வீடியோ : அண்ணன் என்ன தம்பி என்ன, நேரலையில் ஸ்லெட்ஜிங் செய்து கொண்ட பாண்டியா பிரதர்ஸ் – கடைசியில் பொங்கிய பாசம்

- Advertisement -

எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2023 ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 22ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 30வது லீக் போட்டியில் யாருமே எதிர்பாராத வகையில் கையில் வைத்திருந்த வெற்றியை குஜராத்துக்கு 7 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ பரிசளித்தது என்றே சொல்லலாம. லக்னோவில் பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர்களில் போராடி 135/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 66 (50) ரன்களும் ரிதிமான் சகா 47 (37) ரன்களும் எடுக்க லக்னோ சார்பில் அதிகபட்சமாக க்ருனால் பாண்டியா மற்றும் மார்க்கஸ் ஸ்டோனிஸ் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதை தொடர்ந்து 136 ரன்களை துரத்திய லக்னோவுக்கு கேப்டன் கேஎல் ராகுல் வழக்கம் போல தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் எதிர்ப்புறம் கெய்ல் மேயர்ஸ் 24 (19), க்ருனால் பாண்டியா 23 (23), நிக்கோலஸ் பூரான் 1 (7) என முக்கிய பேட்ஸ்மேன்களும் பொறுப்பின்றி சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் 15வது ஓவர் வரை நிலைத்து நின்று செட்டிலாகி பிட்ச் எப்படி இருக்கிறது மற்றும் பவுலர்கள் எப்படி பந்து வீசுகிறார்கள் என்று அனைத்தையும் தெரிந்த ராகுல் கடைசி வரை அதிரடியை துவக்காமல் கடைசி ஓவரில் 68 (61) ரன்களில் ஆட்டமிழந்து பெரிய பின்னடைவை கொடுத்தார்.

- Advertisement -

அண்ணன் என்ன தம்பி என்ன:
அதனால் அடித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆயுஷ் படோனி 8, ஸ்டோனிஸ் 0, தீபக் ஹூடா 2 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகும் அளவுக்கு கடைசி ஓவரை அசத்தலாக வீசி வெற்றியை வசப்படுத்திய மோகித் சர்மா ஆட்டநாயகன் விருது வென்றார். முன்னதாக இந்த போட்டியில் லக்னோ பேட்டிங் செய்யும் போது அந்த அணிக்காக விளையாடிய க்ருனால் பாண்டியா ஓவருக்கு இடையே தண்ணீர் குடித்து விட்டு மீண்டும் பேட்டிங் செய்ய சென்ற போது அருகே சென்ற அவருடைய சகோதரர் ஹர்திக் பாண்டியா சில வார்த்தைகளை உபயோகித்து ஸ்லெட்ஜிங் செய்தார்.

ஆனால் அதற்கு பதிலுக்கு எதுவும் பேசாமல் கவனத்தை சிதற விடாமல் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் க்ருனால் பாண்டியா சென்றதை பார்த்த ஹர்திக் பாண்டியா “என்னய்யா இப்டி வம்பிழுத்தும் எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் செல்கிறாரே” என்ற வகையில் ரியாக்சன் கொடுத்தார். ஒரே குடும்பத்தில் பிறந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒன்றாக பல வருடங்கள் விளையாடி இந்தியாவுக்காகவும் சர்வதேச கிரிக்கெட்டில் சேர்ந்து விளையாடிய அவர்கள் தற்போது லக்னோ மற்றும் குஜராத் ஆகிய எதிரெதிர் அணிகளில் விளையாடுகிறார்கள்.

- Advertisement -

இருப்பினும் ஒரு தாய் வயிற்றில் பிறந்து இப்படி “அண்ணன் என்ன தம்பி என்ன” என்பது போல் பாண்டியா சகோதரர்கள் ஸ்லெட்ஜிங் செய்து கொண்டது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. இருப்பினும் பெரிய அளவில் அது சண்டையாகவும் பரபரப்பாகவும் மாறாத நிலையில் அந்த சமயத்தில் என்ன நடந்தது என்பதை போட்டியின் முடிவில் க்ருனால் பாண்டியா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கூறியது பின்வருமாறு.

“நாங்கள் அவ்வப்போது சற்று காலை வாரிக் கொள்வோம். குறிப்பாக இந்த போட்டியின் துவக்கத்தில் அவர் எனது பந்துகளை சாரமாரியாக அடிப்பேன் என்று என்னிடம் தெரிவித்தார். ஆனால் கடந்த போட்டியில் என்னை அவர் அடித்தாலும் இறுதியில் நான் அவுட்டாக்கியதை அவருக்கு அந்த சமயத்தில் நினைவுபடுத்தி மீண்டும் அதே தவறு செய்யாதீர்கள் என்று எச்சரித்தேன்” எனக் கூறினார்.

இதையும் படிங்க:வீடியோ : அண்ணன் என்ன தம்பி என்ன, நேரலையில் ஸ்லெட்ஜிங் செய்து கொண்ட பாண்டியா பிரதர்ஸ் – கடைசியில் பொங்கிய பாசம்

அப்படி ஆரோக்கியமான போட்டியுடன் மோதி கொண்ட அவர்கள் இறுதியில் போட்டி முடிந்ததும் தங்களுடைய ஜெர்சியை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொண்டு அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக என்னுடைய ஒரே ஒரு சகோதரர் என்ற தலைப்புடன் அந்த வீடியோவை ஹர்திக் பாண்டியா தனது ட்விட்டரில் பதிவிட்டு பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement