எல்லாரும் உங்கள மாதிரியே இருக்கணும்னு நினைக்காதீங்க, இந்தியா – பாக் போட்டி பற்றி கெளதம் கம்பீருக்கு – ஷாஹித் அப்ரிடி பதிலடி

Shahid Afridi
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பரம எதிரிகள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் சூப்பர் 4 சுற்றுக்கு வந்துள்ள அந்த அணிகள் அடுத்ததாக செப்டம்பர் 10ஆம் தேதி இலங்கையின் கொழும்பு நகரில் மீண்டும் பலப்பரீட்சை நடத்த உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்ற அந்த லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு எதிர்பார்த்ததை போலவே சாகின் அப்ரிடிக்கு எதிராக ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் திண்டாட்டமான பேட்டிங்கை வெளிப்படுத்தி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் 66/4 என சரிந்த இந்திய அணியை நல்ல வேலையாக இசான் கிசான் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்து ஓரளவு காப்பாற்றினர். அதைத்தொடர்ந்து பாகிஸ்தான் சேசிங் செய்த போது மழை வந்ததால் ரத்து செய்யப்பட்ட போட்டியின் முடிவில் பாபர் அசாம் போன்ற எதிரணி வீரர்களுடன் ஒருவரோடு ஒருவராக நின்ற விராட் கோலி சிரித்த முகத்துடன் கை கொடுத்து நட்பாக பேசினார்.

- Advertisement -

அப்ரிடியின் பதிலடி:
அதை பார்த்த முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் தேசத்திற்காக விளையாடும் போது நட்பை பவுண்டரி எல்லைக்கு வெளியே வைத்துவிட்டு வரவேண்டும் என்று விராட் கோலியை கடுமையாக விமர்சித்தார். அதாவது நாட்டுக்காக ஆக்ரோசத்துடன் விளையாட வேண்டிய இந்திய வீரர்கள் இப்போதெல்லாம் பாகிஸ்தான் வீரர்களுடன் நட்புடன் பழகுவதால் அழுத்தமான சமயங்களில் சிறப்பாக செயல்பட வேண்டுமென்ற உத்வேகமின்றி செயல்படுவதற்காக கௌதம் கம்பீர் விமர்சித்தார்.

அதற்கேற்றார் போல் 2017 சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனல், 2021 டி20 உலகக்கோப்பை லீக் போன்ற முக்கியமான போட்டிகளில் பாகிஸ்தானிடம் அவமான தோல்வியில் சந்தித்த போதும் அந்நாட்டு வீரர்களுடன் விராட் கோலி போன்ற இந்திய வீரர்கள் சிரித்த முகத்துடன் கைப்பிடித்து கட்டிப்பிடித்து பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதனால் இப்போதெல்லாம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டிகள் நட்பு ரீதியாக நடைபெறும் போட்டிகளாக மாறி விட்டதாக கௌதம் கம்பீர் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் பல கோடி ரசிகர்கள் பின்பற்றும் வீரர்கள் போதுமே அடித்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கும் ஷாஹித் அப்ரிடி அவர்களும் மனிதர்கள் என்றும் களத்திற்கு வெளியே அவர்களுக்கும் வாழ்க்கை இருக்கிறது என்றும் கம்பீருக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தது பின்வருமாறு. “அது அவருடைய கருத்து. நான் வித்தியாசமாக சிந்திக்கிறேன். குறிப்பாக விளையாட்டு வீரர்களாக இருக்கும் நாங்கள் அதன் தூதர்களாகவும் இருக்கிறோம்”

இதையும் படிங்க: வீடியோ : அதே நீண்ட முடி, மிரட்டல், வேகம், ஆக்சன் – அச்சு அசல் சோயப் அக்தர் போல பந்து வீசும் ஓமன் பவுலர், ரசிகர்கள் ஆச்சர்யம்

“எங்களுக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்களும் இருக்கின்றார்கள். எனவே அன்பு மற்றும் மரியாதை ஆகியவற்றை எதிரணியிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற செய்தியை நாங்கள் அவர்களுக்கு ரசிகர்களுக்கு கொடுப்பது நல்ல விஷயமாகவே இருக்கும். நாம் களத்தில் ஆக்ரோஷம் இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நாட்டுக்காக விளையாடும் வீரர்களுக்கும் களத்திற்கு வெளியே ஒரு வாழ்க்கை இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement