MI vs RCB : நீங்க போட்ட ஸ்கெட்ச் எனக்கே தெரிஞ்சிச்சி. ஆனா நான் ஸ்பெஷல் பிளேயருங்க – சூரியகுமார் யாதவ் பேட்டி

SKY-and-Rohit
- Advertisement -

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 54-ஆவது லீக்காட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணியானது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முன்னேற்றத்தை கண்டுள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை அணியானது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

Nehal

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பெங்களூரு அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்தது. பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய மும்பை அணி 16.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 200 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது மும்பை அணி சார்பாக மூன்றாவது வீரராக களமிறங்கிய சூரியகுமார் யாதவ் 35 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 6 சிக்சர் என 83 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாகவே மும்பை அணி வெற்றி பெற்றதால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து தான் விளையாடிய விதம் குறித்து பேசிய சூரியகுமார் யாதவ் கூறுகையில் :

SKY 1

இந்த வெற்றி எங்கள் அணிக்கு தேவையான நேரத்தில் கிடைத்துள்ளது. இது போன்ற ஒரு சிறப்பான செயல்பாட்டை எங்களது சொந்த மைதானத்தில் வெளிப்படுத்தியதில் மிகவும் மகிழ்ச்சி. ஒரு அணியாக நாங்கள் இந்த போட்டியில் ஒரு நல்ல திட்டத்துடன் வந்தோம். அதேபோன்று நான் பேட்டிங் செய்யும்போது பெங்களூரு அணியின் பவுலர்கள் என்னை மைதானத்தின் பெரிய பகுதிகளில் அடிக்க வைக்க திட்டமிட்டனர்.

- Advertisement -

அதேபோன்று மைதானத்தின் பெரிய பகுதியை நோக்கி அடிக்கும்படியே பந்துவீசி வேகத்தையும் குறைத்தனர். ஆனால் அப்போது அதனை கணித்த நான் நேஹல் வதேராவிடம் சென்று அவர்கள் பந்தினை மெதுவாக வீசினால் நாம் இன்னும் பலமாக அடிக்கலாம். அதே போன்று பீல்டர்களின் இடைவெளியில் அடித்து விட்டு ரன்களை வேகமாக ஓடலாம் என்று அவர்களது திட்டத்திற்கு எதிரான எனது திட்டத்தை கூறினேன்.

இதையும் படிங்க : IPL 2023 : பாவம் அவரு, இது எப்படி அவுட்? ரோஹித்தை தவறான தீர்ப்பால் காலி செய்த அம்பயரை விளாசும் கைஃப், முனாப் படேல்

பயிற்சியின் போதும் நான் நிறைய இடைவெளிகளில் அடித்து பழகி கொள்வதால் போட்டியின் போதும் என்னால் பீல்டர்களுக்கு இடையில் பந்தினை அடிக்க முடிகிறது. என்னுடைய ஆட்டம் என்னுடைய பலம் எது என்பது எனக்கு தெரியும். அதை தவிர்த்து நான் வேறு எந்த மாற்றத்தையும் என் பேட்டிங்கில் மேற்கொள்ளவில்லை என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement