IND vs IRE : இரண்டாவது போட்டியின் அற்புதமான வெற்றிக்கு வித்திட்ட மூவேந்தர் – அசத்திய இந்திய அணி

Rinku-samson-ruturaj
- Advertisement -

அயர்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் இந்திய அணியானது ஆகஸ்ட் 20-ஆம் தேதி டப்ளின் நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் அயர்லாந்து அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. அந்தவகையில் நடைபெற்று முடிந்த இந்த இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

IND-vs-IRE

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை குவித்தது. பின்னர் 186 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய அயர்லாந்து அணியால் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.

இதன் காரணமாக இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்ததோடு இந்த டி20 தொடரினையும் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியது.

Rinku-Singh

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி வெற்றிக்கு பேட்டிங்கில் மூன்று வீரர்கள் மிக முக்கிய காரணமாக அமைந்தனர். அந்த வகையில் போட்டியின் ஆரம்பத்திலேயே ஜெய்ஸ்வால் மற்றும் திலக் வர்மா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க 34 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.

- Advertisement -

பின்னர் மிடில் ஓவர்களில் நிலைத்து நின்று ஆடிய ருதுராஜ் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் மிகச் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை நல்ல நிலைக்கு கொண்டு வந்தனர். ஒரு கட்டத்தில் சாம்சன் 40 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற ருதுராஜ் கெய்க்வாடும் 58 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இதையும் படிங்க : IND vs IRE : ஒரு பச்ச புள்ளய போட்டு இப்படியா அடிப்பீங்க? அயர்லாந்து அணியை சுருட்டி வீசிய இந்திய அணி – நடந்தது என்ன?

அதன் பின்னர் ரிங்கு சிங் கடைசி கட்ட ஓவர்களில் தனது பங்கிற்கு அதிரடி காட்ட இந்திய அணி 185 ரன்கள் என்ற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் 58 ரன்களையும், சாம்சன் 40 ரன்களையும், ரிங்கு சிங் 38 ரன்களையும் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement