IPL 2023 : 36க்கு ஆல் அவுட்டிலிருந்து காப்பாற்றிய அவருக்கு இப்போ இந்திய அணியில் கூல் ட்ரிங்ஸ் தூக்க இடமில்ல – சாஸ்திரி ஆதங்கம்

Ravi-Shastri
- Advertisement -

இந்திய ரசிகர்களுக்கு திரில்லர் விருந்து படைத்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் தன்னுடைய முதல் 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவு செய்து அசத்தி வருகிறது. குறிப்பாக பரம எதிரியான மும்பைக்கு எதிராக அவர்களது சொந்த ஊரான வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 3வது போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 158 ரன்களை துரத்திய சென்னைக்கு யாருமே எதிர்பாரா வகையில் அதிரடியாக விளையாடிய அஜிங்க்ய ரகானே 7 பவுண்டரி 3 சிக்சருடன் 61 (27) ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

குறிப்பாக மும்பையில் பிறந்து வளர்ந்து நட்சத்திர வீரராக உருவெடுத்துள்ள அவர் சென்னை அணிக்காக களனிறங்கிய அந்த அறிமுக போட்டியிலேயே 19 பந்துகளில் மும்பைக்கு எதிராக அதிவேகமாக அரை சதமடித்த சென்னை வீரராக சாதனையும் படைத்தார். பொதுவாகவே சற்று பொறுமையுடன் விளையாடக்கூடிய டெஸ்ட் ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மேனாக அறியப்படும் அவர் அந்த போட்டியில் அவ்வளவு அதிரடியாக விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுத்தது யாருமே எதிர்பாராத ஒன்றாக அமைந்தாலும் யாருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை என்றே சொல்லலாம்.

மகத்தான கேப்டன்:
ஏனெனில் கவாஸ்கர், சச்சின் போன்ற மகத்தான பேட்ஸ்மேன்கள் பிறந்த மும்பையில் இருந்து உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி 2011ஆம் சர்வதேச அரங்கில் அறிமுகமான அஜிங்க்ய ரகானே 3 வகையான இந்திய அணியிலும் விளையாடினார். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2015 உலகக் கோப்பையில் முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மனாக விளையாடிய அவர் நாளடைவில் சற்று மெதுவாக விளையாடியதால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் கழற்றி விடப்பட்டார்.

Rahane-3

ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட அவர் 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் முதல் போட்டியில் 36க்கு ஆல் அவுட்டான பின் குழந்தை பிறப்புக்காக நாடு திரும்பிய விராட் கோலிக்கு பதிலாக கேப்டன்ஷிப் பொறுப்பேற்று மெல்போர்ன் நகரில் நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்டில் சதமடித்து இந்தியாவுக்கு மகத்தான வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அதே போல எஞ்சிய போட்டிகளிலும் காயத்தால் முக்கிய வீரர்கள் வெளியேறிய நிலையில் அதற்கு தகுந்த அடுத்தடுத்த மாற்று இளம் வீரர்களை வைத்து காபா கோட்டையை தகர்த்து 2 – 1 (4) என்ற கணக்கில் ஆஸ்திரேலிய மண்ணில் மீண்டும் கோப்பையை வென்று சரித்திர படைக்க முக்கிய பங்காற்றிய அவர் அந்தத் தொடருக்குப்பின் சதமடிக்காமல் தடுமாறியதால் டெஸ்ட் அணியிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் 36க்கு ஆல் அவுட்டான பின் அபாரமாக கேப்டன்ஷிப் செய்து இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்த ரகானே தற்போது இந்திய அணியிலும் ஐபிஎல் தொடரிலும் கேப்டனாக இல்லாதது தமக்கு ஏமாற்றமளிப்பதாக அந்தத் தொடரில் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ஆனால் கூல் ட்ரிங்ஸ் தூக்குபவராக செயல்பட்டாலும் அதை ரகானே அணிக்காக மகிழ்ச்சியுடன் செயல்படும் மனம் படைத்தவர் என்று பாராட்டும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

Shastri

“அஜிங்க்ய ரகானேவின் இன்னிங்ஸை நான் மிகவும் விரும்பினேன். ஆஸ்திரேலியாவில் எங்களுடைய கேப்டனாக இருந்த அவர் வெளிநாட்டு மண்ணில் ஒரு இந்திய வீரரின் மகத்தான சதத்தை பதிவு செய்ததை நான் பார்த்துள்ளேன். அத்தொடரை இந்தியா தொடங்கிய விதத்திலிருந்து அது வரலாற்றில் சிறப்பான ஒன்றாக அமையும். குறிப்பாக 36 ஆல் அவுட்டுக்கு பின் அவர் கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டு பாக்ஸிங் டே போட்டியில் அவ்வாறு விளையாடியது அற்புதமானது”

இதையும் படிங்க: IPL 2023 : கேப்டன்னு வெளிய சொல்லாதீங்க, உங்க இன்னிங்ஸ் பாத்ததே பெரிய வலி – இந்திய வீரர் மீது வாசிம் ஜாபர் அதிருப்தி

“அதே போல மும்பைக்கு எதிரான போட்டியில் அவருடைய டைமிங் நிறைந்த இன்னிங்ஸ் பார்த்த நம்முடைய கண்களுக்கு விருந்தாக அமைந்தது. அவருக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவின் கேப்டனாக செயல்பட்ட அவர் தற்போது ஐபிஎல் அணியின் கேப்டனாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் கூல்ட்ரிங்க்ஸ் தூக்குபவராக இருந்தால் கூட அதை மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் செய்யக்கூடிய மனம் கொண்ட அவர் அணிக்கான வீரர். அவர் கிரிக்கெட் எப்படி விளையாட வேண்டும் என்பதற்கு டாப் கிளாஸ் எடுத்துக்காட்டாக நிற்பவர்” என்று கூறினார்.

Advertisement