IPL 2023 : காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக அதிரடி இங்கிலாந்து வீரரை வாங்கிய கொல்கத்தா – விவரம் இதோ

Shreyas-1
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்வதற்காக களமிறங்கியுள்ள 10 அணிகளும் தலா 1 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 2 கோப்பைகளை வென்று 3வது வெற்றிகரமான அணியாக திகழும் கொல்கத்தா 2014க்குப்பின் 3வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் இத்தொடரில் விளையாடி வருகிறது. ஆனால் அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே கேப்டன் ஸ்ரேயாஸ் காயத்தால் வெளியேறியது பெரிய பின்னடைவை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தமின்றி ரசிகர்கள் எதிர்பாராத வகையில் நித்திஷ் ராணா புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவரது தலைமையில் பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற கொல்கத்தா ஏப்ரல் 5ஆம் தேதியன்று நடைபெறும் பெங்களூருவுக்கு எதிரான தன்னுடைய 2வது போட்டியில் வெற்றி பாதைக்கு திருப்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தால் விலகிய நிலையில் அவருக்கான மாற்று வீரரை கொல்கத்தா அணி நிர்வாகம் அறிவிக்காமல் இருந்து வந்தது. அந்த நிலைமையில் வங்கதேசம் ஆல் ரவுண்டர் சாகிப் அல் ஹசனும் ஒரு போட்டியில் கூட விளையாடுவதற்கு முன்பாகவே இந்த ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது கொல்கத்தா அணிக்கு மேலும் பின்னடைவை கொடுத்தது.

- Advertisement -

இங்கிலாந்து வீரர்:
அதனால் அந்த அணியில் அந்த 2 நட்சத்திர வீரர்களுக்கான இடங்களும் காலியாக இருப்பதால் யாரையாவது வாங்குமாறு கொல்கத்தா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வந்தார்கள். இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் வாங்கப்பட்டுள்ளதாக கொல்கத்தா அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இங்கிலாந்தின் அதிரடி தொடக்க வீரரான அவர் 2019 உலகக்கோப்பை வெற்றிக்கு முக்கிய பங்காற்றி இதுவரை 64 போட்டிகளில் 1522 ரன்களை 137.62 என்ற நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வருகிறார்.

மேலும் ஐபிஎல் தொடரில் 2017, 2018 ஆகிய சீசன்களில் டெல்லி அணிக்காக விளையாடியிருந்த அவர் கடைசியாக 2021 சீசனில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். அந்த வரிசையில் கடந்த வருடம் குஜராத் அணிக்காக விளையாட தேர்வான அவர் குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்பியதால் கடைசி நேரத்தில் வெளியேறினார். அந்த நிலையில் 2023 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் 1.5 கோடி அடிப்படை விலையில் பங்கேற்ற அவரை எந்த அணியும் வாங்கவில்லை.

- Advertisement -

இருப்பினும் தற்போது காயமடைந்த தங்களுக்கு கேப்டனுக்கு பதிலாக ஜேசன் ராய் 2.8 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளதாக கொல்கத்தா நிர்வாகம் அறிவித்துள்ளது அந்த அணி ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஏனெனில் டாப் ஆர்டரில் விளையாடக்கூடிய அவர் பெரும்பாலும் ஓப்பனிங் இடத்தில் விளையாடி விரைவாக ரன்களை குவிக்கும் திறமை கொண்டவர். அந்த நிலையில் பஞ்சாப்புக்கு எதிரான முதல் போட்டியில் ரஹ்மத்துல்லா குர்பாஸ் மற்றும் மந்திப் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கி பெரிய துவக்கத்தை கொடுக்காதது கொல்கத்தாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது.

அதிலும் குறிப்பாக ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மத்துல்லா குர்பாஸ் ஓரளவு அதிரடியாக 22 (16) ரன்கள் எடுத்த நிலையில் காலம் காலமாகவே சுமாராக செயல்பட்டு வரும் மந்திப் சிங் 2 (4) ரன்னில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றத்தை கொடுத்தார். எனவே அவருக்கு பதிலாக அடுத்து வரும் போட்டிகளில் ஜேசன் ராய் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவது நிச்சயமாக கொல்கத்தா அணிக்கு பெரிய பலத்தை சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படிங்க: IPL 2023 : இது ஒன்னும் ராஞ்சி ட்ராபி இல்ல, மெதுவாக விளையாடி தோல்விக்கு காரணமான இளம் இந்திய வீரரை – கலாய்க்கும் ரசிகர்கள்

மொத்தத்தில் தற்போது வாங்கப்பட்டுள்ள அவர் இன்று நடைபெறும் பெங்களூருக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பில்லை. ஏனெனில் இங்கிலாந்தில் இருந்து இன்று புறப்படும் அவர் இன்னும் ஓரிரு நாட்களில் கொல்கத்தா அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அடுத்ததாக வரும் ஏப்ரல் 9ஆம் தேதி நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெறும் தங்களுடைய 3வது போட்டியில் ஜேசன் ராய் கொல்கத்தா அணிக்காக விளையாடுவார் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement