வீடியோ : தோனியின் 200வது போட்டியில் பந்து வீச்சில் புதிய மைல்கல் தொட்ட ஜடேஜா – ராஜஸ்தானின் அதிரடி ஸ்கோர் இதோ

- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற்ற 17வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. தமிழகத்தின் தலைநகர் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் 4 கோப்பைகளை வென்று கொடுத்து 2வது வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்துள்ள எம்எஸ் தோனி சென்னை அணியை 200வது போட்டியில் தலைமை தாங்கினார். அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அணியை 200 போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்த அவருக்கு முன்னாள் பிசிசிஐ தலைவர் மற்றும் சென்னை அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் சிறப்பு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.

அதை தொடர்ந்து துவங்கிய போட்டியில் டாஸ் வென்ற தோனி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தானுக்கு யஎஸ்எஸ்வி ஜெய்ஸ்வால் 10 (8) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தாலும் அடுத்து வந்த தேவதூத் படிக்கல் இம்முறை அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். குறிப்பாக பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அசத்திய அவர் மற்றொரு தொடக்க வீரர் ஜோஸ் பட்லருடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ராஜஸ்தானை வலுப்படுத்திய போது ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் 5 பவுண்டரியுடன் 38 (26) ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அத்தோடு நிற்காத ஜடேஜா அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சனையும் கிளீன் போல்ட்டாக்கி டக் அவுட்டாக்கினார். அதனால் ராஜஸ்தான் தடுமாறினாலும் அடுத்ததாக யாருமே எதிர்பாரா வகையில் முன்கூட்டியே களமிறங்கிய தமிழகத்தின் லெஜெண்ட் ரவிச்சந்திரன் அஸ்வின் தாம் விளையாடப் பழகிய சேப்பாக்கம் பிட்ச்சை கச்சிதமாக படித்து அதற்கேற்றார் போல் அதிரடியாக செயல்பட்டார். குறிப்பாக ஜோஸ் பட்லருடன் இணைந்து 47 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 1 பவுண்டரி 2 சிக்சருடன் 30 (22) ரன்கள் குவித்த அவர் தனது வேலையை கச்சிதமாக செய்து ஆட்டமிழந்தார்.

அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் நங்கூரமாகவும் அதிரடியாகவும் செயல்பட்ட ஜோஸ் பட்லர் டெத் ஓவர்களில் இருமடங்கு அதிரடியை துவக்க முயற்சித்த போது 1 பவுண்டரி 3 சிக்சருடன் 52 (36) ரன்களில் மொயின் அலி சுழலில் போல்டானார். அடுத்து வந்த துருவ் ஜுரேல் 4 (6) ரன்களில் அவுட்டாக ஜேசன் ஹோல்டரும் அதிரடியாக விளையாட முயற்சித்து டக் அவுட்டானார். அடுத்து வந்த ஆடம் ஜாம்பா 1 (1) ரன்னில் ரன் அவுட்டனார்.

- Advertisement -

இருப்பினும் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் அதிரடியாக செயல்பட்ட சிம்ரோன் ஹெட்மயர் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 30* (18) ரன்கள் எடுத்து நல்ல ஃபினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் ராஜஸ்தான் 175/8 ரன்கள் எடுத்தது. சென்னை சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா, ஆகாஷ் சிங் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். முன்னாதாக 200வது போட்டியில் கேப்டனாக செயல்படும் தோனி தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை அவருக்கு பரிசாக்குவோம் என்று ஆரம்பத்திலேயே ரவீந்திர ஜடேஜா தெரிவித்திருந்தார்.

அந்த நிலையில் இந்த போட்டியில் 4 ஓவரில் 21 ரன்களை 5.25 என்ற மற்ற பவுலர்களை விட குறைவான சிறப்பான எக்கனாமியில் மட்டும் கொடுத்த அவர் சஞ்சு சாம்சன் உட்பட 2 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: CSK vs RR : இன்றைய போட்டியில் பங்கேற்றதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய – தல தோனி

அத்துடன் இப்போட்டியில் எடுத்த 2 விக்கெட்டுகளையும் சேர்த்து உள்ளூர் டி20, ஐபிஎல் மற்றும் சர்வதேச டி20 என அனைத்து வகையான 20 ஓவர் போட்டிகளையும் சேர்த்து தன்னுடைய 200வது விக்கெட்டையும் வீழ்த்தி புதிய மைல்களையும் ரவீந்திர ஜடேஜா தொட்டுள்ளார். இதைத் தொடர்ந்து 176 என்ற இலக்கை துரத்தி 3வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் சென்னை விளையாடி வருகிறது.

Advertisement