IPL 2023 : இன்ஸ்டாவில் ஓயாத சண்டை, விராட் கோலியை பதிலுக்கு பழி வாங்கிய ஆப்கன் வீரர், கௌதம் கம்பீர் – ரசிகர்கள் அதிருப்தி

Naveen Ul Haq
- Advertisement -

பரபரப்பான திருப்பங்களுடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 1ஆம் தேதி லக்னோவில் நடைபெற்ற போட்டியின் முடிவில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியுடன் இளம் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-ஹக் மோதியது பெரிய சர்ச்சையாக அமைந்தது. அந்த போட்டியில் கடைசி நேரத்தில் பேட்டிங் செய்த அவரை ஒரு பந்தில் வெள்ளை கோட்டுக்கு உள்ளே இருந்தும் முகமது சிராஜ் தேவையின்றி கோபத்துடன் ரன் அவுட் செய்ய முயற்சித்தார். அதனால் அதிருப்தியில் இருந்த அவருக்கும் விராட் கோலிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை அமித் மிஸ்ரா மற்றும் நடுவர் தடுத்த நிலையில் கை கொடுத்துக் கொள்ளும் போது மீண்டும் ஏற்பட்ட சண்டையை கிளன் மேக்ஸ்வெல் தடுத்தார்.

அதை பெவிலியினில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த கெளதம் கம்பீர் பயிற்சியாளராக இருந்து சண்டையை விலக்காமல் 2013இல் கொல்கத்தா அணியின் கேப்டனாக விராட் கோலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை போலவே 10 வருடங்கள் கழித்தும் பகையை மறக்காமல் நெஞ்சோடு நெஞ்சாக மோதும் அளவுக்கு சென்றது ரசிகர்களை அதிருப்தியடைய வைத்தது. அதை விட அந்தப் போட்டியின் முடிவில் கேஎல் ராகுல் சமாதானம் செய்ததால் பகையை மறந்த விராட் கோலி நட்பாக கையை நீட்டினார்.

- Advertisement -

இன்ஸ்டாவில் ஓயாத சண்டை:
ஆனால் நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக போற்றப்படும் அவர் பகையை மறந்து கை நீட்டிய போது பேசுவதற்கு எதுவுமில்லை என்ற வகையில் நவீன்-உல்-ஹக் திமிராக சென்றது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. அந்த நிகழ்வு நடந்து 10 நாட்களாகியும் அவர்களுக்கிடையான பகை இன்னும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் தொடர்கிறது. ஆம் போட்டி முடிந்த அடுத்த நாளே நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதற்கு தகுந்தவற்றை மீண்டும் பதிலடியாக கொடுப்பேன் என்று நவீன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

அத்துடன் மற்றவர்கள் நம்மை நடத்துவதைப் போல் அவர்களை நாம் நடத்த வேண்டுமென அடுத்த சில நாட்களில் பதிவிட்ட அவருக்கு “அப்படியே இருங்கள் யாருக்காகவும் மாறாதீர்கள்” என கௌதம் கம்பீர் பதிலளித்து ஊக்கப்படுத்தினார். அந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் குஜராத்துக்கு எதிரான போட்டியில் லக்னோ தோல்வியை சந்தித்தது. அதை கொண்டாடும் வகையில் சஹா அபாரமாக பேட்டிங் செய்ததையும் ரசித் கான் மிகச் சிறப்பாக கேட்ச் பிடித்ததையும் விராட் கோலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு பாராட்டினார்.

- Advertisement -

அந்த நிலையில் மும்பைக்கு எதிராக நேற்றைய போட்டியில் பெங்களூரு மோசமாக தோல்வியை சந்தித்தது. அந்த போட்டியை மாம்பழத்தை சுவைத்துக் கொண்டே பார்த்த நவீன்-உல்-ஹக் பெங்களூரு தோல்வியை சந்தித்த பின் 2வது ரவுண்டாக மாம்பழங்களை சாப்பிட்டு மிகவும் ருசியாக இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு பதிலடியும் கொண்டாட்டத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இதற்கும் விராட் கோலிக்கும் என்ன சம்பந்தம் என்று சிலர் கேட்கலாம். ஆனால் இந்தியாவில் பழங்களின் அரசன் (கிங்) எது என்று இணையத்தில் தேடினால் மாம்பழம் முதன்மையானதாக வரும்.

அப்படியே இந்திய கிரிக்கெட்டின் கிங் யார் என்று தேடினால் சந்தேகமின்றி விராட் கோலியின் பெயர் வரும். அதை வைத்து தான் மறைமுகமாக நவீன்-உல்-ஹக் விராட் கோலிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பெங்களூருவின் தோல்வியை மாம்பழத்தை சுவைத்து கொண்டாடியுள்ளார்.

- Advertisement -

அவரை விட ஒரு படி மேலே சென்ற கெளதம் கம்பீர் அந்த போட்டியின் முதல் ஓவரிலேயே விராட் கோலியை 1 (4) ரன்னில் அவுட்டாக்கிய ஜேசன் பேரன்ஃடாபை “என்ன ஒரு பிளேயர்” என்று கைதட்டி பாராட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறிப்பாக கடந்த போட்டி லக்னோ அணியின் வெற்றியை பறித்த சஹாவை “என்ன ஒரு பிளேயர்” என பாராட்டிய விராட் கோலிக்கு பதிலடியாக கௌதம் கம்பீர் இதை பதிவிட்டுள்ளதார்.

இதையும் படிங்க:MI vs RCB : அவரை மாதிரி விளையாடணும்னு ஆசையா இருக்கு. ஆனா ரொம்ப கஷ்டங்க – நேஹல் வதேரா ஓபன்டாக்

ஆனால் ஜென்டில்மேன் விளையாட்டான கிரிக்கெட்டில் களத்தில் வெற்றிக்காக போராடி ஒரு போட்டியில் சண்டை போட்டது தவறில்லை என்றாலும் 10 நாட்கள் கடந்தும் இவர்கள் பகையை மறக்காமல் வன்மத்துடன் இவ்வாறு இன்ஸ்டாகிராமில் மோதுவது ரசிகர்களை அதிருப்தியில் அனுப்பியுள்ளது. அதிலும் நவீன கிரிக்கெட்டின் நாயகனாக கருதப்படும் விராட் கோலியிடம் பெரிய அளவில் சாதிக்காத ஆப்கானிஸ்தான் வீரர் மோதுவது இந்திய ரசிகர்களை கடுப்பாகியுள்ளது.

Advertisement