மிரட்டலான வேகத்தில் நிசாங்காவின் பேட்டை உடைத்த மில்னே, இலங்கையை தெறிக்க விட்டு வரலாற்று சாதனை

Adam Milne SL vs NZ
- Advertisement -

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் இழந்து 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை நழுவ விட்ட இலங்கை அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரிலும் 2 – 0 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்து அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பையும் கோட்டை விட்டது. அந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி டையில் முடிந்த நிலையில் சூப்பர் ஓவரில் அபாரமாக செயல்பட்ட இலங்கை ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று அடுத்தடுத்த தோல்விக்களுக்காக நியூசிலாந்துக்கு முதல் முறையாக பதிலடி கொடுத்தது.

அந்த நிலையில் இத்தொடரின் 2வது போட்டி மார்ச் 5ஆம் தேதியன்று இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு டுனிடின் நகரில் இருக்கும் யுனிவர்சிட்டி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இலங்கைக்கு எதிராக முதல் ஓவரை ஆடம் மில்னே வீசினார். பொதுவாகவே அதிரடியான வேகத்தில் பந்து வீசக்கூடிய அவர் இந்த போட்டியில் புதிய பந்தில் சற்று கூடுதலான வேகத்தில் வீசி ஆரம்பத்திலேயே இலங்கை வீரர் நிசாங்காவின் பேட்டை இரண்டாக உடைத்தார்.

- Advertisement -

மிரட்டம் வேகம்:
அதனால் ரசிகர்கள் வியந்த நிலையில் அடுத்த ஓவரிலேயே குசால் மெண்டிஸ் 10 (5) ரன்களில் பெஞ்சமனிடம் அவுட்டாக அதற்கடுத்த ஓவரில் ஆடம் மில்னே வேகத்துக்கு மீண்டும் தாக்கு பிடிக்க முடியாத நிசாங்கா 9 (9) ரன்களில் ஆட்டமிழந்து சென்றார். அதனால் 29/2 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்று தடுமாறிய இலங்கையை 3வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றிய குசால் பெரேரா 35 (32) ரன்களில் அவுட்டாக அடுத்த சில ஓவர்களில் டீ சில்வாவும் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 37 (26) ரன்களில் போராடி ஆட்டமிழந்து சென்றார்.

ஆனால் அடுத்து வந்த வீரர்களில் அசலங்கா 24 (18) ரன்கள் எடுக்க கேப்டன் சனக்கா 7, ஹஸரங்கா 9 என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானதால் 19 ஓவரிலேயே இலங்கையை 149 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஆடம் மில்னே 5 விக்கெட்களும் பெஞ்சமின் லிஸ்ட்டர் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

- Advertisement -

குறிப்பாக 4 ஓவரில் 26 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்த ஆடம் மில்னே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த பவுலர் என்ற புதிய வரலாற்று சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. அடம் மில்னே : 5/26, 2023*
2. ஓசினோ தாமஸ் : 5/28, 2020
3. ரவிச்சந்திரன் அஸ்வின் : 4/8, 2016
4. ஜோஸ் ஹேசல்வுட் : 4/12, 2022

அதை தொடர்ந்து 142 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு சுமாராக பதிவு செய்ய இலங்கை பவுலர்களை அடித்து நொறுக்கிய சாட் பௌஸ் 7 பவுண்டரியுடன் 31 (15) ரன்கள் எடுத்து அவுட்டானார். ஆனாலும் மறுபுறம் வெளுத்து வாங்கிய டிம் சைபர்ட் 3 பவுண்டரி 6 சிக்ஸருடன் 79* (43) ரன்களும் கேப்டன் டாம் லாதம் 20* (30) ரன்களும் எடுத்து சிறப்பான ஃபின்சிங் கொடுத்ததால் 14.4 ஓவரிலேயே 146/1 ரன்கள் எடுத்த நியூசிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி பெற்றது.

இதையும் படிங்க:GT vs DC : அவர் என்மேல வச்சிருக்க நம்பிக்கை தான் என்னோட இந்த சிறப்பான ஆட்டத்திற்கு காரணம் – சாய் சுதர்சன் மகிழ்ச்சி

இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி 5 விக்கெட்டுகளை எடுத்து சாதனையுடன் முக்கிய பங்காற்றிய ஆடம் மில்னே ஆட்டநாயகன் விருது வென்றார். மேலும் இந்த வெற்றியால் 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ள நியூசிலாந்து தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. இதை அடுத்து இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி ஏப்ரல் 8ஆம் தேதியன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement