ரவீந்திர ஜடேஜாவின் அட்டகாசமான கேட்ச்சால் அறிமுக போட்டியில் முதல் விக்கெட்டை எடுத்த முகேஷ் குமார் – வெ.இ திணறல்

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா தங்களை உலகின் நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்தது. அடுத்ததாக வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா விளையாடும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜூலை 27ஆம் தேதி துவங்கியது. உலகக் கோப்பைக்கு தேவையான வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான இறுதி கட்ட வேலைகள் இத்தொடரில் துவங்குவதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அந்த நிலைமையில் பார்படாஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இந்திய அணியில் முகமது சிராஜ் பணிச்சுமை காரணமாக ஓய்வெடுக்க சென்ற நிலையில் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்றார். மேலும் உம்ரான் மாலிக், ஷார்துல் தாகூர் போன்ற இளம் வீரர்கள் வாய்ப்பு பெற்ற நிலையில் விக்கெட் கீப்பராக இஷான் கிசான் தேர்வு செய்யப்பட்டு சஞ்சு சாம்சன் கழற்றி விடப்பட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

- Advertisement -

முதல் விக்கெட்:
அதை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆரம்பத்திலேயே தடுமாறிய அதிரடி வீரர் கெயில் மேயர்ஸ் 2 (9) ரன்களில் ஹர்திக் பாண்டியா வேகத்தில் கேப்டன் ரோகித் சர்மாவிடம் சிக்ஸர் அடிக்க முயற்சித்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் வந்த இளம் வீரர் அலிக் அதனேஷ் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி 3 பவுண்டரி 1 சிக்சருடன் 22 (18) ரன்கள் எடுத்து அதிரடியை துவங்கினார். ஆனால் 8வது ஓவரை வீசிய முகேஷ் குமார் ஸ்விங் செய்வதற்காக 5வது பந்தை அவுட் சைடு ஆஃப் ஸ்டம்ப்க்கு நன்றாக வெளியே வைத்து வீசினார்.

அதை தவறாக கணித்த அதனேஷ் அதிரடியாக அடித்த பவுண்டரியை பாயிண்ட் திசையில் தடுத்த ரவீந்திர ஜடேஜா தாவி சூப்பர் கேட்ச் பிடித்ததால் முகேஷ் குமார் ஒருநாள் போட்டிகளில் தம்முடைய முதல் எடுத்து கொண்டாடினார். பெங்காலை சேர்ந்த அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் கடந்த 2015 முதல் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்ததால் ஒரு வழியாக இந்த சுற்றுப்பயணத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

- Advertisement -

அதில் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்திய அவர் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தன்னுடைய முதல் விக்கெட்டை எடுத்து இந்தியாவுக்காக கால் தடம் பதித்துள்ளார். அந்த நிலைமையில் அடுத்த ஓவரிலேயே மறுபுறம் தடுமாறிய மற்றொரு தொடக்க வீரர் ப்ரெண்டன் கிங் 17 (23) ரன்களில் தாக்கூர் வேகத்தில் கிளீன் போல்ட்டானதால் 45/3 என ஆரம்பத்திலேயே வெஸ்ட் இண்டீஸ் தடுமாற்றமான துவக்கத்தை பெற்றது.

அப்போது 2 வருடங்கள் கழித்து தேர்வு செய்யப்பட்ட நட்சத்திர வீரர் சிம்ரோன் ஹெட்மயர் நங்கூரமாக விளையாட முயற்சித்த போதிலும் 11 (19) ரன்களில் ரவீந்திர ஜடேஜா சுழலில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க அடுத்ததாக வந்த இளம் வீரர் ரோவ்மன் போவலும் அவருடைய சுழலிலேயே 4 (4) ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தார்.

இதையும் படிங்க:IND vs WI : அவர் என்ன பாவம் செஞ்சாரு? எப்போ தான் சான்ஸ் கொடுப்பிங்க, மீண்டும் ஒதுக்கப்பட்ட முக்கிய வீரர் – ரசிகர்கள் கோபம்

போதாக்குறைக்கு அடுத்து வந்த ரோமாரியா செபார்ட் 0, டாமினேக் ட்ரெக்ஸ் 3 என லோயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் சற்று முன் வரை 103/7 என தடுமாறும் வெஸ்ட் இண்டீஸ் அணியை காப்பாற்ற கேப்டன் சாய் ஹோப் 34* ரன்களுடன் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement