LSG vs GT : என்ன நடந்தது? யார் தப்பு பண்ணதுன்னு தெரியல. ஆனால் எல்லாம் நடந்துடுச்சு – தோல்வி குறித்து கே.எல் ராகுல் பேட்டி

KL Rahul
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 30-வது லீக் போட்டியானது நேற்று மதியம் லக்னோ மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி அசாத்தியமான வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றிபெற்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தது.

GT

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணியானது லக்னோ அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் பாண்டியா 66 ரன்களையும், துவக்க வீரர் சாஹா 47 ரன்களையும் குவித்தனர். பின்னர் 136 ரன்கள் அடித்தால் வெற்றி என்று எளிதான இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே குவித்ததால் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்த போட்டியின் ஒரு கட்டத்தில் 110 ரன்களுக்கு மூன்று விக்கெட்டை மட்டுமே இழந்து நல்ல நிலையில் இருந்த லக்னோ அணி கடைசி ஆறு ஓவரில் பவுண்டரி ஏதும் அடிக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்த தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் பெருமளவு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் பேசுகையில் கூறியதாவது :

Mohit Sharma

இந்த போட்டியில் நாங்கள் எப்படி தோல்வியை சந்தித்தோம் என்று எனக்கு நிச்சயமாக தெரியவில்லை. ஆனால் நாங்கள் தோல்வியை சந்தித்து விட்டோம். இந்த போட்டியில் எந்த இடத்தில் நாங்கள் தவறு செய்தோம் என்பதை என்னால் சுட்டிக் காண்பிக்க முடியவில்லை. ஆனாலும் இந்த போட்டியில் தோற்றத்தின் மூலம் இரண்டு புள்ளிகளை நாங்கள் இழந்து உள்ளோம்.

- Advertisement -

பந்துவீச்சின் போது மிகச் சிறப்பாகவே நாங்கள் செயல்பட்டதாக நினைக்கிறேன். ஏனெனில் 135 ரன்கள் என்பது வெற்றிக்கு தேவையான ரன்களை விட 10 ரன்கள் குறைவான ரன்கள் தான். எனவே பந்துவீச்சில் எந்த ஒரு குறையும் இல்லை. ஆனால் பேட்டிங்கில் தான் நாங்கள் தவறு செய்து விட்டோம். இந்த போட்டியில் இறுதிவரை பேட்டிங் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அந்த வகையில் என்னுடைய கிரிக்கெட் ஷாட்களையும் விளையாட ஆசைப்பட்டேன்.

இதையும் படிங்க : MI vs PBKS : இதுபோன்ற தவறுகள் நடக்கத்தான் செய்யும் என்ன பண்றது? – தோல்விக்கு பிறகு ரோஹித் சர்மா வெளிப்படை

ஆனால் குஜராத் அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசினர். கடைசி கட்டத்தில் சில பவுண்டரி வாய்ப்புகளை தவற விட்டோம். அதுமட்டுமின்றி முக்கியமான நேரத்தில் ரன்கள் வருவது குறைந்ததால் கடைசி மூன்று நான்கு ஓவர்களில் பிரஷர் அதிகமானது. அதன் காரணமாகவே இந்த தோல்வியை பெற்றதாகவும் கே.எல் ராகுல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement