ஒரே ஓவரில் மும்பையின் வெற்றியை பறிபோக வைத்தை அர்ஜுன் – 3வது போட்டியிலே மோசமான வரலாற்று சாதனை

Arjun Tendulkar
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 22ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 31வது லீக் போட்டியில் மும்பையை 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பஞ்சாப் தங்களுடைய 4வது வெற்றியை பதிவு செய்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கேப்டன் சாம் கரண் 55 (29) ஹர்ப்ரீத் சிங் 41 (28) ஜிதேஷ் சர்மா 25 (7) என முக்கிய பேட்ஸ்மேன்களின் அதிரடியான ரன் குவிப்பால் 20 ஓவர்களில் 214/8 ரன்கள் எடுக்க மும்பை சார்பில் அதிகபட்சமாக பியூஸ் சாவ்லா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

அதை தொடர்ந்து 215 ரன்களை துரத்திய மும்பைக்கு இசான் கிசான் 1 ரன்னில் அவுட்டானாலும் கேப்டன் ரோகித் சர்மா 44 (27) ரன்களும் கேமரூன் கிரீன் 67 (43) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். அப்போது நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் சரவெடியாக 57 (26) ரன்கள் குவித்து கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்தார். ஆனால் அப்போது அவரை 18வது ஓவரில் அவுட்டாக்கிய அர்ஷிதீப் சிங் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட போது 25* (13) ரன்கள் எடுத்த டிம் டேவிட்டை மறுபுறம் வைத்துக்கொண்டே எதிர்ப்புறம் திலக் வர்மா, நேஹால் வதேரா ஆகிய 2 வீரர்களின் மிடில் ஸ்டம்பை உடைத்து வெறும் 2 ரன்கள் மட்டும் கொடுத்து அற்புதமான வெற்றியை பெற்றுக் கொடுத்து ஆட்டநாயகன் விருது வென்றார்.

- Advertisement -

3 போட்டியிலேயே பரிதாபம்:
முன்னதாக இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 10 ஓவரில் 83/4 என தடுமாறிக் கொண்டிருந்த போது ஜோடி சேர்ந்த கேப்டன் சாம் கரண் – ஹர்ப்ரீத் சிங் ஆகியோர் அதிரடியாக விளையாட முயற்சித்து யாரை அடிக்கலாம் என்று காத்துக் கொண்டிருந்தனர். அப்போது 16வது ஓவரை வீசிய அர்ஜுன் டெண்டுல்கருக்கு கருணை காட்டாத அந்த ஜோடி 6, ஒய்ட், 4, 1, 4, 6, 4 நோபால், 4 என 31 ரன்களை தெறிக்க விட்டு போட்டியில் பெரிய திருப்பு முனையை உண்டாக்கியது இறுதியில் பஞ்சாப் 214 என்ற பெரிய ஸ்கோரை குவித்து வெற்றி பெற உதவியது.

ஒருவேளை அந்த ஓவரில் 31 ரன்களுக்கு பதிலாக 10 – 15 போன்ற கணிசமான ரன்களை வழங்கியிருந்தால் கூட இறுதியில் மும்பை வெறும் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்க வேண்டிய நிலைமை வந்திருக்காது என்றே சொல்லலாம். அந்த வகையில் மும்பையின் வெற்றி பறிபோவதற்கு முக்கிய காரணமாக வகையில் செயல்பட்ட அர்ஜுன் டெண்டுல்கர் நாட்டுக்காக இடது கை வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக விளையாட வேண்டும் என்ற தன்னுடைய தந்தை ஜாம்பவான் சச்சினின் ஆசைக்கிணங்க பயிற்சிகளை துவங்கி ஆரம்பத்தில் நெட் பவுராக செயல்பட்டு பின்னர் ரஞ்சிக் கோப்பையில் கோவா அணிக்காக விளையாடி ஒரு வழியாக இந்த வருடம் அறிமுகமானார்.

- Advertisement -

கொல்கத்தாவுக்கு எதிரான முதல் போட்டியில் 2 ஓவர்கள் மட்டும் வீசி விக்கெட்டுகளை எடுக்காத அவர் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 20 ரன்களை கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலையில் புவனேஸ்வர் குமாரை அவுட்டாக்கி தன்னுடைய முதல் விக்கெட்டை எடுத்தது வெற்றிக்கு உதவியது ரோகித், சச்சின் உள்ளிட்ட அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்தது.

ஆனாலும் வெறும் 110 – 120+ கி.மீ என்ற சராசரியான வேகத்தில் மட்டுமே வீசிய அவரை புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக ரிங்கு சிங் போன்ற இளம் பேட்ஸ்மேன்கள் இருந்திருந்தால் கூட சரமாரியாக அடித்திருப்பார்கள் என்று விமர்சித்த ரசிகர்கள் சீக்கிரம் வேகத்தை அதிகரிக்குமாறு ஆலோசனை தெரிவித்தனர்.

- Advertisement -

இருப்பினும் இந்த போட்டியிலும் அதே போல பந்து வீசி வெற்றி பறிபோக காரணமாக இருந்த அவர் ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் வழங்கிய 2வது மும்பை பவுலர் என்ற மோசமான சாதனையை தன்னுடைய 3வது போட்டியிலே படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. டேனியல் சாம்ஸ் : 35 ரன்கள், கொல்கத்தாவுக்கு எதிராக, 2022
2. அர்ஜுன் டெண்டுல்கர் : 31* ரன்கள், பஞ்சாப்புக்கு எதிராக, 2023
3. பியூஸ் சுயல் : 31, பெங்களூருவுக்கு எதிராக, 2014
4. அல்சாரி ஜோசப் : 31, ராஜஸ்தானுக்கு எதிராக, 2019
5. மிட்சேல் மெக்லீகன் : 31, பஞ்சாப்புக்கு எதிராக, 2018

இதையும் படிங்க:PBKS vs MI : மும்பை அணிக்கெதிரான அசத்தலான வெற்றிக்கு பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் – சாம் கரன் பேசியது என்ன?

அத்துடன் இந்த சீசனில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் கொடுத்த பவுலர் என்ற பரிதாபத்தையும் யாஷ் தயாளுடன் அவர் பகிர்ந்து கொண்டார்.

Advertisement