GT vs DC : நல்லவேளை எங்க பவுலர்ஸ் காப்பாத்திட்டாங்க. டெல்லி அணிக்கெதிரான வெற்றிக்கு பிறகு – ஹார்டிக் பாண்டியா பேசியது என்ன?

Sai-Sudharsan-and-Pandya
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் ஏழாவது லீக் போட்டியானது நேற்று டெல்லி அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி டெல்லி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது. ஏற்கனவே தங்களது துவக்க ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்திய குஜராத் அணி தற்போது டெல்லி அணியையும் வீழ்த்தி தங்களது வலிமையை நிரூபித்துள்ளது.

GT

- Advertisement -

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியானது 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்தது. பின்னர் 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது 18.1 ஓவரில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா கூறுகையில் : இந்த போட்டி ஆரம்பிக்கும் போது என்ன நடக்கப்போகிறது என்பது சரியாக எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக ஏதோ ஒரு விடயம் நடக்கும் என்று நினைத்தேன். அந்த வகையில் பவர்பிளே-வின்போது நாங்கள் 15 முதல் 20 ரன்கள் வரை அதிகமாக கொடுத்து விட்டோம்.

Alzarri Joseph

இருப்பினும் எங்களது பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி டெல்லி அணியை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எப்பொழுதுமே நான் ஒரு விஷயத்தை நம்புகிறேன். அதை தான் எங்களது அணி வீரர்களிடமும் சொல்கிறேன். அந்த வகையில் வீரர்களை மகிழ்ச்சியாக போட்டியில் விளையாட சொல்கிறேன். அப்போதுதான் அவர்களது எண்ணமும் தெளிவாக இருக்கும். அந்த வகையில் இந்த போட்டியை மகிழ்ச்சியாக விளையாடி வெற்றி பெற்றது கூடுதல் சிறப்பான ஒன்று. மகிழ்ச்சியுடன் விளையாடினால் முடிவுகளும் நமக்கு சாதகமாக அமையும்.

- Advertisement -

சாய் சுதர்சன் இந்த போட்டியில் மிக அற்புதமாக விளையாடினார். கடந்த 15 நாட்களாகவே அவர் எங்களுடன் இணைந்து பயிற்சி செய்ததிலிருந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதனுடைய ரிசல்ட்டை தான் இது போன்ற போட்டிகளில் நீங்கள் பார்க்கிறீர்கள். நான் சொல்வது தவறாக இருக்காது இன்னும் இரண்டு ஆண்டுகளில் நிச்சயம் அவர் பிரான்ச்சைசி கிரிக்கெட்டில் மிகப்பெரிய வீரராக வருவார்.

இதையும் படிங்க : IPL 2023 : இன்னும் 2 வருசத்துல அவர் இந்தியாவுக்காக விளையாடுவாரு பாருங்க – தமிழக வீரரை பாராட்டிய பாண்டியா

அதுமட்டுமின்றி இந்திய அணியில் கூட அவர் இடம்பெற்று மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நான் கருதுகிறேன் என ஹார்டிக் பாண்டியா சாய் சுதர்ஷனை புகழ்ந்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement