திலக் வர்மாவை போல மும்பைக்கு கிடைத்த மற்றொரு இளம் புயல் – அதிரடி சிக்ஸரால் புதிய காரை நொறுக்கி மிரட்டல்

- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 9ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 54வது லீக் போட்டியில் பெங்களூருவை பந்தாடிய மும்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று புள்ளி பட்டியலில் 8வது இடத்திலிருந்து நேராக 3வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு டு பிளேஸிஸ் 65 (51) ரன்களும் கிளன் மேக்ஸ்வெல் 68 (33) ரன்களும் எடுத்த போதிலும் இதர வீரர்கள் கை கொடுக்கத் தவறியதால் 20 ஓவர்களில் 199/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை சார்பில் அதிகபட்சமாக ஜேசன் பேரன்ஃடாப் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அவை துரத்திய மும்பைக்கு பவர் பிளே ஓவர்களில் சரமாரியாக வெளுத்து வாங்கி 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த இசான் கிசான் 42 (21) ரன்களை எடுத்து அவுட்டாக மறுபுறம் தடுமாறிய கேப்டன் ரோகித் சர்மா 7 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் தமக்கே உரித்தான ஸ்டைலில் முதல் பந்திலிருந்தே சுமாராக பந்து வீசிய பெங்களூரு பவுலர்களுக்கு கருணை காட்டாமல் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கி அட்டகாசமாக பேட்டிங் செய்தார்.

- Advertisement -

மற்றொரு இளம் புயல்:
அதே வேகத்தில் எப்படி போட்டாலும் அதிரடியாக எதிர்கொண்ட அவர் 7 பவுண்டரி 6 சிக்ஸருடன் 83 (35) ரன்களை விளாசி வெற்றியை உறுதி செய்து அவுட்டானார். அவருக்கு கை கொடுத்த மற்றொரு இளம் வீரர் நேஹல் வதேரா தனது பங்கிற்கு அதிரடியாக விளையாடி 3வது விக்கெட்டுக்கு 140 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கடைசி வரை அவுட்டாகாமல் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 52* (34) ரன்கள் குவித்தார். அதனால் 16.3 ஓவரிலேயே இலக்கை எட்டி பிடித்து வென்ற மும்பையை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பந்து வீச்சில் சொதப்பிய பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக ஹசரங்கா மற்றும் விஜயகுமார் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

அப்படி விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் சூரியகுமார் யாதவ் பேட்டிங்கை பார்த்து வியந்த அனைவரும் பாராட்டுகளை மழையாக பொழிந்து வருகின்றனர். இருப்பினும் அவருடன் அசத்தலாக செயல்பட்ட இளம் வீரர் நேஹல் வதேரா 11வது ஓவரை வீசிய ஹஸரங்காவின் 4வது பந்தில் முழு பவரைக் கொடுத்து அதிரடியான சிக்சரை பறக்க விட்டார். முட்டி போட்டு நல்ல டைமிங் கொடுத்து அடித்ததால் அதிரடியான வேகத்தில் பறந்த அந்த பந்து மைதானத்தின் ஓரத்தில் விளம்பரத்துக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்பான்சர்ஷிப் காரை பதம் பார்த்தது.

- Advertisement -

குறிப்பாக அவர் அடித்த வேகத்தில் வந்த பந்து காரின் ஓட்டுனர் அமரும் பகுதி கதவின் கைப்பிடி பகுதியை நொறுக்கியது. அதைப் பார்த்த ரசிகர்கள் அதிரடியாக விளையாடும் அவரது திறமையையும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். இந்த சீசனில் பவுலிங் சுமாராக இருக்கும் நிலையில் பேட்டிங்கில் போராடி மும்பை வெற்றி பெறுவதற்கு இளம் வீரர் திலக் வர்மா முக்கிய காரணமாக இருந்து வருகிறார்.

கடந்த வருடம் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்த போதிலும் 397 ரன்கள் விளாசி நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்த அவர் இந்த வருடம் 9 போட்டியில் 274 ரன்களை எடுத்து மும்பையின் வருங்காலமாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். அவரை போலவே இடது கை பேட்ஸ்மேனாக இதுவரை களமிறங்கிய 6 இன்னிங்ஸில் 183 ரன்களை 147.58 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து அமர்க்களமாக செயல்பட்டு வரும் நேஹல் வதேரா மும்பையின் மற்றொரு இளம் வீரராக வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை நிரூபித்து வருகிறார்.

- Advertisement -

பஞ்சாப்பை சேர்ந்த 22 வயதான அவர் கடந்த ரஞ்சி கோப்பையில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் மும்பை அணிக்காக வெறும் 20 லட்சத்துக்கு வாங்கப்பட்டார். அதில் கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் சென்னைக்கு எதிரான கடந்த போட்டியில் கடினமான பிட்ச்சில் 64 (51) ரன்களை எடுத்து அசத்தினார்.

இதையும் படிங்க:IPL 2023 : இன்ஸ்டாவில் ஓயாத சண்டை, விராட் கோலியை பதிலுக்கு பழி வாங்கிய ஆப்கன் வீரர், கௌதம் கம்பீர் – ரசிகர்கள் அதிருப்தி

அந்த வகையில் திலக் வர்மா, நேஹல் வதேரா என மிடில் ஆர்டரில் வலு சேர்க்கும் இளம் அதிரடி பேட்ஸ்மேன்களால் கிடைத்துள்ளதால் மும்பை அணியின் வருங்காலம் பிரகாசமாக இருப்பதை நினைத்து அந்த அணி ரசிகர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

Advertisement