அஷ்வினை சைன்டிஸ்ட் ஆக்கி வித்தியாசமான முறையில் வாழ்த்துக்களை தெரிவித்த – வீரேந்திர சேவாக்

Sehwag-and-Ashwin
- Advertisement -

பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது அங்கு நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை (2-1) என்ற கணக்கில் இழந்த வேளையில், கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியானது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி வங்கதேச அணியை வாஷ்அவுட் செய்துள்ளது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு இந்த டெஸ்ட் தொடரின் மூலம் இந்திய அணி பழி தீர்த்துள்ளது.

அதன்படி கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி துவங்கிய இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய வங்கதேச அணி தங்களது முதல் இன்னிங்சில் 227 ரன்களை குவித்தது. பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது 314 ரன்களை குவித்தது.

- Advertisement -

அதன் காரணமாக 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய பங்களாதேஷ் அணியானது 231 ரன்களை குவித்தது. இதனால் இந்திய அனிங்கு 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்த இலக்கினை இந்திய அணி எளிதாக விரட்டி எட்டிப்பிடிக்கும் என்று எதிர்பார்த்த வேளையில் மெஹதி ஹாசன் மற்றும் சாகிப் அல் ஹசன் ஆகியோரது சிறப்பான பந்துவீச்சினால் துவக்கத்திலிருந்தே தடுமாறியது. ஒரு கட்டத்தில் 37 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்த இந்திய அணியானது 74 ரன்களுக்கு 7 இழந்து பெரிய அளவில் ஆட்டம் கண்டது.

- Advertisement -

இந்நிலையில் அந்த இக்கட்டான சூழலில் கைகோர்த்த ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் அஷ்வின் ஆகியோரது ஜோடி மேலும் விக்கெட்டுகளை சரிய விடாமல் இறுதிவரை சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர். இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் 29 ரன்களையும், அஷ்வின் 42 ரன்களையும் குவித்தனர். அவர்கள் இருவரது இந்த ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

இதையும் படிங்க : நீங்க போயி கல்யாணம் பண்ணினக்கோங்க. கே.எல் ராகுலை டீமில் இருந்து வெளியேற்ற – பி.சி.சி.ஐ திட்டம்

இந்நிலையில் இந்திய அணியை தோல்வியிலிருந்து மீட்டெடுத்த இந்த ஜோடியை பாராட்டிய சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் : அஷ்வின் ஒரு சைண்டிஸ் போல இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து “இந்த சைன்டிஸ்ட் எப்படியோ அதை செய்துவிட்டார். சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்து அஷ்வின் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியை காப்பாற்றிவிட்டனர் என்று அவர்கள் இருவரையும் பாராட்டியுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

Advertisement