PBKS vs LSG : இதுக்காக தான் இவரை டீம்ல வச்சிருக்கோம். வெற்றிக்கு பிறகு தமிழக வீரர் ஷாருக்கானை பாராட்டிய – சாம் கரன்

Sam-Curran-and-Shahrukh-Khan
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 21-வது லீக் போட்டியானது நேற்று லக்னோ மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சாம் கரன் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியானது கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பதிவு செய்திருந்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியானது முதலில் பந்து வீசியது.

Shahrukh khan

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் குவித்தது. பின்னர் 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது 19.3 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் குவித்து இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பஞ்சாப் அணி பெற்ற இந்த சிறப்பான வெற்றி குறித்து பேசிய அந்த அணியின் தற்காலிக கேப்டன் சாம் கரன் கூறுகையில் : இன்றைய போட்டியில் வெற்றி பெற்றது அற்புதமான ஒன்று. ஏனெனில் இந்த போட்டியில் பலம் வாய்ந்த அணியை நாங்கள் எதிர்கொண்டு விளையாடி உள்ளோம்.

Shahrukh Khan 1

அதுமட்டுமின்றி இந்த போட்டியில் எங்களது ஸ்பின்னர் சிறப்பாக பந்து வீசினார்கள். காகிசோ ரபாடா மிகச் சிறப்பாக பந்துவீசினார். சேசிங்கின் போது சிக்கந்தர் ராசா விளையாடிய விதம் மிகவும் அற்புதமாக இருந்தது. அதேபோன்று ஷாருக்கான் போட்டியை மிகப் பிரமாதமாக முடித்துக் கொடுத்தார்.

- Advertisement -

இப்படி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியை முடித்து கொடுப்பதனால் தான் அவர் ஒரு ஃபினிஷராக எங்கள் அணியில் இருக்கிறார். அவருடைய ரோல் என்பது மிகவும் தெளிவான ஒன்று. அதாவது ஷாருக்கான் போன்ற பிளேயர்களால் முதல் பந்தில் இருந்தே அவர்களால் சிக்சர் அடிக்க முடியும். அதனால் அவரைப்போன்ற வீரர்கள் மிகவும் ஆபத்தான வீரர்கள்.

இதையும் படிங்க : IPL 2023 : பாண்டிங் – கங்குலி ஜீரோ இம்பேக்ட் ஒரு பிரயோஜனமும் இல்ல, டெல்லியின் தொடர் தோல்விகளால் முன்னாள் வீரர் விமர்சனம்

அந்த வகையில் ஷாருக்கான் ஒரு மிகச்சிறந்த பவர் ஹிட்டர். எந்த ஒரு மைதானமாக இருந்தாலும் அந்த மைதானத்தின் பவுண்டரிக்கு வெளியே சிக்சர் அடிக்கும் திறமை மற்றும் பிளான் அவர்களிடம் இருக்கிறது அதை ஷாருக்கான் செய்தும் காட்டினார் என்று சாம் கரன் அவரை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement