வீடியோ : காற்றில் பறந்து டிஎன்பிஎல் வரலாற்றின் மிகசிறந்த கேட்ச் பிடித்த முருகன் அஸ்வின் – வியந்த வர்ணனையாளர்கள்

- Advertisement -

தமிழகத்தில் நடைபெற்று வரும் டிஎன்பிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஜாம்பவனாக போற்றப்படும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையில் விளையாடி வரும் திண்டுக்கல் டிராகன்ஸ் இதுவரை பங்கேற்ற 2 போட்டிகளிலும் 2 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் ரன் ரேட் அடிப்படையில் 4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அசத்தி வருகிறது. குறிப்பாக ஜூன் 18ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 8வது லீக் போட்டியில் மதுரையை 7 விக்கெட் வித்யாசத்தில் தோற்கடித்த திண்டுக்கல் பங்கேற்ற 2 போட்டிகளிலும் 2வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

திண்டுக்கல்லில் இருக்கும் என்பிஆர் காலேஜ் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மதுரை ஆரம்ப முதலே தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 20 ஓவர்களில் 123 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கௌசிக் காந்தி 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 45 (34) ரன்களும் ஹரி நிஷாந்த் 24 (26) ரன்களும் எடுக்க திண்டுக்கல் சார்பில் அதிகபட்சமாக சரவணகுமார் மற்றும் சுபோத் பாத்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும் நம்பிக்கை நட்சத்திரம் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

- Advertisement -

தரமான கேட்ச்:
அதைத்தொடர்ந்து 124 ரன்களை துரத்திய திண்டுக்கல்லுக்கு சிவம் சிங் 9 (6) விமல் குமார் 6 (4) என தொடக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே குர்ஜப்நீத் சிங் வேகத்தில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி சென்றனர். அதனால் 16/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு அடுத்ததாக களமிறங்கிய எஸ் அருணும் தடுமாற்றமாகவே செயல்பட்டார். அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் அதிரடியாக விளையாட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்ட அவர் மீண்டும் குர்ஜப்நீத் சிங் வீசிய 3வது ஓவரின் 4வது பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்தார். ஆனாலும் சரியான டைமிங் கொடுக்க தவறியதால் மேலே சென்ற பந்து பவுண்டரியை நோக்கி சென்றது.

இருப்பினும் அதை பார்த்துக்கொண்டே வேகமாக ஓடிய தமிழக வீரர் முருகன் அஸ்வின் பந்தின் வேகத்திற்கு ஈடு கொடுத்து சரியான சமயத்தில் தாவி பறந்து டைவ் அடித்து அற்புதமான கேட்ச் பிடித்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. குறிப்பாக பவர் பிளே என்பதால் உள்வட்டத்திற்கு நின்று கொண்டிருந்த அவர் பேட்ஸ்மேன் அடித்ததுமே பந்தின் வேகத்திற்கு ஈடு கொடுத்து வேகமாக ஓடி வந்து சரியான சமயத்தில் சூப்பர்மேனாக தாவி அபாரமான கேட்ச் பிடித்து வெறித்தனமாக கொண்டாடினார்.

- Advertisement -

அதை பார்த்த வர்ணனையாளர்கள் இது 2016 முதல் நடைபெற்று வரும் டிஎன்பிஎல் வரலாற்றில் பிடிக்கப்பட்ட மிகச் சிறந்த கேட்ச் என்று மனதார பாராட்டினார்கள். அப்படி சிறப்பான கேட்ச் பிடித்ததால் 3 (5) ரன்களில் அருண் பெவிலியன் திருப்பினாலும் அடுத்ததாக வந்து 22* (22) ரன்கள் எடுத்த ஆதித்யா கணேஷ் உடன் ஜோடி சேர்ந்து அட்டகாசமாக பேட்டிங் செய்த மற்றொரு தமிழக நட்சத்திர வீரர் பாபா இந்திரஜித் கடைசி வரை அவுட்டாகாமல் 7 பவுண்டரி 4 சிக்சருடன் 78* (48) ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தார்.

அதனால் 14.1 ஓவரிலேயே 124/3 ரன்கள் எடுத்து திண்டுக்கல் சொந்த மண்ணில் சிறப்பான வெற்றி பெற்ற நிலையில் பெரிய இலக்கை நிர்ணயிக்க தவறி தோல்வியை சந்தித்த மதுரை சார்பில் அதிகபட்சமாக குர்ஜப்நீத் சிங் மட்டும் 3 விக்கெட்டுகளை எடுத்தார். இந்த வெற்றிக்கு பந்து வீச்சில் 4 ஓவரில் 1 மெய்டன் உட்பட 19 ரன்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றிய சுபோத் பாத்தி ஆட்டநாயகன் விருது வென்றார்.

இதையும் படிங்க:நரகத்துக்கு போக வேண்டிய இந்தியாவுக்கு பெரிய கையான பாகிஸ்தான் ஏன் போகணும்? ஜாவேத் மியாண்டட் மிரட்டல் விமர்சனம்

இதைத்தொடர்ந்து இன்று நடைபெறும் 9வது லீக் போட்டியில் கடந்த வருடம் மழையால் ஃபைனலில் கோப்பையை பகிர்ந்து கொண்ட நடப்பு சாம்பியன்கள் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் மற்றும் கோவை கிங்ஸ் ஆகிய அணிகள் மோதுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement