PBKS vs MI : மும்பை அணிக்கெதிரான அசத்தலான வெற்றிக்கு பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் – சாம் கரன் பேசியது என்ன?

Sam Curran
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 31-வது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் அணியானது மும்பை அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை அணியானது முதலில் பந்துவீசும் என்று அறிவித்தது.

MI vs PBKS

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது. பின்னர் 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய மும்பை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே குவித்ததால் 13 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவியது.

அதே வேளையில் மும்பை அணியை அதன் சொந்த மைதானத்திலேயே வைத்து பஞ்சாப் அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தங்களது அணி பெற்ற சிறப்பான வெற்றிக்கு பிறகு பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் கூறுகையில் : இந்த வெற்றி உண்மையிலேயே மிகவும் ஸ்பெஷலானது. ஏனெனில் மும்பை மைதானத்தில் அவர்களை வீழ்த்தியது மிகச் சிறப்பான ஒன்று.

PBKS

இந்த மைதானத்தில் உள்ள ரசிகர்கள் மிகவும் ஆதரவினை வழங்குகிறார்கள். இந்த வெற்றி எங்களுக்கு மிகப்பெரிய பாசிட்டிவாக மாறியுள்ளது. இந்த போட்டியில் நான் ஆட்ட நாயகன் விருதுக்கு தகுதியானவனா என்று தெரியவில்லை. ஏனெனில் இந்த போட்டியில் எங்களது அணியின் வீரர்கள் அனைவருமே மிகச் சிறப்பாக செயல்பட்டனர்.

- Advertisement -

ஷிகார் தவான் இல்லாமல் விளையாடும் போது ஒரு கேப்டனாக நான் பொறுப்பினை உணர்ந்து விளையாட வேண்டும் என்று நினைத்து விளையாடி வருகிறேன். மேலும் ஒரு அணியாகவும் எங்களது அணி மிகச் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. கூடிய விரைவில் ஷிகார் தவான் அணிக்கு திரும்புவார்.

இதையும் படிங்க : LSG vs GT : என்ன நடந்தது? யார் தப்பு பண்ணதுன்னு தெரியல. ஆனால் எல்லாம் நடந்துடுச்சு – தோல்வி குறித்து கே.எல் ராகுல் பேட்டி

தற்போதுள்ள நிலையில் நாங்கள் ஏழு போட்டிகளில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால் ஒரு நல்ல நிலையில் தான் இருக்கிறோம் என்று நம்புகிறேன். பஞ்சாப் அணி நல்ல வீரர்களையும், நிர்வாகத்தையும் கொண்டுள்ளது. நிச்சயம் இந்த தொடரின் எதிர்வரும் போட்டிகளில் எங்கள் அணி மிகச் சிறப்பாக செயல்படும் என சாம் கரன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement