வீடியோ : டக் சோதனையை உடைத்து 360 டிகிரியில் அடித்த சூர்யகுமார் – ரெய்னாவின் ஆல் டைம் சாதனையை தகர்த்து புதிய சாதனை

- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 22ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 31வது லீக் போட்டியில் மும்பையை 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பஞ்சாப் கிங்ஸ் தங்களுடைய 4வது வெற்றியை பதிவு செய்தது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 214/8 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் சாம் கரண் 5 பவுண்டரி 4 சிக்சருடன் 55 (29) ரன்களும் ஹர்ப்ரீத் சிங் 41 (28) ரன்களும் ஜித்தேஷ் சர்மா 4 சிக்சருடன் 25 (7) ரன்களும் எடுக்க மும்பை சார்பில் அதிகபட்சமாக பியூஸ் சாவ்லா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

அதை தொடர்ந்து 215 ரன்களை துரத்திய மும்பைக்கு இசான் கிசான் 1 (4) ரன்னில் அவுட்டானாலும் 2வது விக்கெட்டுக்கு கேமரூன் கிரீனுடன் இணைந்து அதிரடியாக 76 ரன்கள் பார்ட்னர்சிப் அமைத்து அசத்திய கேப்டன் ரோகித் சர்மா 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 44 (27) ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் தனது பங்கிற்கு அதிரடியாக செயல்பட்டு மிரட்டலாக ரன்களை சேர்த்த நிலையில் மறுபுறம் அசத்திய கேமரூன் கிரீன் அரை சதமடித்து 6 பவுண்டரி 3 சிக்சருடன் 67 (43) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

பார்முக்கு திரும்பிய ஸ்கை:
அந்த நிலையில் தமக்கே உரித்தான ஸ்டைலில் சரவெடியாக செயல்பட்ட சூரியகுமார் 7 பவுண்டரி 3 சிக்சருடன் 57 (26) ரன்கள் குவித்து கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்த போது அவுட்டாக்கிய அர்ஷிதீப் சிங் கடைசி நேரத்தில் டிம் டேவிட் 25* (13) ரன்கள் அடித்தாலும் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட போது திலக் வர்மா, நேஹல் வதேரா ஆகியோரை அடுத்தடுத்து மிடில் ஸ்டம்பை இரண்டாக உடைத்து போல்ட்டாக்கி வெறும் 3 ரன்களை மட்டும் கொடுத்து அற்புதமான வெற்றியை பெற்றுக் கொடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

அதனால் ரோகித் சர்மா, கேமரூன் கிரீன், சூரியகுமார் யாதவ் போன்ற மும்பை பேட்ஸ்மேன்களின் அதிரடியான ஆட்டம் வீணானது. முன்னாதாக மும்பை அணியில் அதிரடியாக செயல்பட்டு இந்தியாவுக்காக 2021ஆம் ஆண்டு அறிமுகமாகி டி20 கிரிக்கெட்டில் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் எதிரணி எப்படி பந்து வீசினாலும் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே அடித்து நொறுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்திய சூரியகுமார் யாதவ் பெரிய ரன்களை குவித்து விராட் கோலி போன்ற இதர வீரர்களை மிஞ்சி லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக அவதரித்து குறுகிய காலத்திலேயே நம்பர் ஒன் பேட்ஸ்மேனாகவும் முன்னேறினார்.

- Advertisement -

குறிப்பாக எப்படி போட்டாலும் அடிக்கிறார் என்ற வகையில் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் கற்பனை செய்ய முடியாத புதுப்புது ஷாட்டுகளால் அடித்து நொறுக்கிய அவரை இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கொண்டாடினர். அப்படி உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருந்த அவர் சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரின் 3 போட்டிகளிலும் ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டாகி மோசமான உலக சாதனை படைத்தார்.

அப்போதிலிருந்தே “நம்ம சூர்யாவுக்கு என்ன தான் ஆச்சு” என்று இந்திய ரசிகர்கள் பேசும் அளவுக்கு தடுமாற்றமாக செயல்பட்ட அவர் இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளலும் சொதப்பலாகவே செயல்பட்டார். இருப்பினும் இப்போட்டியில் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே 219.23 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் விக்கெட் கீப்பருக்கு திசையில் கீழே விழுந்தாலும் அசத்தலான சிக்சரை பறக்க விட்ட அவர் அசால்ட்டாக பிளிக் ஷாட் வாயிலாக தெறிக்க விட்ட சிக்சர் கெவின் பீட்டர்சன், டேனி மோரிசன் போன்ற வர்ணனையாளர்களை கொண்டாட வைத்தது.

இதையும் படிங்க: LSG vs GT : புதுசா எதும் யோசிக்கல. என்னுடைய பிளான் எல்லாம் இது மட்டும் தான் – ஆட்டநாயகன் மோஹித் சர்மா பேட்டி

அப்படி டக் அவுட் சோதனையிலிருந்து மீண்டெழுந்து பழைய ஃபார்முக்கு திரும்பி 360 டிகிரியிலும் அடித்து நொறுக்கிய சூரியகுமார் இப்போட்டியில் குவித்த 55 ரன்களையும் சேர்த்து இந்தியா, ஐபிஎல் மற்றும் உள்ளூர் என அனைத்து வகையான டி20 கிரிக்கெட்டில் பந்துகள் அடைப்படையில் அதிவேகமாக 6000 ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சுரேஷ் ரெய்னாவின் சாதனை தகர்த்து புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. சூரியகுமார் யாதவ் : 4017*
2. சுரேஷ் ரெய்னா : 4295
3. கேஎல் ராகுல் : 4342
4. எம்எஸ் தோனி : 4392
5. தினேஷ் கார்த்திக் : 4501

Advertisement