கடைசி ஓவரில் 6, 6, 4.. அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்டு – வெறித்தனமான சதமடித்த நிக்கோலஸ் பூரான்

Nicholas Pooran
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்று வரும் கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடரில் செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெற்ற 20வது லீக் போட்டியில் த்ரிபாங்கோ நைட் ரைடர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதின. குயின்ஸ் பார்க் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பார்படாஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய த்ரிபாங்கோ அணிக்கு துவக்க வீரர் தேயல் 6 (4) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் அடுத்து வந்த நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரான் அதிரடியாக விளையாடி விரைவாக சேர்த்தார்.

இருப்பினும் மறுபுறம் சற்று தடுமாறிய மற்றொரு நட்சத்திர துவக்க வீரர் மார்ட்டின் கப்தில் 5 பவுண்டரியுடன் 37 (30) ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த கேப்டன் பொல்லார்ட் அவசரப்பட்டு 2 (2) ரன்களில் ரன் அவுட்டானார். அந்த நிலைமையில் வந்த லார்கன் டுக்கரும் 8 (7) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய நிக்கோலஸ் பூரான் அரை சதமடித்தார்.

- Advertisement -

அதிரடி சதமடித்த பூரான்:
அவரது அதிரடியால் ஒவ்வொருவருக்கும் 10 ரன்களுக்கு மேல் குவித்த த்ரிபாங்கோ அணிக்கு முக்கிய நேரத்தில் வந்த ஆண்ட்ரே ரசல் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடி 5வது விக்கெட்டுக்கு 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 1 பவுண்டரி 4 சிக்சருடன் 39 (22) ரன்கள் குவித்து அவுட்டானார். ஆனால் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் அடம் பிடித்த நிக்கோலஸ் பூரான் கெயில் மேயர்ஸ் வீசிய கடைசி ஓவரில் 86* ரன்களில் இருந்ததால் சதமடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அப்போது முதல் பந்திலேயே லெஃக் சைடு திசையில் அதிரடியான சிக்ஸர் பறக்க விட்ட அவர் அடுத்த பந்தில் மிட் விக்கெட் திசையில் சிக்சரை தெறிக்க விட்டார். அதே போல 3வது பந்தில் ரன் எடுக்கவில்லை என்றாலும் 4வது ஃபுல் டாஸ் பந்தில் பவுண்டரி அடித்த அவர் 100 ரன்களை தொட்டு சிபிஎல் தொடரில் தம்முடைய 2வது சதமடித்து தம்முடைய ஹெல்மெட் மற்றும் பேட்டை தூக்கி எறிந்து வெறித்தனமாக கூச்சலிட்டு கொண்டாடினார்.

- Advertisement -

அந்த வகையில் 5 பவுண்டரி 10 சிக்சரை 192.45 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்த அவர் 102* (53) ரன்கள் குவித்து ஃபினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் த்ரிபாங்கோ 208/6 ரன்கள் எடுக்க பார்படாஸ் சார்பில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 209 ரன்களை துரத்திய பார்படாஸ் அணிக்கு கெய்ல் மேயர்ஸ் அதிரடியாக 70 (45) ரன்கள் எடுத்த போதிலும் ரஹிம் கார்ன்வால் 4, எவன்ஸ் 20, கேப்டன் போவல் 9, ஜேசன் ஹோல்டர் 19 என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினர்.

இதையும் படிங்க: “ரன் மெஷின்” என்று கிண்டல் செய்த ரசிகர். தக்க பதிலடி கொடுத்து ரிப்ளை செய்த – சி.எஸ்.கே வீரர் துஷார் தேஷ்பாண்டே

அதனால் 20 ஓவர்களில் முடிந்தளவுக்கு போராடியும் 166/7 ரன்கள் மட்டுமே எடுத்து அந்த அணியை கட்டுப்படுத்தி 42 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற த்ரிபாங்கோ சார்பில் அதிகபட்சமாக சலாம்கேல் மற்றும் அகில் ஹொசைன் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி சதமடித்து முக்கிய பங்காற்றிய நிக்கோலஸ் பூரான் ஆட்டநாயகன் விருது வென்றார்.

Advertisement