IPL 2023 : இது ஒன்னும் ராஞ்சி ட்ராபி இல்ல, மெதுவாக விளையாடி தோல்விக்கு காரணமான இளம் இந்திய வீரரை – கலாய்க்கும் ரசிகர்கள்

Sarfraz Khan
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 தொடரில் ஏப்ரல் 4ஆம் தேதியன்று நடைபெற்ற 7வது லீக் போட்டியில் டெல்லியை அதன் சொந்த மண்ணில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த நடப்பு சாம்பியன் குஜராத் இந்த வருடம் பங்கேற்று 2 போட்டிகளிலும் 2 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி நிர்ணயிக்கப்பட்ட 20 அவர்களின் சுமாராக செயல்பட்டு 162/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் டேவிட் வார்னர் 37 (32) ரன்களும் அக்சர் படேல் 36 (22) ரன்களும் எடுக்க குஜராத் சார்பில் அதிகபட்சமாக முகமது சாமி மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதை தொடர்ந்து 163 ரன்களை துரத்திய குஜராத்துக்கு சுப்மன் கில் 14, சஹா 14, கேப்டன் பாண்டியா 5 என ஓகே பேட்ஸ் மங்கள் சொத்திரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் தமிழக வீரர்கள் விஜய் சங்கர் 29 (23) சாய் சுதர்சன் 62* (48) மற்றும் டேவிட் மில்லர் 31* (16) என முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் செயல்பட்டு தேவையான ரன்களை எடுக்க வைத்து 18.1 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய தமிழக வீரர் சாய் சுதர்சன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

ராஞ்சி ட்ராபி இல்ல:
முன்னதாக இந்த போட்டியில் டெல்லி தோல்வியை சந்திப்பதற்கு பேட்டிங்கில் சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக பிரிதிவி ஷா 7, மிட்சேல் மார்ஷ் 4 என முக்கிய விரல்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி சென்ற நிலையில் 4வது இடத்தில் களமிறங்கிய சர்ஃபராஸ் கான் சரிவை சரி செய்வதற்காக நிதானமாக விளையாடினார். குறிப்பாக 5வது ஓவரில் களமிறங்கிய அவர் எதிர்புறத்தில் அபிஷேக் போரேல் 20, ரிலீ ரோசவ் 0 என இதர வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் நங்கூரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

ஆனால் 16 ஓவர்கள் வரை நிலையாக பேட்டிங் செய்தும் கடைசி வரை அதிரடியை துவக்காமல் மெதுவாக விளையாடி வெறும் 2 பவுண்டரியுடன் 30 (34) ரன்களை 88.24 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து முக்கிய நேரத்தில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக இன்னும் சற்று நிலைத்து நின்று விளையாடி குறைந்தபட்சம் 100க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் விளையாடி இருந்தால் கூட கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி அக்சர் படேல் எதிர்புறத்தில் முழுமையான பேட்ஸ்மேன் இருக்கிறார் என்ற சுதந்திரத்துடன் இன்னும் சற்று அதிரடியாகவும் அழுத்தமின்றி விளையாடி கூடுதலாக ரன்களை சேர்த்திருக்க முடியும்.

- Advertisement -

அதை விட கடந்த சில வருடங்களாகவே உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக் கோப்பையில் ரன் மெஷினாக சதத்தையும் இரட்டை சதத்தையும் விளாசி வரும் சர்பராஸ் கான் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனுக்கு பின் அதிக பேட்டிங் சராசரியில் பெரிய ரன்களை குவித்து தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாடுவதற்காக தேர்வு குழுவினரின் கதவுகளை தட்டி வருகிறார். ஆனாலும் கண்டுகொள்ளாத தேர்வு குழு ரஞ்சி கோப்பைக்கு அவமானம் செய்து வருவதாக நிறைய விமர்சனங்கள் இருந்தன.

உண்மையை சொல்ல வேண்டுமெனில் சமீப காலங்களாகவே ரஞ்சிக் கோப்பை விட ஐபிஎல் தொடரில் அசத்தும் வீரர்களுக்கு தான் இந்திய அணியில் முன்னுரிமை கிடைக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் ரஞ்சிக்கோப்பையில் முரட்டுத்தனமாக செயல்படும் வாய்ப்பு பெறாத சர்பராஸ் கான் இந்த ஐபிஎல் தொடரில் அசத்தினால் நிச்சயம் இந்தியாவுக்காக தேர்வாக அதிக வாய்ப்புள்ளது. ஆனால் இங்கே அதிரடியாக விளையாட வேண்டிய அவர் ரஞ்சிக் கோப்பை போலவே லக்னோவுக்கு எதிரான முதல் போட்டியில் 4 (9) ரன்களும் நேற்றைய போட்டியில் 30 (34) ரன்களும் எடுத்து குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி தோல்விக்கு காரணமாக வகையில் செயல்பட்டு வருகிறார்.

இதையும் படிங்க:GT vs DC : நல்லவேளை எங்க பவுலர்ஸ் காப்பாத்திட்டாங்க. டெல்லி அணிக்கெதிரான வெற்றிக்கு பிறகு – ஹார்டிக் பாண்டியா பேசியது என்ன?

குறிப்பாக கடந்த 10 ஐபிஎல் போட்டிகளில் வெறும் 139 ரன்களை 113 என்ற சுமரான ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டுமே எடுத்துள்ளார். அதனால் ஏமாற்றமடைந்துள்ள ரசிகர்கள் மெதுவாக விளையாடுவதற்கு இது ஒன்றும் ரஞ்சிக் கோப்பை கிடையாது இப்படி விளையாடினால் உங்களுக்கு இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைக்காது என்று அவரை கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement