இளம் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் கோடைகாலத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் குஜராத் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் 5 சிக்சர் அடித்து வரலாறு காணாத வெற்றியை பெற்றுக் கொடுத்து உலகத்தை திரும்பி பார்க்க வைத்ததை யாராலும் மறக்க முடியாது. அதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் சமீபத்திய அயர்லாந்து டி20 தொடரில் அறிமுகமான அவர் 2வது போட்டியில் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்து தாம் முதல் முறையாக பேட்டிங் செய்த போட்டியிலேயே இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்று அனைவரும் பாராட்டுகளை அள்ளினார்.
அந்த நிலைமையில் நம்முடைய சொந்த மாநிலமான உத்திரபிரதேசத்தில் நடைபெற்று வரும் யூபி டி20 லீக் தொடரில் அவர் ஐபிஎல் தொடரில் நிகழ்த்திய அதே மாயாஜாலத்தை மீண்டும் நிகழ்த்தியுள்ளார். அதாவது ஆகஸ்ட் 31ஆம் தேதி மீரட் மவ்ரிக்ஸ் மற்றும் காசி வாரியர்ஸ் ஆகிய அணிகள் ஒரு லீக் போட்டியில் மோதின. அதில் முதலில் பேட்டிங் செய்த மீரட் அணி 20 ஓவர்களில் 181/4 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக 4 பவுண்டரி 9 சிக்சருடன் மாதவ் கவுசிக் 87* (52) ரன்கள் எடுக்க காசி அணி சார்பில் அதிகபட்சமாக சிவா சிங் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
சூப்பர் ஓவரில் மிரட்டல்:
அதை தொடர்ந்து 182 ரன்களை துரத்திய காசி அணியும் ஆரம்பம் முதலே போராட்டமான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருவது அவர்களின் மிகச் சரியாக 181/7 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் கரன் சர்மா 58 (44) ரன்களும் சிவம் பன்சல் 57 (41) ரன்களும் எடுத்து போட்டியை சமன் செய்வதற்கு உதவினர். அதைத்தொடர்ந்து வெற்றியாளருக்கு தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் சிவம் பன்சல் 10 ரன்கள் எடுத்த உதவியுடன் காசி அணி 20 ஓவர்களில் 16/0 ரன்கள் எடுத்தது.
அதன் பின் சூப்பர் ஓவரில் 17 ரன்களை மீரட் அணி துரத்துவதற்காக களமிறங்கியது. அதில் முதலில் பேட்டிங் செய்த போது வெறும் 15 (22) ரன்கள் மட்டுமே ஏமாற்றத்தை கொடுத்த ரிங்கு சிங் சிவா சிங் வீசிய சூப்பர் ஓவரில் கில்லியாக மாறி முதல் பந்தில் ரன்கள் எடுக்காத போதிலும் அடுத்த 3 பந்துகளில் ஆஃப் சைட் கவர்ஸ் மற்றும் லாங் ஆன் திசையில் அடுத்தடுத்த 3 ஹாட்ரிக் சிக்ஸர்களை தெறிக்க விட்டு 18* (4) ரன்கள் விளாசி மாஸ் ஃபினிஷிங் கொடுத்து தன்னுடைய அணியை வெற்றி பெற வைத்தார்.
Rinku Singh hitting consecutive sixes to win the match?? We've seen this before! 🤩💜pic.twitter.com/TLV4HhFkzQ
— KolkataKnightRiders (@KKRiders) August 31, 2023
இதையும் படிங்க:இந்திய அணிக்காக விளையாடும் முன்னரே சாய் சுதர்சனுக்கு அடித்த அதிர்ஷ்டம் – அஷ்வின் தான் காரணமா?
குறிப்பாக முதல் சிக்சர் அடித்த போதே நிச்சயம் வெற்றி பெற வைத்து விடுவார் என்று கருதி அவருடைய அணியினர் கைதட்டி ஆரவாரமாக கூச்சலிட்டு இறுதியில் வெற்றியை பெற்றுக் கொடுத்த ரிங்கு சிங்கை தூக்கி கொண்டாடினார்கள். அதே போல ரசிகர்களும் அவருடைய அற்புதமான ஃபினிஷிங் திறமையை பார்த்து சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள். பொதுவாகவே அழுத்தமான சமயங்களில் சிறப்பாக விளையாடுவதற்கு பல மகத்தான வீரர்கள் தடுமாறும் நிலையில் இளம் வயதிலேயே பரபரப்பான நேரங்களில் அசால்டாக விளையாடும் ரிங்கு சிங் இந்தியாவின் அடுத்த ஃபினிசராக உருவெடுத்துள்ளார் என்றே சொல்லலாம்.