6, 6, 6 கடைசி ஓவர்களில் அட்டகாசம் நிகழ்த்திய ரிங்கு – தல தோனியின் வழியில் ஃபினிஷராக அவதாரம் எடுத்துள்ளாரா

Rinku Singh 33.jpeg
- Advertisement -

அயர்லாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் மழைக்கு மத்தியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டியிலும் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. குறிப்பாக விராட் கோலி போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமல் காயத்திலிருந்து குணமடைந்து கம்பேக் கொடுத்துள்ள நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் இளம் வீரர்களுடன் அடுத்தடுத்த போட்டிகளில் அசத்தலாக செயல்பட்டு வெற்றி கண்ட இந்தியா 2 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே இத்தொடரை கைப்பற்றி தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்துள்ளது.

டப்லின் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 185/5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ருதுராஜ் கைக்வாட் 58 (43) சஞ்சு சம்சான் 38 (21) ரிங்கு சிங் 38 (21) சிவம் துபே 22* (16) என முக்கிய வீரர்கள் அதிரடியான ரன்களை எடுக்க அயர்லாந்து சார்பில் அதிகபட்சமாக பேரி மெக்கார்த்தி 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

ஃபினிஷராக மிரட்டிய ரிங்கு:
அதை தொடர்ந்து 186 ரன்களை துரத்திய அயர்லாந்துக்கு ஆண்டி பால்பிரின் அதிரடியாக 72 (51) ரன்கள் எடுத்த போதிலும் எதிர்ப்புறம் பால் ஸ்டிர்லிங் 0, டூக்கர் 0, ஹரி டெக்டர் 7 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 20 ஓவரில் 152/8 ரன்கள் மட்டுமே எடுத்த அயர்லாந்தை சிறப்பாக பந்து வீசி கட்டுப்படுத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

முன்னதாக இந்த தொடரில் அறிமுகமாக களமிறங்கிய ரிங்கு சிங் முதல் போட்டியில் மழையால் வாய்ப்பு பெறாத நிலைமையில் இப்போட்டியில் சஞ்சு சாம்சன் 40 (26) ரன்களில் அவுட்டான போது இந்தியாவுக்காக முதல் முறையாக பேட்டிங் செய்யும் வாய்ப்பை பெற்றார். அதில் ஆரம்பத்தில் நிதானம் கலந்த பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் 18 ஓவர்கள் வரை அதிரடியாக விளையாடுவதற்கு தடுமாறினார். குறிப்பாக முதல் 15 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறிய அவர் பேரி மெக்கார்த்தி வீசிய 19வது ஓவரின் 2வது பந்தில் பவுண்டரியை அடித்து 3வது பந்தில் அதிரடியான சிக்சரை பறக்க விட்டார்.

- Advertisement -

அதனால் அழுத்தத்திற்குள்ளான பவுலர் அடுத்த 2 பந்துகளில் ஒய்ட் வீசியும் கவனத்தை சிதற விடாத அவர் 4வது பந்தில் மீண்டும் கவர்ஸ் திசையில் சிக்ஸர் அடித்து வேட்டையை துவங்கினார். அவரைப் பார்த்து மறுபுறம் தடுமாறிய சிவம் துபேபூமி பேகம் மார்க் அடைர் வீசிய கடைசி ஓவரின் முதல் 2 பந்துகளில் அடுத்தடுத்த சிக்ஸர்களை அடித்து அடுத்த பந்தில் சிங்கிள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 4வது பந்தில் மீண்டும் சிக்ஸர் அடித்த ரிங்கு சிங் 5வது பந்தில் 2 பவுண்டரி 3 சிக்ஸருடன் 38 (21) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தாலும் இந்தியாவுக்கு சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார்.

சொல்லப்போனால் கடைசியில் அவர் எடுத்த 38 ரன்கள் தான் இந்தியா 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதில் முக்கிய பங்காற்றியது என்று சொல்லலாம். ஏழை குடும்பத்தில் பிறந்து கடந்த 2018 முதல் ஐபிஎல் தொடரில் பெரும்பாலும் பெஞ்சில் அமர்ந்து வந்த அவர் இந்த வருடம் கொல்கத்தா அணிக்காக 14 போட்டிகளில் 474 ரன்களை 149.53 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கினார். அதிலும் குஜராத்துக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து வரலாறு காணாத வெற்றியை பெற்றுக் கொடுத்த அவர் ஐபிஎல் அளவில் மிகச் சிறந்த ஃபினிஷராக செயல்பட்டார்.

இதையும் படிங்க:தோனி போட்ட ஸ்கெட்ச் தப்புமா? சி.எஸ்.கே அணிக்காக செய்ததை இந்திய அணிக்காகவும் செய்த ஷிவம் துபே – விவரம் இதோ

அதன் காரணமாக முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுக்கு மத்தியில் இந்தியாவுக்காகவும் அறிமுகமாகியுள்ள அவர் முதல் முறையாக பேட்டிங் செய்த போட்டியிலேயே அபாரமான ஃபினிஷிங் கொடுத்து ஆட்டநாயகன் விருதையும் வென்றுள்ளார். அதிலும் ஆரம்பத்தில் மெதுவாக துவங்கி கடைசி கட்ட ஓவர்களில் வெளுத்து வாங்கும் அவருடைய ஃபினிஷிங் ஸ்டைல் மகத்தான எம்எஸ் தோனியை போல் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Advertisement