நீங்க போயி கல்யாணம் பண்ணினக்கோங்க. கே.எல் ராகுலை டீமில் இருந்து வெளியேற்ற – பி.சி.சி.ஐ திட்டம்

KL-Rahul
- Advertisement -

வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது அங்கு நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை (2-1) என்ற கணக்கில் இழந்தது. அதனைத்தொடர்ந்து இன்றுடன் நடைபெற்று முடிந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில் இந்திய அணி பெற்ற இந்த வெற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதியாகும் வாய்ப்பினை உயிர்ப்புடன் வைத்துள்ளது.

IND-vs-BAN

- Advertisement -

இந்த வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றதை அடுத்து வாழ்த்துக்கள் குவிந்து வரும் அதேவேளையில் இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் மீது அதிகளவு விமர்சனங்களும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகின்றன.

ஏனெனில் சமீப காலமாகவே தனது பேட்டிங் பார்மை இழந்து தடுமாறி வரும் கே.எல் ராகுல் இந்த டெஸ்ட் தொடரிலாவது பார்முக்கு திரும்புவார் என்று அனைவரும் எதிர்பார்த்தவேளையில் இந்த டெஸ்ட் தொடரிலும் கே.எல் ராகுல் ஏமாற்றத்தையே அளித்தார். இதன்காரணமாக நல்ல திறமையுடன் இருக்கும் இளம்வீரர்களுக்கு வாய்ப்பினை வழங்கலாம் என்று பலரும் கூறி வருகின்றனர்.

KL Rahul 1

இந்நிலையில் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் இந்திய அணியானது வெறும் ஒரு வார இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. அந்தவகையில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி ஜனவரி 3 ஆம் தேதி முதல் ஜனவரி 15 ஆம் தேதி வரை 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இருந்து கே.எல் ராகுலை நீக்க இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனெனில் சமீபமாகவே சொதப்பி வரும் அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் உள்ளதாலும், அவரது இடத்திற்கு பல இளம் வீரர்கள் திறமையுடன் வாய்ப்புக்காக காத்திருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : சச்சினுக்கு அடுத்த இந்தியாவின் மேட்ச் வின்னராக அஷ்வின் அபார சாதனை – விமர்சித்தவர்களுக்கு தமிழக ரசிகர்கள் பதிலடி

மேலும் அவரது பேட்டிங் பார்ம் மோசமாக இருப்பது மட்டுமின்றி அவரது திருமணமும் ஜனவரி மாத இறுதியிலோ அல்லது பிப்ரவரி மாத துவக்கத்திலோ நடைபெறவுள்ளது. எனவே அதையும் முன்வைத்து அவருக்கு ஓய்வளிக்க பி.சி.சி.ஐ முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement