IPL 2023 : பாண்டிங் – கங்குலி ஜீரோ இம்பேக்ட் ஒரு பிரயோஜனமும் இல்ல, டெல்லியின் தொடர் தோல்விகளால் முன்னாள் வீரர் விமர்சனம்

- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் கோப்பையை வெல்வதற்காக களமிறங்கியுள்ள 10 அணிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளிலும் 5 தொடர் தோல்விகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் கடைசி நேரத்தில் திண்டாடுகிறது. ஆரம்பகாலம் முதலே சேவாக், கம்பீர் ஆகியோரது தலைமையிலும் தொடர்ந்து சிறப்பாக செயல்படாத அந்த அணி 2019இல் பெயர் மற்றும் ஜெர்சியை மாற்றி 2020இல் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் முதல் முறையாக ஃபைனலுக்கு தகுதி பெற்று அசத்தியது. அந்த நிலையில் கடந்த வருடம் பிளே ஆப் சுற்று வாய்ப்பை நூலிலையில் தவற விட்ட அந்த அணிக்கு இம்முறை கேப்டன் ரிஷப் பண்ட் காயத்தால் பங்கேற்காதது ஆரம்பத்திலேயே பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

இருப்பினும் 2016இல் ஹைதராபாத் அணிக்கு சாம்பியன் பட்டம் வென்று கொடுத்து ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை குவித்த வெளிநாட்டு பேட்ஸ்மேனாக சாதனை படைத்த டேவிட் வார்னர் இந்த சீசனில் அந்த அணிக்கு கேப்டனாக செயல்படுவதாக அறிவிக்கப்பட்டது. கூடவே பயிற்சியாளராக உலக கிரிக்கெட்டின் மகத்தான கேப்டன் ரிக்கி பாண்டிங் இயக்குனராக இந்தியாவின் அற்புதமான கேப்டன் சௌரவ் கங்குலி ஆகியோர் இருப்பதால் நிச்சயம் டெல்லி வெற்றி நடை போடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அந்த அணியின் பந்து வீச்சுத் துறையில் குல்தீப் யாதவ், அன்றிச் நோர்ட்ஜெ, அக்சர் படேல் ஆகியோர் ஓரளவுக்கு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

- Advertisement -

ஜீரோ இம்பேக்ட்:
ஆனால் அதை வீணடிக்கும் வகையில் பேட்டிங் துறையில் பிரிதிவி ஷா, ரிலீ ரோசவ், மிட்சேல் மார்ஷ், ரோவ்மன் போவல் என முக்கிய வீரர்கள் யாருமே எந்த ஒரு போட்டியில் கூட பெரிய ரன்களை குவிக்கவில்லை. மறுபுறம் டேவிட் வார்னர் பெரிய ரன்களை எடுத்தாலும் மிகவும் மெதுவாக விளையாடி இதர பேட்மேன்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி அக்சர் படேல் போன்ற ஒருசில பேட்ஸ்மேன்கள் எடுக்கும் அதிரடியான ரன்களையும் வீணாக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். அதனால் 2013க்குப்பின் 10 வருடங்கள் கழித்து முதல் முறையாக தங்களுடைய முதல் 5 போட்டிகளில் தொடர்ந்து 5 தோல்விகளை பதிவு செய்துள்ள டெல்லியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பும் இப்போதே 50% பறிபோயுள்ளது.

அதனால் ஏமாற்றமடைந்துள்ள முன்னாள் நட்சத்திர டெல்லி வீரர் வீரேந்தர் சேவாக் பயிற்சியாளராக சௌரவ் கங்குலி மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் இருந்தும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக என்ன தான் மகத்தான கேப்டன்களான அவர்கள் இருந்தாலும் களத்தில் விளையாடும் வீரர்கள் சிறப்பாக செயல்படாமல் போனால் ஒரு பயனுமில்லை என்று தெரிவிக்கும் சேவாக் டெல்லி வீரர்களை கடுமையாக விமர்சித்து பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் டெல்லி அணியில் இருக்கும் பயிற்சியாளர்கள் அந்த அணியில் ஜீரோ மதிப்பையே ஏற்படுத்தியுள்ளனர். அதனால் உங்களது அணியில் பயிற்சியாளர்கள் வலுவாக இருக்கிறார்களா என்பது முக்கியமல்ல. களத்தில் உங்களுடைய முக்கிய வீரர்கள் மோசமாக செயல்படுகிறார்கள். உடைமாற்றும் அறையில் கிரிக்கெட்டின் மகத்தானவர்களை நீங்கள் கொண்டிருக்கலாம். ஆனால் உங்களுடைய வீரர்கள் ரன்களையும் விக்கெட்டுகளையும் எடுக்காமல் போனால் அவர்கள் என்ன செய்ய முடியும்”

“அதை எப்போதும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. மேலும் நீங்கள் உங்களுக்கு போட்டியை வென்று கொடுக்கும் வீரர்களைத்தான் சரியாக தேர்வு செய்ய வேண்டும். அது போக அவர்களை ஒவ்வொரு முறையும் வழி நடத்தக் கூடாது. உங்களிடம் சிறப்பாக செயல்படும் வீரர்கள் இருந்தால் தான் உங்களால் சாம்பியனாக முடியும். டெல்லி அணியிலும் அந்த வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ரன்கள் அல்லது விக்கெட்டுகளை எடுக்கவில்லை. எனவே பயிற்சியாளர்களாக நீங்கள் மகத்தான திட்டங்களை வகுக்கலாம். ஆனால் இறுதியில் களமிறங்கி விளையாடும் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால் தான் வெற்றி காண முடியும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: IPL 2023 : பேசாம கமெண்ட்ரி பண்ண வாங்க, தொடர்ந்து சொதப்பும் டிகே – மோசமான ஐபிஎல் வரலாற்று சாதனையால் ரசிகர்கள் அதிருப்தி

முன்னாதாக 25 பந்துகளில் 50 ரன்கள் போன்ற அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் போனால் தயவு செய்து ஐபிஎல் தொடரில் விளையாடாதீர்கள் என்று டேவிட் வார்னரை வெளிப்படையாகவே வீரேந்தர் சேவாக் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement