GT vs DC : அவர் என்மேல வச்சிருக்க நம்பிக்கை தான் என்னோட இந்த சிறப்பான ஆட்டத்திற்கு காரணம் – சாய் சுதர்சன் மகிழ்ச்சி

Sai-Sudharsan
- Advertisement -

தமிழக அணியின் இளம் கிரிக்கெட் வீரரான சாய் சுதர்சன் கடந்த ஆண்டு குஜராத் அணிக்காக சிறப்பாக செயல்பட்ட வேளையில் இந்த ஆண்டும் குஜராத் அணிக்காக விளையாடி வரும் அவர் முதல் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக இம்பேக்ட் பிளேயராக களமிறங்கி சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தார். அதனை தொடர்ந்து டெல்லி அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் கேன் வில்லியம்சன்-க்கு மாற்று வீரராக மூன்றாவது இடத்தில் களமிறங்கிய சாய் சுதர்சன் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Sai-Sudharsan

- Advertisement -

அதன்படி நேற்று அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் தொடரின் ஏழாவது லீக் போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 162 ரன்கள் குவித்தது. பின்னர் 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட துவங்கிய குஜராத் அணியானது 54 ரன்கள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

அப்போது நான்காவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த தமிழக வீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் நான்காவது விக்கெட்க்கு 53 ரன்கள் சேர்த்து அந்த அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர். அதிலும் குறிப்பாக விஜய் சங்கர் 29 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில் சாய் சுதர்சன் இதுவரை ஆட்டமிழக்காமல் 48 பந்துகளை சந்தித்து நான்கு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 62 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

GT

அதோடு அவரது இந்த சிறப்பான ஆட்டம் குறித்து கேப்டன் ஹார்டிக் பாண்டியா உட்பட பல்வேறு வீரர்களும் பாராட்டினை தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய சாய் சுதர்சன் கூறுகையில் : என்னை நம்பி குஜராத் அணியில் தக்கவைத்த ஹர்திக் பாண்டியாவிற்கு நன்றி. இந்த டெல்லி மைதானத்தில் இதுவே எனக்கு முதல் போட்டி.

- Advertisement -

எனவே நான் சரியாக செயல்பட வேண்டும் என்று நினைத்தேன். நான் பேட்டிங் செய்ய களமிறங்கும் போது சூழல் இக்கட்டான நிலையில் இருந்தாலும் நான் பதட்டம் அடையாமல் தான் விளையாடினேன். அதுமட்டும் இன்றி தேவையான நேரத்தில் சரியான கால்குலேஷன் உடன் சில ஷாட்டை முயற்சி செய்தும் பார்த்தேன். பந்து சற்று நின்று வந்ததால் என்னால் சரியான ஷாட்களை தேர்வு செய்து ஆட முடிந்தது.

இதையும் படிங்க : IPL 2023 : காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக அதிரடி இங்கிலாந்து வீரரை வாங்கிய கொல்கத்தா – விவரம் இதோ

என்னுடைய திட்டம் எல்லாம் போட்டியை கடைசிவரை கொண்டு சென்று வெற்றி பெற வேண்டும் என்பதுதான். அந்த வகையில் இந்த போட்டியில் நான் விளையாடி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. அதோடு என்னை தக்க வைத்த கேப்டன் மற்றும் என்மீது நம்பிக்கை வைத்த அணி நிர்வாகம் என அனைவருக்கும் நன்றி என சாய் சுதர்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement