தோனி, யுவி, ரெய்னா உள்ளிட்ட 5 இந்தியர்களுக்கு லண்டனின் எம்சிசி வழங்கிய உயரிய கெளரவம் – ரசிகர்கள் மகிழ்ச்சி

Raina-1
- Advertisement -

உலகம் முழுவதிலும் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட்டை என்ன தான் ஐசிசி தனது மேற்பார்வையில் கட்டுப்படுத்தினாலும் அதற்கான அடிப்படை விதிமுறைகளை இங்கிலாந்தின் லண்டனில் இருக்கும் மேர்லிபோர்ன் கிரிக்கெட் கிளப் அமைப்பு தான் உருவாக்கி கட்டுப்படுத்தி வருகிறது. நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட அந்த அமைப்பு தான் கிரிக்கெட்டில் உள்ள ஒவ்வொரு விதிமுறைகளையும் உருவாக்கி நடைமுறைப்படுத்தி காலத்திற்கு ஏற்ப அவ்வப்போது மாற்றங்களையும் நிகழ்த்தி வருகிறது. அந்தளவுக்கு பழமையான புகழ்பெற்ற அந்த அமைப்பு சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு நாடுகளுக்காக சிறந்து விளங்கி கிரிக்கெட்டுக்கு பெருமையும் புகழையும் சேர்த்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு வாழ்நாள் உறுப்பினர் உரிமையை கொடுத்து கௌரவிப்பது வழக்கமாகும்.

அந்த வரிசையில் தற்போது உலகம் முழுவதிலிருந்து 19 பேருக்கு வாழ்நாள் உறுப்பினர் அந்தஸ்தை எம்சிசி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதில் இந்தியாவிலிருந்து 5 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். முதலாவதாக 3 விதமான உலகக் கோப்பைகளை வென்று கொடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இந்தியாவை நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேற்றிய முதல் கேப்டனாக சாதனை படைத்து வரலாற்றின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக சாதனை படைத்த எம்எஸ் தோனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

5 இந்தியர்கள்:
அவருடன் 2007 டி20 உலக கோப்பை மற்றும் 2011 உலகக்கோப்பை வெல்வதற்கு முக்கிய பங்காற்றி 2000 – 2017 வரையிலான காலகட்டங்களில் மகத்தான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த யுவராஜ் சிங்க்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என்பது போல் 2011 உலகக் கோப்பை வெல்வதற்கு நாக் அவுட் போட்டிகளில் முக்கிய பங்காற்றி ஒருநாள் கிரிக்கெட்டில் 5500+ ரன்களை குவித்து மிகச் சிறந்த ஃபீல்டராகவும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் அசத்திய சுரேஷ் ரெய்னாவும் எம்சிசி வாழ்நாள் உறுப்பினர் அந்தஸ்தை பெற்றுள்ளார்.

இவர்களுடன் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டின் சச்சின் டெண்டுல்கர் என்று போற்றும் அளவுக்கு அதிக ரன்கள் குவித்து உலக சாதனை படைத்த முன்னாள் இந்திய கேப்டன் மிதாலி ராஜ் மற்றும் அதிக விக்கெட்களை எடுத்து உலக சாதனை படைத்துள்ள ஜூலன் கோஸ்வாமி ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

- Advertisement -

இவர்களுடன் 2019 உலகக் கோப்பை இங்கிலாந்துக்கு வென்ற இயன் மோர்கன், நட்சத்திர முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், தென்னாப்பிரிக்கா மிரட்டல் வேகப்பந்து வீச்சளர் டேல் ஸ்டைன், நியூசிலாந்தின் ஜாம்பவான் ராஸ் டைலர், பாகிஸ்தானின் ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸ் மற்றும் வங்கதேசத்தின் மகத்தான வீரர்களில் ஒருவரான மஸ்ரபி மோர்தசா உள்ளிட்ட 19 பேர் இந்த கௌரவத்தை பெற உள்ளார்கள். இது பற்றி எம்சிசி தலைமை நிர்வாகி கெய் லாவெண்டர் கூறியது பின்வருமாறு.

“எம்சிசி அமைப்பின் புதிய கௌரவ உறுப்பினர்களை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இன்று நாங்கள் அறிவித்துள்ள நபர்கள் நவீன சர்வதேச கிரிக்கெட்டில் மகத்தான செயல்பாடுகளை வெளிப்படுத்திய பெருமைக்குரியவர்கள். தற்போது அவர்களை எங்களுடைய கிளப்பிலும் சேர்த்து மேலும் மதிப்படைய வைக்க உள்ளோம். இத்துடன் களத்திற்கு வெளியே சிறந்து விளங்கிய இருவருக்கும் இந்த கௌரவத்தை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று கூறினார்.

- Advertisement -

எம்சிசி புதிய வாழ்நாள் உறுப்பினர்களின் பட்டியல்:
மெரிசா அகுலிரியா – வெஸ்ட் இண்டீஸ் (2008 – 2019)
எம்எஸ் தோனி – இந்தியா (2004 – 2019)
ஜூலன் கோஸ்வாமி – இந்தியா (2002 – 2022)
ஜென்னி கன் – இங்கிலாந்து (2004 – 2019)
முகமது ஹபீஸ் – பாகிஸ்தான் (2003 – 2021)
ரிச்சேல் ஹெய்ன்ஸ் – ஆஸ்திரேலியா (2009 – 2022)
லாரா மார்ஷ் – இங்கிலாந்து (2006 – 2019)
இயன் மோர்கன் – இங்கிலாந்து (2006 – 2022)

இதையும் படிங்க:IPL 2023 : சாதனைகளுக்காக விளையாடாத அவர மாதிரி மிடில் ஆர்டரில் வேற யாராலையும் இவ்ளோ ரன்கள் அடிக்க முடியாது – சேவாக் பாராட்டு

மஸ்ரபி மோர்தசா – வங்கதேசம் (2001 – 2020)
கெவின் பீட்டர்சன் – இங்கிலாந்து (2005 – 2014)
சுரேஷ் ரெய்னா – இந்தியா (2005 – 2014)
மித்தாலி ராஜ் – இந்தியா (1999 – 2022)
எமி சட்டர்வைட் – நியூஸிலாந்து (2007 – 2022)
யுவராஜ் சிங் – இந்தியா (2000 – 2017)
அன்யா சுருப்சோல் – இங்கிலாந்து (2008 – 2022)
டேல் ஸ்டைன் – தென் ஆப்பிரிக்கா (2004 – 2020
ராஸ் டெய்லர் – நியூஸிலாந்து (2006 – 2022)

Advertisement