LSG vs GT : புதுசா எதும் யோசிக்கல. என்னுடைய பிளான் எல்லாம் இது மட்டும் தான் – ஆட்டநாயகன் மோஹித் சர்மா பேட்டி

Mohit-Sharma
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 30-ஆவது லீக் போட்டியானது நேற்று மதியும் லக்னோ நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியானது ஏழு ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பற்றி பதிவு செய்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

GT

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் குவித்தது. பின்னர் 136 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது துவக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. குறிப்பாக 15 ஓவர்களுக்குள் 106 ரன்களை குவித்து இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்தது.

இதனால் லக்னோ அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கடைசி 40 பந்துகளாக எந்த ஒரு பவுண்டரியும் அடிக்காமல் பேட்டிங்கில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் அடித்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

Mohit Sharma 1

இந்த போட்டியின் போது 20-ஆவது ஓவரை வீசிய குஜராத் அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளரான மோகித் சர்மா அந்த ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு மட்டுமின்றி 2 ரன்அவுட்டுகளுக்கும் காரணமாக திகழ்ந்தார். மொத்தத்தில் கடைசி ஓவரில் நான்கு விக்கெட்டுகள் விழ போட்டியில் குஜராத் அணி வெற்றியும் பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது மூன்று ஓவர்களை வீசி 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

- Advertisement -

அவரது அசத்தலான செயல்பாடு காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் தன்னுடைய சிறப்பான பந்துவீச்சு குறித்து பேசிய மோஹித் சர்மா கூறுகையில் : இந்த போட்டியில் நான் எதுவும் ஸ்பெஷலாக செய்யவில்லை. வழக்கமாக நான் எவ்வாறு வீசுவானோ அதே போன்று தான் பந்து வீசினேன். எப்பொழுதுமே நான் ஒவ்வொரு போட்டிக்காகவும் விளையாட வரும்போது என்னுடைய பலம் என்னவோ அதில் மட்டுமே தான் கவனம் செலுத்துவேன்.

இதையும் படிங்க : வீடியோ : ஒரே ஓவரில் மும்பையின் வெற்றியை பறிபோக வைத்தை அர்ஜுன் – 3வது போட்டியிலே மோசமான வரலாற்று சாதனை

பயிற்சியில் நான் எதை எதை முயற்சி செய்கிறேனோ அதனை போட்டியில் கொண்டு வருவேன் அந்த வகையில் இந்த போட்டியிலும் என்னுடைய திட்டம் எல்லாம் தெளிவாக இருந்தது. புதிதாக எதையும் யோசிக்காமல் என்னுடைய பலம் என்ன என்பதை மட்டுமே யோசித்து பந்து வீசினேன். அந்த வகையில் இறுதியில் வெற்றியும் கிடைத்ததில் மகிழ்ச்சி என மோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement