ரசிகனை போல ஆட்டோகிராப் வாங்கிய தமிழ் பட இயக்குனர் – தமிழ் ரசிகரின் கோரிக்கையை நிறைவேற்றிய தல தோனி

- Advertisement -

நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி இந்தியாவுக்கு 3 விதமான உலக கோப்பைகளை வென்று கொடுத்த மகத்தான கேப்டனாகவும் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாகவும் ஃபினிஷராகவும் போற்றப்படுகிறார். அதே போல கடந்த 2008 முதல் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் மிகச் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்து வரும் அவர் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார். அதில் இந்த வருடம் 41 வயதிலும் முழங்கால் வலியுடன் தொடர்ந்து விளையாடிய அவர் கடைசி நேரங்களில் வெற்றியை தீர்மானிக்கும் கணிசமான ரன்களை எடுத்து இவர்கள் எங்கே வெல்லப் போகிறார்கள் என்று அனைவரும் நினைத்த சென்னையை சிறப்பாக வழி நடத்தி 5வது கோப்பையை வென்று கொடுத்து வெற்றிகரமான அணியாக ஜொலிக்க வைத்துள்ளார்.

அப்படி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்தாலும் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக தங்களுடைய அணியை சிறப்பாக வழி நடத்தி நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ள அவரை சென்னை மற்றும் தமிழக ரசிகர்கள் தல என்றழைத்து கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக அவர் பேட்டிங் செய்வதை பார்க்க வேண்டும் என்பதற்காக ரவீந்திர ஜடேஜாவை அவுட்டாகுமாறு பேனரில் எழுதி கோரிக்கை வைக்கும் அளவுக்கு சென்னை ரசிகர்கள் கண்மூடித்தனமான அன்பை வைத்துள்ளார்கள் என்று சொல்லலாம்.

- Advertisement -

ஸ்டைலாக தல தோனி:
மேலும் இந்த சீசனில் சேப்பாக்கத்தில் களமிறங்கிய போதெல்லாம் மெரினாவுக்கு கேட்கும் அளவுக்கு ஸ்மார்ட் வாட்ச்சில் 100 டெசிபல் சத்தத்தை மிஞ்சி கூச்சலிட்டு அவருக்கு தமிழக ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை மறக்க முடியாது. அப்படி தன் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் ரசிகர்களை எப்போதுமே மதிக்கும் தோனி சென்னை தம்முடைய 2வது வீடு என்றும் தன்னுடைய கேரியரின் கடைசி போட்டி தமிழக மண்ணில் தான் நடைபெறும் என்று ஏற்கனவே கூறியுள்ளார்.

அந்த நிலையில் தோனி என்டர்டைன்மென்ட் எனும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை வைத்துள்ள அவர் தம்முடைய கம்பெனியின் முதல் படத்தையே தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டு எடுத்துள்ளார். லெட்ஸ் கெட் மேரீடு எனும் பெயரில் தயாராகியுள்ள அந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக தன்னுடைய மனைவியுடன் வந்திருந்த தோனி காமெடி நடிகர் யோகி பாபுவை சென்னை அணியில் சேர்ப்பது முதல் தீபக் சஹர் போதையைப் போன்றவர் என்று கலாய்த்தது வரை கலகலப்பாக பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது.

- Advertisement -

அந்த வரிசையில் விழா முடிவில் தோனியை சந்தித்த பிரபல தமிழ் பட இயக்குனர் விக்னேஷ் சிவன் அவருக்கு முன்பாக அன்பான மண்டியிட்டு ஆசீர்வாதம் வாங்கி தம்முடைய நெஞ்சில் ஆட்டோகிராப் போடுமாறு கேட்டுக் கொண்டார். அந்த கோரிக்கையை ஏற்ற தோனி தம்முடைய வாழ்த்து செய்தியுடன் அவருடைய நெஞ்சு பகுதியில் ஆட்டோகிராப் வழங்கி கை கொடுத்து வாழ்த்தினார். அப்போது அவருடைய கையை முத்தமிட்ட விக்னேஷ் சிவன் “நான் தல ரசிகன்” என்பதை நிரூப்பிக்கும் வகையில் அன்பான ரியாக்சன் கொடுத்தது தோனியை நெகிழ்ச்சியுடன் சிரிக்க வைத்தது.

அப்படி கோலாகலமாக நிறைவு பெற்ற அந்த விழாவை முடித்துக் கொண்டு ஊருக்கு திரும்பும் போது 2 தமிழக ரசிகர்கள் தோனியை பார்த்து புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பியுள்ளனர். அவர்களுடைய கோரிக்கையும் ஏற்ற தோனி புகைப்படம் எடுப்பதற்காக நின்ற போது அருகில் நின்ற ஒரு ரசிகர் பிரபல தமிழ் நடிகர் பிரேம்ஜி செய்வது போல கையை காட்டி போஸ் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். அதையும் ஏற்றுக்கொண்ட தோனி சற்று யோசிக்காமல் உடனடியாக அதே போலவே கைகாட்டியதும் அந்த 2 ரசிகர்களும் மிகவும் மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இதையும் படிங்க:IND vs WI : தனது அறிமுகப்போட்டியையே அசத்தலாக மாற்ற யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு காத்திருக்கும் – பொன்னான வாய்ப்பு

அது போக காரில் ஊருக்கு திரும்பும் போதும் அதே போல புகைப்படம் எடுத்துக்கொண்ட ரசிகர்களில் ஒருவரின் முதுகிலும் தோனி ஆட்டோகிராப் போட்டு பாசத்தை வெளிப்படுத்தியவாறு அங்கிருந்து கிளம்பினார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாவதுடன் தமிழக ரசிகர்கள் மீது அவர் எந்தளவுக்கு அன்பை வைத்திருக்கிறார் என்பதை காட்டுவதாக அமைவது குறிப்பிடத்தக்கது.

Advertisement