“ரன் மெஷின்” என்று கிண்டல் செய்த ரசிகர். தக்க பதிலடி கொடுத்து ரிப்ளை செய்த – சி.எஸ்.கே வீரர் துஷார் தேஷ்பாண்டே

Tushar-Deshpande
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்து வரும் 28 வயதான துஷார் தேஷ்பாண்டே கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். இருப்பினும் இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த 2023-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அணியில் இருந்ததாலேயே இவர் தற்போது புகழின் வெளிச்சத்திற்கு வந்துள்ளார். நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக 15 போட்டியில் விளையாடிய அவர் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.

ஆனாலும் அவர் ஓவருக்கு 10 ரன்கள் மேல் விட்டுக் கொடுப்பது அனைவரது மத்தியிலும் கிண்டலை சந்தித்து வருகிறது. ஏனெனில் தோனியின் தலைமையில் பல்வேறு வீரர்கள் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் வேளையில் துஷார் தேஷ்பாண்டே பந்துவீச்சில் விக்கெட்டுகளை எடுத்தாலும் ரன்களை விட்டுக் கொடுப்பது அவர் மீது விமர்சனத்தை ஏற்படுத்துகிறது.

- Advertisement -

இதுவரை ஐபிஎல் தொடரில் 23 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதே வேளையில் ஓவருக்கு 10.13 என்கிற சராசரியில் ரன்களை வாரி வழங்குகிறார். இதன் காரணமாக சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பலரும் அவரை “ரன் மெஷின்” என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

பொதுவாக பேட்டிங்கில் தொடர்ச்சியாக ரன்களை குவிக்கும் வீரர்களையே “ரன் மெஷின்” என்று ரசிகர்கள் கூறிவரும் வேளையில் பந்து வீச்சிலும் அதிக அளவில் ரன்களை விட்டுக் கொடுக்கும் இவருக்கு “ரன் மெஷின்” என்று பெயரிட்டு சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் கிண்டல் செய்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் தன்னை “ரன் மெஷின்” என்று விமர்சிப்பவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ள துஷார் தேஷ்பாண்டே அதில் காட்டமாக சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் வெளியிட்ட அந்த பதிவில் : நீங்கள் மைதானத்தில் களமிறங்கி விளையாடும் தைரியம் இருந்தால் மட்டுமே கமெண்ட் செய்யுங்கள். நான் பந்தயம் வைக்கிறேன் உங்களால் பவுண்டரி லைனின் எல்லையை கூட தாண்ட முடியாது என தன் மீது உள்ள கேலி கிண்டல்களுக்கு காட்டமான முறையில் ரிப்ளை கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க : எல்லாரும் உங்கள மாதிரியே இருக்கணும்னு நினைக்காதீங்க, இந்தியா – பாக் போட்டி பற்றி கெளதம் கம்பீருக்கு – ஷாஹித் அப்ரிடி பதிலடி

அவரது இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. என்னதான் துஷார் தேஷ்பாண்டே ரன்களை வாரி வழங்கி இருந்தாலும் தோனியின் வழிகாட்டுதலின் கீழ் அற்புதமாக செயல்பட்ட அவர் குஜராத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாகவும் இருந்து இந்த தொடரில் சென்னை அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை எடுத்த பவுலர் என்ற பெருமையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement