இந்திய அணிக்காக விளையாடும் முன்னரே சாய் சுதர்சனுக்கு அடித்த அதிர்ஷ்டம் – அஷ்வின் தான் காரணமா?

Sai-Sudharsan
Advertisement

தமிழகத்தைச் சேர்ந்த 21-வயது இளம் கிரிக்கெட் வீரரான சாய் சுதர்சன் டி.என்.பி.எல் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக ஐபிஎல் தொடரிலும் ஒப்பந்தமானார். அதன்படி கடந்த 2022-ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பிடித்த இந்த அவர் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். அதனை தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற முடிந்த 2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரிலும் அவரது ஆட்டம் மிகச் சிறப்பாக அமைந்தது.

குறிப்பாக குஜராத் அணியில் மூன்றாவது இடத்தில் களமிறங்கி விளையாடிய கேன் வில்லியம்சன் காயம் அடைந்ததால் அவரது இடத்தில் களமிறங்கிய சாய் சுதர்சன் மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கி இருந்தார். அதிலும் குறிப்பாக சென்னை அணிக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போட்டியில் 96 ரன்கள் குவித்து தனது பேட்டிங் திறனை அவர் உலகிற்கு வெளிகாட்டியிருந்தார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து இந்தியா ஏ அணியில் இடம்பெற்று விளையாடியிருந்த சாய் சுதர்சன் வெகுவிரைவில் இந்திய அணிக்காக விளையாடுவார் என்று ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தற்போது சாய் சுதர்சன் இந்திய அணிக்காக அறிமுகமாவதற்கு முன்பாகவே இங்கிலாந்து கவுண்ட் கிரிக்கெட்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இது அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு என்று பலரும் கூறி வருகின்றனர். ஏனெனில் உலகின் பல்வேறு முன்னணி வீரர்கள் கவுண்டி தொடரில் விளையாடி பார்மிற்கு வரும் வேளையில் தற்போது 21 வயதான அவருக்கு இந்த கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது அனைவரது மத்தியிலும் பாராட்டப்படும் விடயமாக மாறி உள்ளது.

- Advertisement -

ஏற்கனவே இந்திய அணியின் வீரர்களான புஜரா, அஸ்வின், உனக்கட், ப்ரித்வி ஷா என பல்வேறு வீரர்கள் விளையாடியிருந்த வேளையில் தற்போது சர்வே அணிக்காக அவர் இந்த சீசனில் கடைசி மூன்று போட்டிக்கான அணியில் இணைக்கப்பட்டுள்ளார் என்ற அதிகாரப்பூர்வமான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதேபோன்று சாய் சுதர்சன் சர்ரே அணிக்காக விளையாடிய முக்கிய காரணமே தமிழக வீர அஸ்வின் தான் என்று கூறப்படுகிறது. ஏனெனில் கவுண்டி கிரிக்கெட் நிர்வாகத்துடன் மிக நெருங்கிய பிணைப்பினை உடைய அஸ்வின் தான் அவருக்கு வாய்ப்பு பெற்று தந்திருப்பாரோ என்பது போன்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சாய் சுதர்சன் சிறப்பாக செயல்படும் போது அவரை அஸ்வின் பல முறை பாராட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement