வீடியோ : மன்கட் செய்ய பிளான் போட்ட அஷ்வின், பிளாஷ்பேக் பார்த்த ஜோஸ் பட்லர் – தவானின் ஆட்டத்தால் பஞ்சாப் அதிரடி ஸ்கோர்

Ashwin Mankad
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 5ஆம் தேதி நடைபெற்ற 8வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. கௌகாத்தி நகரில் இரவு 7.30 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் சிங் பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்தார். மறுபுறம் கேப்டன் ஷிகர் தவான் கம்பெனி கொடுக்கும் வகையில் பேட்டிங் செய்த நிலையில் ஓவருக்கு 10 ரன்களை குவிக்கும் அளவுக்கு சரவெடியாக விளையாடிய பிரப்சிம்ரன் சிங் முதல் ஆளாக அரை சதமடித்து அசத்தினர்.

அந்த வகையில் 9.4 ஓவரில் 90 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து பஞ்சாப்புக்கு அதிரடியான தொடக்கத்தை கொடுத்த இந்த ஜோடியில் 7 பவுண்டரி 3 சிக்சரை பறக்க விட்ட பிரப்சிம்ரன் சிங் 60 (34) ரன்கள் குவித்து ஆட்டமிந்தார். அந்த நிலையில் களமிறங்கிய பனுக்கா ராஜபக்சா ஷிகர் தவான் அடித்த பந்தில் காயமடைந்து பாதியிலேயே வெளியேறினார். இருப்பினும் அடுத்து வந்த ஜித்தேஷ் சர்மா அந்தத் தொடக்கத்தை வீணடிக்காத வகையில் அதிரடியாக விளையாடி 2வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 2 பவுண்டரி 1 சிக்சருடன் 27 (16) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அதைத் தொடர்ந்து களமிறங்கிய சிக்கந்தர் ராசா 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினாலும் மறுபுறம் நிதானமாக பேட்டிங் செய்த சிகர் தவான் அரை சதமடித்து தொடர்ந்து அதிரடியாக ரன்களை சேர்த்தார். இறுதியில் சாருக்கான் 11 (10) ரன்னில் அவுட்டானாலும் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் அசத்திய சிகர் தவான் 9 பவுண்டரி 3 சிக்ஸருடன் 86* (56) ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் பஞ்சாப் 197/4 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் சார்பில் ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளும் அஸ்வின் மற்றும் சஹால் ஆகியோர் தல 1 விக்கெட்டும் சாய்த்தனர்.

முன்னதாக இப்போட்டியில் 7வது ஓவரை வீசிய ரவிச்சந்திரன் அஸ்வின் 4வது பந்தை வீசுவதற்கு முன்பாக எதிர்ப்புறம் இருந்த ஷிகர் தவான் கிரீஸ் விட்டு வெளியேற சென்ற போது மன்கட் முறையில் ரன் அவுட் செய்ய எச்சரிக்கை கொடுக்கும் வகையில் முயற்சித்தார். ஆனாலும் நொடி பொழுதில் வெளியே சென்ற சிகர் தவான் மீண்டும் வெள்ளை கோட்டுக்குள் வந்ததால் அஷ்வின் ரன் அவுட் செய்யாமல் மீண்டும் பந்து வீச சென்றார். அப்போது உடனடியாக கேமராவை ஜோஸ் பட்லர் பக்கம் திருப்பிய கேமரா மேன் ஃபோக்கஸ் செய்தது மைதானத்தில் இந்த ரசிகர்களை ஆரவாரம் செய்ய வைத்தது.

- Advertisement -

ஏனெனில் 2019 ஐபிஎல் தொடரில் இதே பஞ்சாப் அணிக்காக விளையாடிய போது ஜோஸ் பட்லரை முக்கிய நேரத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் மன்கட் செய்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக நேர்மைக்கு புறம்பாக அஸ்வின் செயல்பட்டதாக ஒட்டுமொத்த உலகமே சேர்ந்து அவரை சரமாரியாக விமர்சித்து திட்டியது.

ஆனாலும் விதிமுறைக்கு உட்பட்டு செயல்பட்டதாக தனது கருத்தில் விடாப்பிடியாக இருந்த அஸ்வின் உலகின் அனைத்து பவுலர்களும் அதை செய்யுமாறு கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையில் நியாயம் இருந்ததால் கடந்த வருடம் மன்கட் அவுட்டை ரன் அவுட் பிரிவுக்கு மாற்றிய லண்டனின் எம்சிசி அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதையும் படிங்க:தோனி, யுவி, ரெய்னா உள்ளிட்ட 5 இந்தியர்களுக்கு லண்டனின் எம்சிசி வழங்கிய உயரிய கெளரவம் – ரசிகர்கள் மகிழ்ச்சி

அதை ஐசிசியும் ஏற்றுக்கொண்டதால் இன்று மன்கட் ரன் அவுட் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு ஜோஸ் பட்லரை அஸ்வின் அவுட் செய்த தருணமே முக்கிய காரணமாகும். ஆனால் தற்போது அவர்கள் ஒரே அணியில் இணைந்து விளையாடி வருவதால் இப்போது பட்லர் நிம்மதியுடன் விளையாடுவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement