IPL 2023 : அவர் தான் என்னை ராஜஸ்தானுக்கு அழைச்சுட்டு போனாரு, டிராவிட் ஓகே சொன்னாரு – 2013 பின்னணியை பகிர்ந்த சாம்சன்

Samson
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் 29 போட்டிகளின் முடிவில் 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் அசத்தி வருகிறது. அந்த அணிக்கு கேரளாவை சேர்ந்த நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டு வெற்றி நடை போடுவதற்கு முக்கிய காரணமாக அமைந்து வருகிறார். தற்போது 29 வயதாகும் அவர் இளம் வயதிலேயே உள்ளூர் போட்டிகளில் விளையாடத் துவங்கிய தன்னுடைய 18 வயதில் கடந்த 2012ஆம் ஆண்டு கொல்கத்தா அணியில் விளையாடுவதற்கு தேர்வு செய்யப்பட்டார்.

- Advertisement -

இருப்பினும் அந்த வருடம் வாய்ப்பு பெறாத அவர் 2013ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணியில் விளையாடத் தேர்வாகி 10 போட்டிகளில் 206 ரன்களை எடுத்தார். ஆரம்ப காலங்களில் பெரும்பாலான இளம் வீரர்களை போலவே தடுமாற்றமாக செயல்பட்ட அவர் அடுத்த சில வருடங்களில் டெல்லி அணிக்காக விளையாடி மீண்டும் கடந்த 2018 முதல் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். அதிலிருந்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் அணிக்காக இதுவரை அதிக போட்டிகளில் விளையாடி அதிக ரன்களை குவித்த வீரர் என்ற ரகானேவின் சாதனையை சமீபத்தில் தகர்த்து புதிய சாதனை படைத்தார்.

ராஜஸ்தானின் ராயல்:
மேலும் 2021இல் முதல் முறையாக கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர் 2022 சீசனில் 458 ரன்களை விளாசி 2008க்குப்பின் ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு பின் 15 வருடங்கள் கழித்து ராஜஸ்தானை ஃபைனல் வரை அழைத்துச் சென்று சாதனை படைத்தார். இந்த வருடமும் சிறப்பாக பேட்டிங் செய்து வரும் அவரது தலைமையில் வெற்றி நடை போட்டு வரும் ராஜஸ்தான் கடந்த வருடம் நழுவ விட்ட கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வருகிறது. இந்நிலையில் 2013இல் அதே அணிக்காக விளையாடிய மற்றொரு நட்சத்திர கேரள வீரர் ஸ்ரீசாந்த் தான் முதல் முறையாக தம்மை ராஜஸ்தான் அணிக்கு அழைத்துச் சென்றதாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

Sreesanth

அப்போது கேப்டனாக இருந்த இந்திய ஜாம்பவான் ராகுல் டிராவிட் பயிற்சி களத்தில் தம்முடைய ஆட்டத்தை பார்த்து விட்டு “ராஜஸ்தான் அணிக்காக விளையாட நீங்கள் தயாரா” என்று அழைப்பு விடுத்தது ஆச்சரியத்தை கொடுத்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “அந்த சமயத்தில் ஸ்ரீசாந்த் தான் என்னை ராஜஸ்தான் அணியின் பயிற்சி முகாமுக்கு அழைத்துச் சென்றார். அங்கே ராகுல் டிராவிட் மற்றும் பேடி அப்டோன் ஆகியோர் இருந்தனர். அந்த பயிற்சி முகாமில் நான் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லாமலேயே விளையாடினேன்”

- Advertisement -

“ஏனெனில் ராஜஸ்தான் அணி நிர்வாகம் எந்த மாதிரியான வீரர்களை அந்த சமயத்தில் எதிர்பார்க்கிறது என்பது எனக்கு தெரியாமல் இருந்தது. இருப்பினும் 2 நாட்கள் நடைபெற்ற அந்த பயிற்சி முகாமில் நான் சற்று சிறப்பாகவே செயல்பட்டேன். குறிப்பாக அந்தளவுக்கு ஸ்பெஷலாக பேட்டிங் செய்ததை அதற்கு முன்பு நானே பார்த்ததில்லை. அப்போது என்னுடைய ஆட்டத்தை பார்த்த ராகுல் டிராவிட் என்னிடம் வந்து “நீங்கள் நிச்சயமாக சிறப்பாக விளையாடுகிறீர்கள். உங்களுக்கு ராஜஸ்தான் அணியில் விளையாட விருப்பமா” என்று கூறினார்”

“ராகுல் சார் போன்ற ஒரு மகத்தான வீரிடமிருந்து அது போன்ற வார்த்தைகளை கேட்டது என்னுடைய தன்னம்பிக்கையை மேலும் அதிகரித்தது. ஏனெனில் அவரைப் போன்ற ஒரு லெஜெண்ட் நான் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறேன் என்று கூறினால் அதை விட வேறு என்ன வேண்டும்” என கூறினார்.

இதையும் படிங்க:வீடியோ : டக் சோதனையை உடைத்து 360 டிகிரியில் அடித்த சூர்யகுமார் – ரெய்னாவின் ஆல் டைம் சாதனையை தகர்த்து புதிய சாதனை

அப்படி சாதாரண வீரராக துவங்கிய சஞ்சு சாம்சன் 10 வருடங்கள் கழித்து இன்று ராஜஸ்தான் அணிக்காக அதிக ரன்களை குவித்து கேப்டனாக வழி நடத்தும் அளவுக்கு முன்னேறியுள்ளது உண்மையிலேயே பாராட்டுக்குரியதாகும். மேலும் அந்த அணிக்காக சிறப்பாக விளையாடி தான் இந்தியாவுக்காகவும் விளையாடுவதற்கு அவர் போராடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement