இதைவிட ஒரு மோசமான ரன் அவுட்ட பாத்திருக்க வாய்ப்பே இல்ல – கரீபியன் லீக் தொடரில் நடைபெற்ற சம்பவம்

Rahkeem Cornwall
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸின் பிரபல கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 2023 சீசன் கோலாகலமாக துவங்கியுள்ளது. அதில் ஆகஸ்ட் 18ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற்ற 2வது லீக் போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதின. ஐபிஎல் தொடரில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளின் கிளை அணிகளான இவ்விரு அணிகள் மோதிய போட்டியில் டாஸ் வென்ற செயின்ட் லூசியா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 201/6 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக கேப்டன் டு பிளேஸிஸ் 46 (32) ரன்களும் சீன் வில்லியம்ஸ் 47 (30) ரன்களும் ஜான்சன் சார்லஸ் 30 (19) ரன்களும் அதிரடியாக எடுக்க பார்படாஸ் சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 202 என்ற மிகவும் கடினமான இலக்கை துரத்திய பார்படாஸ் அணிக்கு போர்ஜ்ட் வீசிய முதல் ஓவரிலேயே நட்சத்திர வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரஹீம் கார்ன்வால் லெக் சைட் திசையில் அதிரடியான பவுண்டரியை அடிக்க முயற்சித்தார்.

- Advertisement -

பரிதாப அவுட்:
இருப்பினும் அதை தடுத்த ஃபீல்டர் கிறிஸ் சோல் தம்முடைய கைகளிலிருந்து மீறி சென்ற பந்தை எழுந்து சென்று எடுத்து ரன் அவுட் செய்வதற்காக குறி பார்த்து எறிந்தார். ஆனால் அதற்குள் சிங்கிள் ஓட வேண்டிய ரஹீம் கார்ன்வால் தம்முடைய உடல் அதிக பருமனாக இருப்பதால் வேகமாக ஓட முடியாமல் மெதுவாக பேட்டை தூக்கி கொண்டு சென்றார். அதற்குள் ஃபீல்டர் வீசிய பந்து ஸ்டம்ப்பை சரியாக அடித்ததால் 1 ரன் கூட எடுக்காமல் முதல் பந்திலேயே அவர் பரிதாபமாக கோல்டன் டக் அவுட்டாகி சென்றது பார்படாஸ் ரசிகர்களுக்கு கடுப்பேற்றும் வகையில் அமைந்தது.

மறுபுறம் விராட் கோலி போன்றவர் அந்த சமயத்தில் 2 ரன்கள் எடுக்கும் அளவுக்கு பந்து மெதுவாக வந்தும் சிங்கிள் கூட எடுக்காமல் அவர் அவுட்டானதை பார்த்த வர்ணனையாளர் டேனி மோரிசன் “என்னப்பா இந்நேரம் நீங்கள் 2வது கியரில் சென்று சிங்கிள் ஆச்சும் எடுத்திருக்கலாமே” என்று சிரித்துக்கொண்டே சொன்னார். 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகிலேயே மிகவும் அதிக எடையுடன் விளையாடிய வீரர் என்ற வித்தியாசமான உலக சாதனையை படைத்துள்ள கார்ன்வால் சராசரியாக 140 கிலோ எடையைக் கொண்டுள்ளார்.

- Advertisement -

இருப்பினும் திறமையால் உடல் பருமனை உடைத்து சர்வதேச அளவில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடும் அவர் டி20 கிரிக்கெட்டிலும் தம்முடைய பவரை பயன்படுத்தி அதிரடியாக விளையாடும் திறமையைக் கொண்டுள்ளார். மேலும் ஃபிட்னஸ் இல்லாததால் இப்படி வேகமாக ஓட முடியாது என்பதாலேயே பெரும்பாலும் தொடக்க வீரராக களமிறங்கும் அவர் அதில் நிறைய போட்டிகளில் அதிரடியாக விளையாடி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளார்.

ஆனாலும் இந்த குறிப்பிட்ட போட்டியில் அதிரடியை துவங்குவதற்கு முன்பாகவே பரிதாபமாக அவுட்டான அவர் தம்முடைய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வழக்கமான கிண்டல்கள் மற்றும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். அப்படி அவர் சுமாராக அவுட்டாகி சென்ற நிலையில் கெய்ல் மேயர்ஸ் 16, கிரேவ்ஸ் 0, விக்கம் 10, கேப்டன் ரோவ்மன் போவல் 0, ஜேசன் ஹோல்டர் 10 என இதர முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தனர்.

இதையும் படிங்க:IND vs IRE : இந்தியா அயர்லாந்து முதலாவது டி20 நடப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல். போட்டி தடைபட வாய்ப்பு – விவரம் இதோ

அதன் காரணமாக இறுதியில் நயீம் எங் 48 (39) ரன்கள் எடுத்துப் போராடியும் 20 ஓவர்களில் பார்படாஸ் அணியை 147 ரன்களுக்கு சுருட்டி 54 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற செயின்ட் லூசியா சார்பில் அதிகபட்சமாக மேத்தியூ போர்ட்ஜ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அந்த வகையில் வரும் செப்டம்பர் 25 முதல் நடைபெறப்போகும் இந்த தொடரில் மொத்தம் 6 அணிகள் 34 போட்டிகளில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement