இவரா நம்மள ஜெயிக்க வெச்சாரு, வெறித்தனமாக கொண்டாடிய அஷ்வின் – வாயை பிளந்து பாராட்டிய டிராவிட், கோலி

Ashwin Pavilion
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடிய இந்தியா முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் இழந்து அவமான தோல்வியை சந்தித்தாலும் அடுத்ததாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் கைப்பற்றி 2023 ஜூன் மாதம் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்து கொண்டுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் இல்லாத நிலையில் சட்டோகிராம் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா தாக்கா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது.

அப்போட்டியில் மிகவும் சுலபமான வெற்றியை சொதப்பலான செயல்பாடுகளால் இந்தியா போராடி பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் 2 இன்னிங்ஸிலும் பந்து வீச்சில் அசத்திய இந்தியா கடைசியில் வங்கதேசம் நிர்ணயித்த வெறும் 145 ரன்களை 3வது நாளின் 3 மணிக்கு சேசிங் செய்ய துவங்கியது. அப்போது இங்கிலாந்து போல அதிரடி சரவெடியாக விளையாடி ஒன்றரை மணி நேரத்தில் போட்டியை முடிக்கும் என்று ஆவலுடன் காத்திருந்த இந்திய ரசிகர்களுக்கு சுப்மன் கில் 7, கேப்டன் ராகுல் 2, விராட் கோலி 1, புஜாரா 6 என முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.

- Advertisement -

அஷ்வின் வெறித்தனம்:
அதனால் 45/4 என தடுமாறிய இந்தியாவுக்கு 4வது நாளில் 100 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அடித்து நொறுக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிசப் பண்ட் 9 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். போதாக்குறைக்கு மறுபுறம் போராடிய அக்சர் படேல் 34 ரன்களுக்கு அவுட்டானதால் 74/7 என தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை 8வது விக்கெட்டுக்கு நங்கூரமாக நின்று 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றிய ஸ்ரேயாஸ் ஐயர் 29* ரன்களும் ரவிச்சந்திரன் அஷ்வின் 42* ரன்களும் குவித்து வெற்றி பெற வைத்தனர்.

குறிப்பாக ஒரு கட்டத்தில் அசாத்தியமாக தெரிந்த வெற்றியை 1 ரன்னில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை வங்கதேசம் நழுவ விட்டதை பயன்படுத்திய தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆரம்பத்தில் நிதானத்தை காட்டி கடைசி நேரத்தில் 5 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலையை கொடுத்த மெஹதி ஹசன் ஓவரில் 16 ரன்கள் விளாசி அபார பினிஷிங் செய்தார். அதனாலேயே அந்த வெற்றியை வெறித்தனமாக கொண்டாடிய அவர் காற்றில் பாய்ந்து எதிரணிக்கு பஞ்ச் கொடுத்து இந்தியாவின் வெற்றியை அடி மனதிலிருந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.

- Advertisement -

அந்த வெற்றியை வசமாக்கிய அவரை வீரேந்திர சேவாக் உள்ளிட்ட முன்னாள் வீரர்களும் இந்திய ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மனதார பாராட்டி வருகிறார்கள். மறுபுறம் அந்த பரபரப்பான தருணத்தை பெவிலியினில் இருந்து பார்த்த விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் நல்லவேளை அஷ்வின் நம்மை வெற்றி பெற வைத்து விட்டார் என்று கொண்டாடியதை போல பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோரும் கொண்டாடினார்கள். ஆனால் விராட் கோலி, ராகுல் போன்றவர்கள் மட்டும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகாமல் தலா 20 ரன்களை எடுத்திருந்தால் கூட இந்தியா எளிதாக வென்றிருக்கும்.

இருப்பினும் வங்கதேசம் போன்ற கத்துக்குட்டி அணியிடம் சரணடைந்த அவர்கள் இப்போட்டியில் மட்டுமல்லாது சமீப காலங்களாகவே முக்கிய தருணங்களில் சொற்ப ரன்களில் அவுட்டாகி இந்தியாவை கை விடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். குறிப்பாக கேப்டன் என்ற முறையில் பொறுப்புடன் விளையாட வேண்டிய கேஎல் ராகுல் கொஞ்சமும் முன்னேறாமல் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி கேப்டனாகவும் சுமாராகவே செயல்பட்டார்.

இதையும் படிங்க: இனியாவது திட்டாதீங்க , அஷ்வினுடன் வரலாற்றின் விலைமதிப்பு மிக்க பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றிய ஸ்ரேயாஸ் ஐயர்

இருப்பினும் அஷ்வின் உள்ளிட்ட இதர வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதால் முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக அவரது பெயரில் முதல் வெற்றியை இந்தியா பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement