IPL 2023 : சாதனைகளுக்காக விளையாடாத அவர மாதிரி மிடில் ஆர்டரில் வேற யாராலையும் இவ்ளோ ரன்கள் அடிக்க முடியாது – சேவாக் பாராட்டு

Sehwag
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்க வந்துள்ள ஐபிஎல் 2023 டி20 தொடரில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் தன்னுடைய முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக போராடி தோற்றது. இருப்பினும் தன்னுடைய கோட்டையான சேப்பாக்கத்தில் தமிழக ரசிகர்களின் ஆதரவுடன் 2வது போட்டியில் லக்னோவை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த சென்னை முதல் வெற்றியை பதிவு செய்து வெற்றிப்பாதைக்கு திருப்பியுள்ளது. அந்த போட்டியில் ருதுராஜ் கைக்வாட் 57, டேவோன் கான்வே 47 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன்களை குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய நிலையில் மொய்ன் அலி அற்புதமாக செயல்பட்டு 4 விக்கெட்டுகளை எடுத்து வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Dhoni

- Advertisement -

ஆனால் அவர்களை விட கடைசி ஓவரில் களமிறங்கிய கேப்டன் எம்எஸ் தோனி 145 – 150 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய இங்கிலாந்தின் மார்க் வுட் வீசிய அடுத்தடுத்த பந்துகளில் அதிரடியான சிக்சர்களை பறக்க விட்டு மெரினா கடற்கரைக்கு கேட்கும் அளவுக்கு சேப்பாக்கம் ரசிகர்களை மகிழ்வித்து 12 ரன்கள் குவித்து அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். இறுதியில் அந்த 12 ரன்கள் வெற்றியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதிலிருந்தே 41 வயதானாலும் கூடவே பிறந்த தம்முடைய ஃபினிஷிங் ஸ்டைல் எப்போதும் தம்மை விட்டு போகாது என்பதை தோனி நிரூபித்தார்.

சேவாக் பாராட்டு:
முதல் போட்டியிலும் இதே போலவே கடைசி நேரத்தில் 14* (7) ரன்கள் அடித்து அசத்திய அவர் இந்த 12 ரன்களையும் சேர்த்து ஐபிஎல் வரலாற்றில் 5000 ரன்களை எடுத்த முதல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் ஒட்டுமொத்தமாக 7வது பேட்ஸ்மேன் என்ற வரலாற்றுச் சாதனை படைத்தார். அதிலும் குறிப்பாக விராட் கோலி, ஷிகர் தவான், டேவிட் வார்னர், சுரேஷ் ரெய்னா என ஏற்கனவே 5000 ரன்களைக் கடந்த வீரர்கள் அனைவரும் டாப் ஆர்டரில் விளையாடி அந்த ரன்களை சேர்த்துள்ள நிலையில் தோனி மட்டுமே 5, 6, 7 போன்ற அழுத்தம் நிறைந்த கடினமான மிடில் ஆர்டரில் களமிறங்கி 5000 ரன்களை சேர்த்துள்ளார்.

MS Dhoni SIX

இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் 5000 ரன்கள் குவித்த முதல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார். இந்நிலையில் 5000, 7000 ரன்கள் போன்ற சாதனைகளுக்காக விளையாடாமல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடனேயே தோனி எப்போதும் விளையாடுவார் என்று பாராட்டும் முன்னாள் வீரேந்திர சேவாக் மிடில் ஆர்டரில் வேறு யாராலும் இவ்வளவு ரன்களை அடித்திருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நீங்கள் எம்எஸ் தோனியிடம் சென்று இதைக் கேட்டால் அவர் 5000, 3000 அல்லது 7000 ரன்கள் என்பதில் என்ன வித்தியாசம் என்று உங்களிடம் பதிலுக்கு கேள்வி கேட்பார். ஏனெனில் ரன்களை விட கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே அவருடைய எண்ணமாகும். அதைத்தான் அவர் இப்போதும் செய்துள்ளார். குறிப்பாக அவர் மைல்கல் சாதனைகளுக்காக விளையாடுபவர் என்று நான் நினைக்க மாட்டேன். நானும் எனது காலத்தில் அப்படி தான் விளையாடினேன்”

Sehwag

“எவ்வளவு ரன்கள் அடித்தோம் என்பதை யார் அறிவார்கள்? ஆனால் ஓய்வு பெற்ற பின் இந்த நம்பர்களை நீங்கள் நினைத்துப் பார்ப்பீர்கள் என்பதும் உண்மையாகும். ஏனெனில் ஓய்வுக்கு பின் வீரர்கள் எவ்வளவு ரன்கள் அடித்துள்ளார்கள் என்பதைத்தான் அனைவரும் நினைத்து பார்ப்பார்கள். மேலும் பொதுவாக டாப் ஆர்டரில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் தான் பெரிய ரன்களை அடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் எம்எஸ் தோனி பொதுவாக மிடில் ஆர்டர் அல்லது லோயர் மிடில் ஆர்டரில் வந்து 5000 ரன்களை அடித்துள்ளார்”

இதையும் படிங்க:வீடியோ : மிரட்டலான வேகத்தில் நிசாங்காவின் பேட்டை உடைத்த மில்னே, இலங்கையை தெறிக்க விட்டு வரலாற்று சாதனை

“அவர் விளையாடும் இடத்தில் வேறு எந்த வீரரும் இவ்வளவு ரன்களை அடித்திருக்க முடியாது. இருப்பினும் அவர் அந்த இடத்தில் தொடர்ச்சியாக ரன்களை அடித்து அவருடைய அணிக்காக வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். அவர் மிகப்பெரிய வீரர்” என்று பாராட்டினார்.

Advertisement