CSK vs RR : இன்றைய போட்டியில் பங்கேற்றதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய – தல தோனி

MS-Dhoni
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 31-ஆம் தேதி துவங்கிய 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 17-ஆவது லீக் போட்டியானது இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகின்றன.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பங்கேற்கும் தோனி ஐ.பி.எல் வரலாற்றில் வேறு எந்த கேப்டனும் நிகழ்த்தாத ஒரு தனிப்பெரும் சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இதனால் வரை கேப்டனாக வழிநடத்தியுள்ள தல தோனி நான்கு முறை ஐபிஎல் கோப்பையையும் வெற்றி பெற்று அதிக கோப்பைகளை வென்ற கேப்டன் என்ற பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

csk vs rr

அதோடு சென்னை அணியை அதிக முறை பிளேஆப் சுற்றி அழைத்துச் சென்ற கேப்டனாகவும் இருக்கிறார். இந்நிலையில் இதுவரை 199 போட்டிகளுக்கு சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ள அவர் இன்றைய ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேப்டனாக களமிறங்கியதன் மூலம் ஒரு குறிப்பிட்ட அணிக்காக 200 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட முதல் வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : IPL 2023 : 36க்கு ஆல் அவுட்டிலிருந்து காப்பாற்றிய அவருக்கு இப்போ இந்திய அணியில் கூல் ட்ரிங்ஸ் தூக்க இடமில்ல – சாஸ்திரி ஆதங்கம்

அதேபோன்று இதுவரை 237 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் 200 போட்டிகளில் சென்னை அணியின் கேப்டன்னாகவும், புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக 14 போட்டியில் கேப்டன்சி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement