வீடியோ : அவ்ளோ தெனாவட்டா? வார்னருக்கு மறுப்பு தெரிவித்த பிரிதிவி ஷா – அடுத்த பந்தில் நேர்ந்த பரிதாபம், விளாசிய டௌல்

- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி மட்டும் இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளிலும் 5 தொடர் தோல்விகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடி வருகிறது. அதனால் 2013க்குப்பின் 10 வருடங்கள் கழித்து முதல் முறையாக தங்களுடைய முதல் 5 போட்டிகளில் தோற்றுள்ள அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பையும் ஆரம்பத்திலேயே 50% கோட்டை விட்டுள்ளது. அந்த அணியின் இந்த தோல்விக்கு பேட்டிங் துறையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் இந்திய வீரர் பிரத்திவி ஷா சுமாராக செயல்பட்டு முக்கிய காரணமாக அமைந்து வருகிறார்.

2018 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பை கேப்டனாக வென்று கொடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்தினார். ஆனால் லாரா, சச்சின், சேவாக் ஆகியோர் கலந்த கலவை என அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சொன்ன வார்த்தைகளுக்கு நிகராக செயல்படாத அவர் நாளடைவில் தொடர்ந்து சிறப்பாக செயல்படத் தவறியதால் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார். அதனால் தனது உடல் எடையை குறைத்து உள்ளூர் தொடரில் கடுமையாக போராடி வந்த அவர் கடந்த பிப்ரவரியில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் தேர்வாகியும் விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு பெறவில்லை.

- Advertisement -

அவ்ளோ தெனாவட்டா:
அதனால் இந்திய அணியில் மீண்டும் நிலையான இடத்தை பிடிக்க இந்த ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியுள்ள அவர் 12 (9), 7 (5), 0 (3), 15 (10), 0 (2) என இதுவரை விளையாடி 5 போட்டிகளிலும் சொற்ப ரன்களில் அவுட்டாகி டேவிட் வார்னர் போன்ற இதர வீரர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி டெல்லியின் தொடர் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக அமைந்து வருகிறார். குறிப்பாக பெங்களூருவுக்கு எதிராக நடைபெற்ற 5வது போட்டியில் 175 ரன்களை சேசிங் செய்ய களமிறங்கிய போது முதல் ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட டேவிட் வார்னர் ரன் எடுக்கவில்லை என்றாலும் 2வது பந்தில் டபுள் எடுக்க முயற்சித்தார்.

ஆனால் அப்போது அடுத்த பந்தை தாம் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக மறுப்பு தெரிவித்த பிரிதிவி ஷா சிங்கிள் மட்டுமே எடுத்து ஸ்ட்ரைக்கை வைத்துக் கொண்டது டேவிட் வார்னரை கடுப்பாக்கியது. அதை நேரலையில் வர்ணனை செய்த முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் “நீங்கள் முதல் ரன்னை வேகமாக ஓடி எடுக்க முயற்சிக்க வேண்டும். இது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது” என்று விமர்சித்தார்.

- Advertisement -

அந்த நிலையில் 3வது பந்தை எதிர்கொண்டு ரன் எடுக்காத அவர் 4வது பந்தில் கவர்ஸ் ஸ்லிப் பகுதியில் அடித்து விட்டு சிங்கிள் எடுக்க ஓடினார். ஆனால் அங்கே ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த அனுஜ் ராவத் டைவ் அடித்து பந்தை எடுத்து ஸ்டம்ப்களை குறிபார்த்து அடித்தார். அதற்கு ஈடு கொடுக்க முடியாத வேகத்தில் ஓடி வந்த பிரிதிவி ஷா டைவ் அடிக்க தவறியதால் 0 (2) ரன்களில் ரன் அவுட்டாகி சென்றார்.

இத்தனைக்கும் முதல் இன்னிங்ஸில் நேரடியாக 11 பேர் அணியில் தேர்வு செய்யப்படாத அவர் முழுமையாக 20 ஓவர்கள் உட்கார்ந்து ஓய்வெடுத்து 175 ரன்களை சேசிங் செய்த 2வது இன்னிங்ஸில் இம்பேக்ட் வீரராக தான் தேர்வு செய்யப்பட்டார். அப்படி இருந்தும் வேகமாக ஓடாத அவர் 2வது பந்தில் டேவிட் வார்னர் டபுள் எடுக்க அழைத்த போது மறுப்பு தெரிவித்தது இறுதியில் அவருக்கே வினையாக ரன் அவுட்டாக முடிந்தது.

இதையும் படிங்க:PBKS vs LSG : இதுக்காக தான் இவரை டீம்ல வச்சிருக்கோம். வெற்றிக்கு பிறகு தமிழக வீரர் ஷாருக்கானை பாராட்டிய – சாம் கரன்

அதனால் கோபமடையும் ரசிகர்கள் உங்களுக்கு என்ன அவ்வளவு தெனாவட்டா என்று அவரை சமூக வலைதளங்களில் விளாசுகிறார்கள். மேலும் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டும் இப்படி சிங்கிள் எடுக்கும் அளவுக்கு கூட முழுமையான ஃபிட்னெஸை கடைபிடிக்காமல் பேட்டிங்கில் சொதப்பும் உங்களுக்கு மீண்டும் நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பும் கிடைக்கப் போவதில்லை என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement