்க : IND vs WI : வெ.இ மண்ணில் இந்தியாவின் செயல்பாடுகள் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம் – அதிக ரன்கள், விக்கெட் பட்டியல் இதோ

என் வாழ்நாளில் அவரை எப்போது முழு மெச்சூரிட்டியுடன் பார்ப்பேன் என்பதில் சந்தேகமே உள்ளது. தீபக் சாகருக்கு 50 வயதானாலும் என் மகள் ஜீவா தற்போது 8 வயதில் இருக்கும் மெச்சூரிட்டி லெவலில் கூட அவர் இருப்பாரா? என்பது சந்தேகம்தான் என தோனி கலகலப்பாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement