நரகத்துக்கு போக வேண்டிய இந்தியாவுக்கு பெரிய கையான பாகிஸ்தான் ஏன் போகணும்? ஜாவேத் மியாண்டட் விமர்சனம்

Javed Miandad
- Advertisement -

ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளாக திகழ்ந்து வரும் இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லை பிரச்சினை காரணமாக கடந்த 10 வருடங்களாக இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து விட்டு ஆசிய மற்றும் ஐசிசி உலக கோப்பைகளில் மட்டும் விளையாடி வருகின்றன. ஆனால் அந்த வரிசையில் வரும் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருக்கும் 2023 ஆசிய கோப்பையில் பாதுகாப்பு காரணங்களால் இந்தியா பங்கேற்காது என்று அறிவித்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அத்தொடரை பொதுவான இடத்தில் நடத்துவதற்கான அழுத்தம் கொடுப்போம் என்றும் தெரிவித்தார்.

ஆனால் ஆசிய கவுன்சில் தலைவராக இருக்கும் நீங்கள் தங்களிடம் கேட்காமல் இப்படி கூறியது ஏமாற்றத்தை கொடுப்பதாக தெரிவித்த பாகிஸ்தான் வாரியம் எங்கள் நாட்டுக்கு வராமல் போனால் அக்டோபரில் உங்கள் நாட்டில் நடைபெறும் 2023 உலக கோப்பையை நாங்களும் புறக்கணிப்போம் என்று அறிவித்தது. அப்போது முதலே இது பற்றி இரு நாடுகளுக்கிடையே அனல் பறந்த விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில் ஏற்கனவே உரிமையை கொடுத்து விட்ட காரணத்தால் பாகிஸ்தான் பங்கேற்கும் 4 லீக் போட்டிகள் மட்டும் அந்நாட்டில் நடத்துவதற்கு சமீபத்தில் அனுமதி கொடுத்த ஆசிய கவுன்சில் ஃபைனல் உட்பட இந்தியா பங்கேற்கும் எஞ்சிய 9 போட்டிகள் இலங்கையில் நடைபெறும் என்று அறிவித்தது.

- Advertisement -

பெரிய கை பாகிஸ்தான்:
அதனால் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்ததாக பார்க்கப்பட்டாலும் அக்டோபர் 15ஆம் அகமதாபாத் மைதானத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ள இந்தியாவுக்கு எதிரான போட்டியை வேறு மைதானத்திற்கு மாற்றாவிட்டால் உலகக் கோப்பையில் பங்கேற்க மாட்டோம் என்று பாகிஸ்தான் வாரிய தலைவர் நஜாம் சேதி அறிவித்துள்ளார். அது போக சுழலுக்கு சாதகமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசித் கான் போன்ற தரமான ஸ்பின்னர்களை கொண்ட மற்றொரு பரம எதிரி ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டால் தோற்றுவிடுவோம் என்று கருதும் அந்நாட்டு வாரியம் அப்போட்டியையும் வேறு மைதானத்திற்கு மாற்றுமாறு கோரிக்கை வைக்கிறது.

இதன் காரணமாக மீண்டும் இருநாட்டுக்குமிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கடைசி வரை ஆசிய கோப்பையில் பங்கேற்க தங்கள் நாட்டுக்கு வராத இந்தியாவுக்கு சென்று உலகக்கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் செல்லக்கூடாது என்று முன்னாள் வீரர் ஜாவேத் மியாண்தத் அதிரடியாக விமர்சித்துள்ளார். குறிப்பாக 2012, 2016 ஆகிய வருடங்களில் இந்தியாவுக்கு தங்களது அணி சென்ற நிலையில் தற்போது பாகிஸ்தானுக்கு அவர்கள் வரவேண்டியதே நியாயம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரை நடத்தி பணக்கார வாரியமாக இருந்தாலும் தரமான வீரர்களை உருவாக்கும் பாகிஸ்தான் அனைத்து வகையிலும் இந்தியாவை விட தரமான பெரிய அணி என்றும் அவர் அதிரடியாக பேசியுள்ளார்.

- Advertisement -

அதை விட தங்கள் நாட்டுக்கு வராமல் போனால் நரகத்தை சந்திக்க நேரிடும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன் எச்சரித்திருந்த அவர் மீண்டும் அதே வார்த்தைகளை பயன்படுத்தி இந்தியாவை மிரட்டும் வகையில் பேசியது பின்வருமாறு. “இந்தியாவில் 2012 மற்றும் 2016 ஆகிய வருடங்களில் நமது அணி விளையாடியது. எனவே தற்போது இங்கு வரவேண்டியது அவர்களுடைய கடமையாகும். ஒருவேளை நான் இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் நிலையில் இருந்தால் அது உலக கோப்பையாக இருந்தாலும் நிச்சயமாக இந்தியாவுக்கு செல்ல மாட்டேன்”

“ஏனெனில் நாம் அவர்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். ஆனால் இந்தியா தான் எந்த பதிலும் சொல்வதில்லை. இங்கே தரமான வீரர்களை இன்னும் உருவாக்குவதால் பாகிஸ்தான் கிரிக்கெட் மிகவும் பெரியது. எனவே இந்தியா நரகத்திற்கு செல்லலாம். அத்துடன் ஒருவேளை நாம் இந்தியாவுக்கு செல்லவில்லை என்றாலும் அது நம்மை எந்த விதத்திலும் பாதிக்கப் போவதில்லை. ஒருவர் தங்களுடைய உறவினரை தேர்ந்தெடுக்க முடியாது என்று நான் எப்போதும் சொல்வேன். மாறாக நீங்கள் ஒருவருக்கொருவர் நட்பாக இருக்க வேண்டும்”

இதையும் படிங்க:உள்ளூர் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட்டின் காலில் விழுந்த ரசிகர். எல்லாத்துக்கும் காரணம் சி.எஸ்.கே தான் – சுவாரசிய சம்பவம்

“மேலும் இரு நாட்டுக்குமிடையே இருக்கும் தவறான புரிதல்கள் மற்றும் பதற்றங்களை நீக்கி மிகவும் நெருக்கமாக பழக வைக்கும் சக்தி கிரிக்கெட்டுக்கு இருக்கிறது என்று நான் சொல்வேன். இருப்பினும் தற்போது மீண்டும் பாகிஸ்தானில் ஆசிய கோப்பையில் பங்கேற்க இந்தியா தங்களுடைய அணியை அனுப்ப முடியாது என்று அறிவித்துள்ளது. எனவே நாமும் அதற்கு எதிராக வலுவாக நிற்கும் நேரம் வந்துள்ளது” என்று கூறினார்.

Advertisement