தோனி போட்ட ஸ்கெட்ச் தப்புமா? சி.எஸ்.கே அணிக்காக செய்ததை இந்திய அணிக்காகவும் செய்த ஷிவம் துபே – விவரம் இதோ

Shivam-Dube
- Advertisement -

இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்த 16-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்று அதிகமுறை கோப்பையை கைப்பற்றிய மும்பை அணியின் சாதனையும் சமன் செய்து அசத்தியது. தல தோனியின் தலைமையில் சி.எஸ்.கே அணி பெற்ற வெற்றிகளில் ஷிவம் துபேவும் முக்கிய பங்கு வகித்தார் என்றால் அது மிகையல்ல.

Dube

- Advertisement -

ஏனெனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட ஷிவம் துபே சென்னை அணிக்காக அறிமுகமானதிலிருந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். அவரிடம் உள்ள திறமை எது என்பதனை கண்டறிந்த தோனி அதனை சரியாக பயன்படுத்தி வருகிறார்.

அதோடு ஷிவம் துபே பற்றி ஏற்கனவே பேசியிருந்த தோனி : சிவம் துபேவால் பெரிய பெரிய சிக்சர்களை அடிக்க முடியும் என்பதனால் அவரை ஹிட்டராகவே அணியில் பயணிக்க விரும்புகிறோம். அதோடு அவர் வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சு என இரண்டு தரப்பினரையும் வெளுத்து வாங்குகிறார் என தோனியை பாராட்டி இருந்தார்.

Dube

இந்நிலையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அவரது சிறப்பான செயல்பாடு காரணமாக தற்போது அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியிலும் அவருக்கு இடம் கிடைத்துள்ளது. வேகப்பந்து வீச்சு தெரிந்த ஆல்ரவுண்டரான ஷிவம் துபேவுக்கு அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

இருந்தாலும் இரண்டாவது டி20 போட்டியின் போது பின் வரிசையில் களமிறங்கி பேட்டிங் செய்ய அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் நடைபெற்று முடிந்த 2 ஆவது டி20 போட்டியில் 16 பந்துகளை சந்தித்த சிவம் துபே 2 இமாலய சிக்ஸர்களை விளாசி 22 ரன்கள் குவித்து அணியின் ரன் குவிப்பை கடைசி கட்டத்தில் உயர்த்தினார்.

இதையும் படிங்க : IND vs IRE : இரண்டாவது போட்டியின் அற்புதமான வெற்றிக்கு வித்திட்ட மூவேந்தர் – அசத்திய இந்திய அணி

சிக்ஸர்களை எளிதாக அடிப்பதனால் சிக்ஸர் துபே என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் சி.எஸ்.கே அணியையை தொடர்ந்து இந்திய அணியிலும் சிக்ஸர்களை விளாசி அசர வைத்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டே இந்திய அணிக்காக அவர் அறிமுகமாகி இருந்தாலும் தற்போது சிஎஸ்கே அணியில் விளையாடிய பிறகுதான் மீண்டும் அவர் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement