IND vs IRE : இந்தியா அயர்லாந்து முதலாவது டி20 நடப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல். போட்டி தடைபட வாய்ப்பு – விவரம் இதோ

Weather-1
- Advertisement -

அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ஜஸ்ப்ரீத் பும்ரா இந்திய அணியை வழிநடத்த இருக்கிறார்.

IND-vs-IRE

- Advertisement -

இன்று ஆகஸ்ட் 18-ஆம் தேதி டப்ளின் நகரில் நடைபெறவுள்ள இந்த முதலாவது டி20 போட்டியானது அனைவரது மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ள வேளையில் இந்த போட்டி நடைபெறுவதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்று வெளியான டப்ளின் நகருக்கான வானிலை அறிக்கையின்படி இன்றைய நாள் முழுவதுமே டப்ளின் நகரில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இன்றைய போட்டி நடைபெறுவதில் பெரிய கேள்வி எழுந்துள்ளது.

Weather

இன்று 90% மழைக்கு முழுவதுமாக வாய்ப்பு உள்ளதால் இன்றைய போட்டி நடைபெறாது என்றே தெரிகிறது. வழக்கமாகவே 18 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் டெம்பரேச்சரானது இன்று 16 டிகிரியாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே இன்றைய போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பதில் பெரிய கேள்வி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : அவர் இருந்திருந்தா 2019 உ.கோ செமி ஃபைனலில் தோத்துருக்க மாட்டோம், அவருக்கான பாராட்டும் கிடைக்கல – சாஸ்திரி உருக்கம்

ஒருவேளை போட்டி நடைபெறுமாயின் நிச்சயம் அது ஹை ஸ்கோரிங் போட்டியாகவே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் போட்டி நடைபெறும் டப்ளின் மைதானம் முழுவதும் பேட்டிங்கிற்கு சாதகமான ஒன்றாகவே இருந்து வருகிறது.

Advertisement