IND vs WI : அவர் என்ன பாவம் செஞ்சாரு? எப்போ தான் சான்ஸ் கொடுப்பிங்க, மீண்டும் ஒதுக்கப்பட்ட முக்கிய வீரர் – ரசிகர்கள் கோபம்

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1 – 0 என்ற கணக்கில் வென்ற இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியது. அதைத்தொடர்ந்து வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா விளையாடுகிறது. உலக கோப்பைக்கு தயாராகும் பயணம் என்பதால் ஹர்திக் பாண்டியா, சஹால் உள்ளிட்ட மேலும் சில முக்கிய வீரர்கள் இந்த தொடரில் இந்திய அணியில் இணைந்தனர்.

மேலும் உலகக்கோப்பையில் விளையாடும் வீரர்களை இந்த தொடரிலிருந்து இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்யும் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த நிலைமையில் இந்த தொடரின் முதல் போட்டி ஜூலை 27ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 7:00 மணிக்கு பார்படாஸ் நகரில் இருக்கும் கென்சிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். மேலும் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் அறிமுகமாக களமிறங்குவதாகவும் அவர் அறிவித்தார்.

- Advertisement -

ரசிகர்கள் கோபம்:
அத்துடன் பணிச்சுமையை நிர்வகிப்பதற்காக முகமது சிராஜ் விலகிய நிலையில் உம்ரான் மாலிக், ஷார்துல் தாகூர் ஆகியோர் தேர்வானார்கள். ஆனால் இந்த அணியில் விக்கெட் கீப்பராக இஷான் கிசான் தேர்வு செய்யப்பட்டு சஞ்சு சாம்சன் மீண்டும் கழற்றி விடப்பட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. ஏனெனில் 2015இல் அறிமுகமாகி 2வது போட்டியை 2019இல் விளையாடிய கொடுமையை சந்தித்த அவர் 2021 வரை குப்பையை போல் பயன்படுத்தப்பட்டு வந்தார்.

இருப்பினும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட சஞ்சு சாம்சன் 2022 அயர்லாந்து டி20 தொடரில் முதல் முறையாக அரை சதமடித்து ஜிம்பாப்வே ஒருநாள் தொடரில் ஆட்டநாயகன் விருது வென்று சிறப்பாகவே செயல்பட்டார். அதன் காரணமாக ஒரு வழியாக நிரந்தர வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் கடந்த டிசம்பரில் வங்கதேசம் மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரிலும் ஜனவரி, பிப்ரவரியில் சொந்த மண்ணில் இலங்கை, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடர்களிலும் மனசாட்சின்றி கழற்றி விடப்பட்ட அவருக்கு பதிலாக சுமாராக செயல்பட்ட கேஎல் ராகுல் வாய்ப்பு பெற்றார்.

- Advertisement -

ஆனால் தற்போது கேஎல் ராகுல் மற்றும் ரிசப் பண்ட் ஆகிய இருவருமே காயமடைந்ததால் குறைந்தபட்சம் இந்த தொடரில் சஞ்சு சாம்சன் வாய்ப்பு பெறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனாலும் 2011 உலக கோப்பையில் கௌதம் கம்பீர், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா போன்ற இடதுகை பேட்ஸ்மேன்கள் வெற்றியில் பங்காற்றிய நிலையில் தற்போதைய அணியில் ரோஹித் முதல் பாண்டியா வரை டாப் 6 பேட்ஸ்மேன்கள் வலது கை வீரர்களாகவே இருக்கின்றனர்.

அதனால் சமீபத்திய போட்டிகளில் சுமாராக செயல்பட்டும் இடதுகை வீரராக இருக்கும் இசான் கிசான் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விக்கெட் கீப்பராக விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். அது ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தாலும் தன்னுடைய கடைசி 3 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோல்டன் டக் அவுட்டான சூரியகுமார் யாதவுக்கு மீண்டும் இத்தொடரில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அயர்லாந்து டி20 தொடரிலாவது பும்ரா கம்பேக் கொடுப்பாரா? கேப்டன் ரோஹித் சர்மா கொடுத்த அப்டேட் இதோ

ஆனால் தம்முடைய கடைசி 3 போட்டியில் முறையே 86*, 30*, 36 ரன்களை எடுத்த சஞ்சு சாம்சன் முழுமையான தகுதியை பெற்றிருந்தும் பேட்ஸ்மேனாக கூட விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதே ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது. அதனால் இப்படியே தட்டிக் கழித்தால் எப்போது தான் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் அவர் என்ன தான் பாவம் செய்தார் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை விமர்சித்து வருகின்றனர்.

Advertisement