MI vs RCB : அவரை மாதிரி விளையாடணும்னு ஆசையா இருக்கு. ஆனா ரொம்ப கஷ்டங்க – நேஹல் வதேரா ஓபன்டாக்

Nehal-Wadhera
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 54-வது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியானது 199 ரன்களை குவிக்கவே 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மிகப்பெரிய இலக்கு மும்பை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை எதிர்த்து விளையாடி மும்பை அணியானது துவக்கத்திலிருந்து அதிரடி காட்டியது.

RCB vs MI Josh hazlewood Nehal Wathera

இறுதியில் 16.3 ஓவர்களிலேயே மும்பை அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 200 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டிம் டேவிட் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோருக்கு முன்னதாகவே நான்காவது வீரராக களம் புகுந்த இளம் வீரர் நேஹல் வதேரா 34 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 52 ரன்கள் குவித்து மும்பை அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தான் விளையாடிய விதம் குறித்து பேசிய நேஹல் வதேரா கூறுகையில் பல்வேறு சுவாரஸ்யமான விடயங்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் : நான் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்ய வருவதை விரும்புகிறேன். ஏனெனில் இந்த சீசனில் ஆரம்பத்தில் நான் கீழ் வரிசையில் பேட்டிங் செய்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் எனக்கு டாப் ஆர்டரில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்ததும் அடுத்தடுத்து அரைசதங்களை அடித்துள்ளேன்.

Nehal Wadhera 1

அதிலும் குறிப்பாக இந்த அரை சதத்தோடு எனது அணி வெற்றி பெற்றதை நினைத்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சூரியகுமார் யாதவுடன் பேட்டிங் செய்யும்போது மிகவும் சிறப்பாக இருக்கிறது. அவர் எப்பொழுதுமே என்னை ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறார். அதோடு இந்த போட்டியில் நான் இறுதி வரை நின்று போட்டியை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தே விளையாடினேன். அந்த வகையில் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் எங்களது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றதில் மிகவும் மகிழ்ச்சி.

- Advertisement -

சில சமயங்களில் சூரியகுமார் யாதவ் போன்று சில ஷாட்களை விளையாட நான் ஆசைப்படுகிறேன். ஆனால் அவரைப் போன்று விளையாடுவது எளிதல்ல என்பதையும் புரிந்து கொண்டேன். நான் அவருடன் விளையாடும் போது அவர் என்னை சிறப்பாக விளையாடும் படி ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் நாங்கள் விளையாடிக் கொண்டிருக்கும்போது நாம் இதே போன்று விளையாடினால் நிச்சயம் 15 முதல் 16 ஓவர்களில் போட்டியை முன்கூட்டியே ஜெயித்து விடலாம் என்றும் என்னிடம் கூறினார்.

இதையும் படிங்க : MI vs RCB : நீங்க போட்ட ஸ்கெட்ச் எனக்கே தெரிஞ்சிச்சி. ஆனா நான் ஸ்பெஷல் பிளேயருங்க – சூரியகுமார் யாதவ் பேட்டி

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியின் போது நான் ஸ்கூப் ஷாட் விளையாடினேன். அதேபோன்று இந்த போட்டியில் விளையாட முடியவில்லை என்றாலும் சூரியகுமார் யாதவிடம் இருந்து அதுபோன்ற ஷாட்களை கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொள்வேன் என நேஹல் வதேரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement