ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் அமெரிக்காவில் கோலாகலமாக துவங்கி நடைபெற உள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்கப் போகும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட உலகின் டாப் கிரிக்கெட் அணிகள் கோப்பையை வெல்வதற்காக பலப்பரீட்சை நடத்த உள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகள் எனப்படுகிறது.
குறிப்பாக அமெரிக்காவில் வரலாற்றிலேயே முதல் முறையாக இம்முறை ஐசிசி தொடர் நடைபெற உள்ளது. அங்கே உள்ள நியூயார்க் நகரில் வரும் ஜூன் ஒன்பதாம் தேதி பரம எதிரி பாகிஸ்தான் அணியை இந்தியா சந்திக்க உள்ளது. அதனால் வழக்கம் போல அந்த போட்டிக்கு ரசிகர்களிடம் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடரில் நாக் அவுட் போட்டிகளுக்கான விதிமுறைகளை ஐசிசி வெளியிட்டுள்ளது.
250 நிமிடம்:
பொதுவாக ஐசிசி தொடர்களில் செமி ஃபைனல் போட்டிகளுக்கு மழையை கருத்தில் கொண்டு ரிசர்வ் நாள் கடைபிடிப்பது வழக்கமாகும். ஆனால் இம்முறை ஜூன் 29ஆம் தேதி பார்படாஸ் நகரில் நடைபெற உள்ள ஃபைனல் போட்டிக்கு மட்டுமே ரிசர்வ் நாள் கடைபிடிக்கப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. இருப்பினும் ஜூன் 27 ஆகிய தேதிகளில் முறையே ட்ரினிடாட் மற்றும் கயானா ஆகிய நகரங்களில் நடைபெற உள்ள 2 செமி ஃபைனல் போட்டிகளுக்கு ரிசர்வ் நாள் ஒதுக்கப்படாது என்று ஐசிசி அறிவித்துள்ளது.
இதற்கான காரணம் என்னவெனில் ட்ரினிடாட் நகரில் முதல் செமி ஃபைனல் பகல் நேரத்தில் நடைபெற உள்ளது. ஆனால் கயானாவில் நடைபெற உள்ள 2வது செமி ஃபைனல் இரவு நேரத்தில் நடைபெற உள்ளது. அதனால் ரிசர்வ் நாள் கடைபிடித்தால் அந்த 2 போட்டிகளுக்களை ஒளிபரப்புவதில் மோதல் ஏற்படும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இருப்பினும் மழையால் போட்டி பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக முதல் செமி ஃபைனலுக்கு எக்ஸ்ட்ரா 60 நிமிடங்கள் கொடுக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. அத்துடன் இரண்டாவது செமி ஃபைனல் போட்டிக்கு எக்ஸ்ட்ராவாக 250 நிமிடங்கள் ஒதுக்கப்படுவதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது. அதை விட இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெறும் பட்சத்தில் 2வது செமி ஃபைனலில் மட்டுமே விளையாடும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: அவர் ரொம்பவே கஷ்டப்படுத்திட்டாரு.. லக்னோ அணிக்கெதிரான வெற்றி குறித்து பேசிய – ரிஷப் பண்ட் பேட்டி
இதற்கான காரணம் என்னவெனில் முதல் செமி ஃபைனல் இந்திய நேரப்படி ஜுன் 27 காலை 6:00 மணிக்கும் இரண்டாவது செமி ஃபைனல் ஜுன் 27 இரவு 8 மணிக்கும் நடைபெற உள்ளது. அந்த வகையில் காலை நேரத்தில் துவங்கினால் இந்திய ரசிகர்கள் பெரும்பாலானவர்கள் முதல் போட்டியை பார்க்க மாட்டார்கள். அதனாலேயே 2வது போட்டி இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.