இனியாவது திட்டாதீங்க , அஷ்வினுடன் வரலாற்றின் விலைமதிப்பு மிக்க பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றிய ஸ்ரேயாஸ் ஐயர்

Shreyas Iyer vs Ban
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்ற டெஸ்ட் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஆரம்பத்திலே முன்னிலை பெற்ற இந்தியா டிசம்பர் 22ஆம் தேதியன்று தாக்கா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டியிலும் போராடி 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் இந்தியாவின் திறமையான பந்து வீச்சில் 221 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மோனிமுல் ஹைக் 84 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் தலா 4 விக்கெட்கள் எடுத்தனர்.

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்களின் சொதப்பலால் ஒரு கட்டத்தில் 94/4 என திண்டாடினாலும் ரிசப் பண்ட் 93 ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 87 ரன்களும் எடுத்ததால் தப்பி 314 ரன்கள் குவித்தது. அதைத்தொடர்ந்து 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸ் விளையாடிய வங்கதேசம் மீண்டும் இந்திய பவுலர்களின் கட்டுக்கோப்பான பந்து வீச்சில் 231 ரன்கள் மட்டும் எடுத்தது. அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 37 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்சர் படேல் 3 விக்கெட்கள் எடுத்தார்.

- Advertisement -

ஸ்ரேயாஸை திட்டாதீங்க:
இறுதியில் 146 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியா ராகுல் 2, கில் 7, புஜாரா 6, விராட் கோலி 1 என முக்கிய வீரர்களின் சொதப்பலால் 45/4 என ஆரம்பத்திலேயே திண்டாடியது. அந்த நிலையில் வெற்றிக்கு 100 ரன்கள் தேவைப்பட்ட போது ரிஷப் பண்ட் 9 ரன்களும் வெற்றிக்கு போராடிய அக்சர் படேல் 34 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதனால் 74/7 என்ற நிலையில் தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை 8வது விக்கெட்டுக்கு நங்கூரமாக நின்று 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றிய அஷ்வின் 42* ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 29* ரன்களும் எடுத்து போராடி வெற்றி பெற வைத்தனர்.

இதில் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி அபார பினிஷிங் கொடுத்த அஷ்வின் ஆட்டநாயகன் விருதையும் நிறைய பாராட்டுகளையும் பெற்று வரும் நிலையில் ஆரம்பத்தில் அவரை விட சிறப்பாக விளையாடி 4 பவுண்டரியுடன் 29* ரன்கள் எடுத்த ஸ்ரேயாஸ் ஐயரும் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். சொல்லப்போனால் முதல் இன்னிங்ஸில் ஏற்கனவே 87 ரன்கள் குவித்த அவர் முதல் போட்டியிலும் 86 ரன்கள் விளாசி 2 – 0 (2) என்ற கணக்கில் இந்தியா இத்தொடரை வெல்வதில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். முன்னதாக கடந்த 2017இல் அறிமுகமாகி நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தும் அவர் உயரமான வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் ஷார்ட் பிட்ச் பந்துகளில் தடுமாறி அவுட்டாவதை வழக்கமாக வைத்துள்ளார்.

- Advertisement -

அதனால் சமீப காலங்களில் கடுமையான விமர்சனங்களை சந்தித்த ரசிகர்களின் கிண்டல்களுக்கு உள்ளானார். ஆனால் உலகில் பலவீனம் இல்லாதவர்கள் யாரும் இல்லை என்பது போல் அந்த பலவீனம் இருந்தாலும் நிறைய பலத்தை கொண்டுள்ள அவர் இந்த வருடம் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் முறையே 422, 724, 463 என 1609 ரன்களை குவித்துள்ளார். இதன் வாயிலாக 2022ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக சாதனை படைத்துள்ள அவர் உண்மையாகவே பாராட்டுதலுக்கு உரியவராக செயல்பட்டுள்ளார்.

குறிப்பாக இப்போட்டியில் 8வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவரும் அஷ்வினும் இந்தியா எடுத்த 145 ரன்களில் 48.96% ரன்களை குவித்து வெற்றி பெற வைத்தார்கள். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட போட்டியில் 8வது விக்கெட்டுக்கு அதிக சராசரி ரன்களை பங்களிப்பாக கொடுத்த ஜோடி என்ற பெருமையையும் அவர்கள் படைத்துள்ளனர்.

இதையும் படிங்க:அஷ்வினை சைன்டிஸ்ட் ஆக்கி வித்தியாசமான முறையில் வாழ்த்துக்களை தெரிவித்த – வீரேந்திர சேவாக்

அப்படி விலைமதிப்பு மிக்க பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடி டெஸ்ட் கிரிக்கெட்டில் 4வது இன்னிங்சில் 8வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த 2வது இந்திய ஜோடி என்ற பெருமையும் பெற்றது. அந்த பட்டியல்:
1. அமர் சிங் – லால் சிங் : 74 (1932)
2. ரவிச்சந்திரன் அஷ்வின் – ஸ்ரேயாஸ் ஐயர் : (2022)*

Advertisement